International Female Orgasm Day 2022: இன்பத்தில் சம உரிமை… பெண்களுக்கான உச்சக்கட்டம்.. அதற்கென்று ஒரு தினம்?!
பெண் பாலுறவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதைச் சுற்றியுள்ள களங்கம் மற்றும் தடைகளை குறைக்கவும், கவுன்சில்மேன் அரிமேடியோ டான்டாஸ் அதன் முனிசிபல் சட்டத்தை இயற்றியபோது உருவாக்கப்பட்டது.
ஆகஸ்ட் 8, சர்வதேச பெண்கள் ஆர்கஸம் தினமாக நினைவுகூறப்படுகிறது. இது ஒரு பெண்ணின் பாலியல் இன்பத்திற்கான உரிமையைக் குறிக்கும் நாள்.
சர்வதேச பெண்களுக்கான இன்ப உச்சகட்ட தினம்
பிரேசிலில் உள்ள Esperantina நகரத்தைச் சேர்ந்த கவுன்சிலர் ஜோஸ் அரிமேடியா டான்டாஸ் லாசெர்டா, பியாவ்யின் ஃபெடரல் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், அப்பகுதியைச் சேர்ந்த 28% பெண்களை ஆர்கஸம் அடைவதில்லை என்று தெரியவந்தது. இந்த ஆய்வானது ஒரு தீவிரமான பொது சுகாதாரப் பிரச்சினையை நிரூபிப்பதாக அவர் கருதினார் மற்றும் பெண்களின் இன்பத்திற்கான உரிமைக்காக வாதிடும் சட்டத்தை ஊக்குவிக்க முடிவு செய்தார். இம்முயற்சியில், ஆகஸ்ட் 8-ம் தேதி பெண்ணின் உச்சக்கட்டத்தை கொண்டாடும் நாளாக அர்ப்பணிக்க முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சர்வதேச பெண்கள் ஆர்கஸம் டே முதன்முதலில் ஆகஸ்ட் 8, 2007 அன்று பிரேசிலில் உள்ள எஸ்பரண்டினாவில் கொண்டாடப்பட்டது.
எதற்காக உருவாக்கப்பட்டது?
பெண் பாலுறவு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதைச் சுற்றியுள்ள களங்கம் மற்றும் தடைகளை குறைக்கவும், அத்துடன் பெண்களுக்கு உடலுறவில் சம அளவு ஆர்கஸம் கிடைக்க செய்வதற்கான விழிப்புணர்வை உறவுகொள்பவர்களிடம் கொண்டு சேர்க்கவும், கவுன்சில்மேன் அரிமேடியோ டான்டாஸ் அதன் முனிசிபல் சட்டத்தை இயற்றியபோது உருவாக்கப்பட்டது.
ஏன் கொண்டாட வேண்டும்?
பெண்களுக்கான ஆர்கஸம் குறித்து பேசுவதற்கே பல நாடுகளில் தடை விதிக்க பட்டிருப்பதால், இதற்காக ஒரு நாளை சிறப்பிப்பது மிகவும் அவசியமானதாகும். இந்த நாளின் நோக்கம் பெண்கள் தங்கள் உடலை அறிந்து, ஆராய்ந்து முக்கியத்துவத்தை தெரிந்துகொள்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், அவர்கள் விரும்பும் விஷயங்களை பிறர் புரிந்துகொள்வதும், அவர்களுக்கு எது மகிழ்ச்சி அளிக்கிறது அல்லது அவர்களுக்கு எது பிடிக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்வதும் ஆகும்.
பெண்கள் ஆர்கஸத்திற்கு எது அவசியம்
"ஆர்கஸம் அடைவதற்கு உடலுறவு கொள்வது மட்டும் முக்கியமல்ல. பெண்களின் ஆர்கஸம் என்பது பொதுவாக பெண்ணுறுப்பு அல்லது கிளிட்டோரல் என்று மட்டுமே நம்பப்படுகிறது. உடலின் வேறு சில பகுதிகளையும் தூண்டுவதன் மூலம் ஆர்கஸம் அடைய முடியும்" ,என்று பாலினவியல் நிபுணர் எலியா மார்டினெஸ் ரோடர்டே தெரிவித்தார். இன்பத்தைத் தருவதோடு மட்டுமல்லாமல், இது சக்தி வாய்ந்த ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.
என்னென்ன நன்மைகள்?
சமீபத்தில், லண்டனைச் சேர்ந்த சிகிச்சை நிபுணர் மரிசா பீர், இங்கிலாந்தில் உள்ள தேசிய சுகாதார மையங்கள், வைப்ரேட்டர்களை பெண்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்று கருதுவதாகக் கூறினார். ஆர்கஸம் அடைவதன் சில நன்மைகள் என்னவென்றால், ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும், ஆக்ஸிடாஸின் போன்ற ஹார்மோன்களின் வெளியீட்டால் உடல் வலி நீங்கும், தோல் தெளிவாகவும், தூய்மையானதாகவும் மாறும். நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், மன ஆரோக்கியம் சிறப்பாகும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்