மேலும் அறிய

Kitchen Tips: மழைக்காலத்தில் அரிசியில் அதிகரிக்கும் வண்டுகள்... வராமல் தடுப்பது எப்படி?

அரிசிப் பாத்திரத்தை அடிக்கடி திறப்பது அதில் ஈரப்பதத்தை உருவாக்கி பூச்சிகளும் புழுக்களும் வளர்வதற்கு உகந்த சூழலை ஏற்படுத்துகிறது. மேலும் அரிசிப் பாத்திரத்தின் மூடி இறுக்கமாக இருக்க வேண்டும்.

பொதுவாக நாம் பயன்படுத்தும் உணவுப்பொருட்களில் சில நேரங்களில் புழுக்கள் தொடங்கி பூச்சிகள் வரை இருக்கக்கூடும். சமையலறை மட்டுமல்லாமல் அங்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் கூட சுத்தமாக இருக்க வேண்டும் என்பது நம் அனைவரின் எண்ணமாக இருக்கும். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும்போது மன உளைச்சல் ஏற்படும். அப்படியாக பூச்சிகள் உள்ளிட்டவை உணவுப்பொருட்களை நெருங்காமல் தவிர்ப்பது எப்படி என்பது பற்றி நாம் இங்கு காணலாம். 

என்ன காரணம்?

மழைக்காலத்தில் அரிசியில் பூச்சிகளும் புழுக்களும் அதிகமாக தோன்றும். அதற்கு காரணம் வீட்டில் ஈரப்பதம் அதிகரிப்பதால் பூச்சிகள் சமையல் பாத்திரங்களில் மொய்க்கின்றன. அதேசமயம் அரிசிப் பாத்திரத்தை அடிக்கடி திறப்பது அதில் ஈரப்பதத்தை உருவாக்கி பூச்சிகளும் புழுக்களும் வளர்வதற்கு உகந்த சூழலை ஏற்படுத்துகிறது. மேலும் அரிசிப் பாத்திரத்தின் மூடி இறுக்கமாக மூடப்படாவிட்டால், மீதமுள்ள அரிசி அல்லது ஈரமான அரிசி, பூச்சிகள் இன்னும் வேகமாக வளரக் காரணமாக அமையும்.

அரிசியில் புழு, வண்டு, பூச்சிகள் போன்றவை இருந்தால் நாம் அதனை தூக்கி எறிந்து விடுகிறோம். இதனால் பணமும் வீணாகிறது. இதனை வீட்டில் சில விஷயங்களைப் பின்பற்றுவதன் மூலம் தடுக்கலாம் என சொல்லப்படுகிறது. 

அரிசியில் புழுக்கள் வராமல் தடுப்பது எப்படி?

அரிசி வைக்கும் பாத்திரத்தில் பிரியாணி இலைகளைப் போடுவதால் பூச்சிகள் நீங்குவது மட்டுமல்லாமல் அவை மீண்டும் வராமல் தடுக்கவும் முடியும். பிரியாணி இலைகளில் ஒரு கடுமையான, நெடியுள்ள மணம் இருப்பதுதான் இதற்கு காரணமாகும். ஒரு பாத்திரத்தில் 4 முதல் 5 காய்ந்த பிரியாணி இலைகளை போடலாம். இதனை ஒவ்வொரு 2-3 மாதங்களுக்கும் அவற்றை புதிய இலைகளால் மாற்ற வேண்டும். 

அதேபோல் அரிசி பாத்திரத்தில்  சில காய்ந்த வேப்ப இலைகளைச் சேர்க்க வேண்டும். வேப்ப இலைகளின் மணம் பூச்சிகளை விரட்ட உதவுகிறது. மேலும் அரிசி வைக்கும் பாத்திரத்தில் சிறிதளவு காய்ந்த மிளகாய்களை வைப்பது இதற்கு சிறந்த தீர்வாகும். எனினும் நீங்கள் எது செய்தாலும் அரிசி ஈரப்பதமில்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 

ஒருவேளை அரிசியில் புழுக்களைக் கண்டால் அதனை நன்றாக வெயிலில் பரப்பி உலர்த்த வேண்டும். அதை ஒரு சுத்தமான காற்று புகாத கொள்கலனில் சேமிக்கவும். பைகளில் வைத்தாலும் காற்று புகாமல் வைக்க வேண்டும். புதிய அரிசியை பழைய அரிசியுடன் ஒருபோதும் கலக்காதீர்கள். எத்தனை முறை முயன்றும் புழுக்கள் போகவில்லை என்றால், அந்த அரிசியைப் பயன்படுத்தாமல் இருப்பதே நல்லது. அரிசி மட்டுமில்லாமல் உணவுக்கு பயன்படுத்தும் பொருட்களை நன்கு கழுவி உபயோகியுங்கள். முடிந்தவரை ஈரப்பதம் இல்லாமல் சமையலறையை மழைக்காலத்தில் வைத்துக் கொள்ள பழகுங்கள். காற்றில் ஈரப்பதம் இருப்பது வேறு, நிலப்பரப்பில் ஈரப்பதம் இல்லாமல் இருப்பதே பூச்சிகளை குறைக்கும் வழியாகும். 

Advertisement

தலைப்பு செய்திகள்

Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget