International Daughters' Day 2023: "கோயில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு? உனது புன்னகை போதுமடி" - மகள்கள் தின வாழ்த்துகள் இங்கே!
சர்வதேச மகள்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் நான்காவது ஞாயிறு அன்று தேசிய மகள்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆம், இன்று. எல்லாருக்கும் மகள் என்றால் மகாலெட்சுமி, வரம் என்று பேசும் அளவுக்கு அவர்கள் வாழ்தலுக்கான அர்த்தத்தை அளிக்கிறோமா என்பது கேள்வி. இருந்தாலும் சமூக கட்டமைப்பின் சாபக்கேடு. குழந்தைகளில் ஆண் - பெண் இருவமே சமம் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த தினத்தின் நோக்கம்.
ஏன் கொண்டாடுப்படுகிறது?
குழந்தைகளை கொண்டாட காரணம் தேவையில்லை. இருப்பினும் பல்வேறு நாடுகள் பெண் குழந்தை என்றால் சுமையாக கருதும் வழக்கம் உண்டு. குறிப்பாக இந்தியாவில். இந்த நாட்டில் பாரத மாதவும் அவர்களின் குழந்தைகளையும் புகழ்ந்து புனிதப்படுத்து அளவுக்கு அவர்களுக்கான வாழ்வுரிமைகள் இருக்காது. நிற்க. ஆண்- பெண் குழந்தைகளின் சம உரிமையை நிலை நாட்டும் முன்னெடுப்புதான் இது. பெண் குழந்தைகள் சுமை இல்லை என்பதை அனைவரும் உணர வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த நாளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. வரதட்சணை கொடுமை, பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகள் உள்ளிட்டவை இல்லாமல் பாதுகாப்பான ஒரு இடத்தை பெண் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதே இந்த நாளில் அனைவரும் உறுயேற்க வேண்டியதாகும்.
அதோடு பெற்றோர்கள் தங்கள் மகள்களுடன் ஆனந்தமாக இந்த நாளை கொண்டாடலாம். பெற்றோர்கள் தங்கள் மகள்களை மதிக்கவும் பாராட்டவும் ஊக்குவிக்கிறது இந்த நாள். இந்தியாவின் பல பகுதிகளில், பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தையே இன்னும் விரும்பப்படுவதாக கூறப்படுகிறது. பிறக்கும் குழந்தை பெண்ணாக இருக்கும் போது சில பெற்றோர்கள் வருத்தப்படுவது இன்னும் நீடிக்கிறது எனலாம். அது மாற வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சமத்துவத்தை மேம்படுத்தவும் ஒரு நாள் பெண் குழந்தைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இளமைப் பருவத்தை வித்தியாசமாக இருக்கும். பெண்கள் சுதந்திரமாக நடமாடும் திறன் மற்றும் வேலை, உறவுகள், கல்வி மற்றும் திருமணம் தொடர்பான முடிவுகளில் பெரும்பாலும் கடும் கடுப்பாடுகளை எதிர்கொள்கின்றனர். ஆண் குழந்தைகளுக்கும் கட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. பொதுவாக பார்க்கும்போது பெண்களை விட குறைவு என்பதே நிதர்சனம்.
பாலின பாகுபாடு மற்றும் சமூக விதிமுறைகள் காரணமாக, சிறுமிகள் குழந்தை திருமணம், மோசமான கல்வி மற்றும் சுகாதாரம், சுரண்டல், பாலியல் துஷ்பிரயோகம், குழந்தை தொழிலாளர், டீன் ஏஜ் கர்ப்பம் மற்றும் வன்முறை போன்றவற்றுக்கு ஆளாகிறார்கள். பெண் குழந்தைகளை பெண்களை சக உயிராக மதிக்கும் வரை இந்த விசயங்கள் மாறாது.
வாழ்த்துகள்
என் அன்பு மகளே.. உன் வாழ்வை நீ விரும்பியபடி வாழ நாங்கள் என்றும் உறுதுணையாக இருப்போம். ஹேப்பி டே..
பெருங்காட்டில் நீ பறந்து திரிய வேண்டும் என்று நினைத்தே உன்னை கையில் ஏந்தினோம். இங்குள்ள சில இன்னல்களில் சிக்கி நீ முதன் முதலாய் பறக்க விரும்பியதை கவனிக்க தவறிவிட்டோம். காலமாகிவிட்டத்துதான். இருந்தாலும் இப்போதும் நீ பறக்கலாம். கூடடையும்போது முத்தத்துடன் வரவேற்க நாங்கள் இருப்போம்.
"என் அன்பு மகளே, நீ என் வாழ்வின் சூரிய ஒளி. இனிய மகள்கள் தின வாழ்த்துக்கள்! உன் புன்னகையைப் போல் உன் நாட்களும் பிரகாசிக்கட்டும்”
“இந்த சிறப்பு நாளில் உங்கள் சாதனைகள் மற்றும் கனவுகளைக் கொண்டாடுகிறோம். மகள்கள் தின வாழ்த்துக்கள்!”
"நீங்கள் எங்கள் பெருமை மற்றும் மகிழ்ச்சி. இனிய மகள்கள் தின வாழ்த்துக்கள், அன்பே!"
“எங்கள் சிறப்பு மகளே, இன்று செல்லமாக இருப்பதை அனுபவிக்கவும். மகள்கள் தின வாழ்த்துக்கள்!”
"மகிழ்ச்சியும் வெற்றியும் நிறைந்த வாழ்க்கை இங்கே. மகள்கள் தின வாழ்த்துக்கள்!”
"உங்கள் தனித்துவத்தைத் தழுவுங்கள், ஏனென்றால் அது உங்களை அசாதாரணமாக்குகிறது. மகள்கள் தின வாழ்த்துக்கள்!”
"நாங்கள் உங்களுக்கு வழங்கக்கூடிய சிறந்த பரிசு எங்கள் நேரம். இன்றைய நாளை மறக்கமுடியாததாக ஆக்குவோம். மகள்கள் தின வாழ்த்துக்கள்!”
“உன்னை எங்கள் மகள் என்று அழைப்பதில் பெருமை அடைகிறேன். மகள்கள் தின வாழ்த்துக்கள்!”