மேலும் அறிய

வாழைப்பழ மில்க்‌ஷேக் உடலுக்கு நல்லதா? கெட்டதா? நிபுணர்களின் அட்வைஸ் இதுதான்

வாழைப்பழம், பால் இரண்டையும் சேர்த்து சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிப்பதை காணலாம்.

மில்க் ஷேக் மற்றும் ஸ்மூத்தி விரும்பாதவர்கள் இல்லை. பழங்களுடன் பால் சேர்த்து சாப்பிடுவது வழக்கமான ஒன்று. ஆனால், வாழைப்பழத்துடன் பால் சேர்த்து சாப்பிடுவது ஆரோக்கியமானது இல்லை என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதற்கான விளக்கத்தை இங்கே காணலாம்.

வாழைப்பழம், பால் இரண்டும் சேர்த்து சாப்பிடலாமா?

வாழைப்பழத்துடன் பால் சேர்த்து சாப்பிட ருசியாக இருந்தாலும் ஆனால் அது ஆரோக்கியமானது அல்ல. அது பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். வாழைப்பழம் மற்றும் பால் இரண்டையும் சாப்பிடுவது நல்லதா கெட்டதா? சிலர் வாழைப்பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிடுவது அவ்வளவு நல்லதல்ல என்கின்றனர்.

இது தொடர்பாக ஊட்டச்சத்து நிபுணர் ஹரிஷ் குமார் தெரிவிக்கையில், ”வாழைப்பழம், பால் இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுவதில்லை. அப்படி நீங்க சாப்பிட விரும்பினால், முதலில் பால் குடித்துவிட்டு, 20 நிமிடங்களுக்குப் பிறகு, வாழைப்பழம் சாப்பிடலாம்.  ஏனெனில், இது செரிமான செயல்திறனை பாதிக்கும். இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது தூக்கப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என்கிறார். 

சளி பிடிக்கும் வாய்ப்பு:

”உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்பவர்களும், ஜிம் செல்பவர்களுக்கும் பால், வாழைப்பழம் மில்க்‌ஷேக், ஸ்மூத்தி ஆகியவற்றை சாப்பிடுவது வழக்கம். இது தொடர்பாக ஊட்டச்சத்து நிபுணர் ஷில்பா அரோரா தெரிவிக்கையில்,”பால் உடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிட்டால் அது ஒவ்வாமை இருப்பவர்களுக்கு சுவாசக் கோளாறுகளுக்கு வழிவகுக்கும்; சளி ஏற்பட வாய்ப்புள்ளது.” என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

வாழைப்பழத்துடன் பால் சேர்த்து சாப்பிடுவது ஏன் நல்லது என ஆயுர்வேத மருத்துவம் சொல்வதை காணலாம்.  ஒவ்வொரு உணவுக்கும் அதன் சொந்த சுவை, செரிமானத்திற்கு பிறகான விளைவு, ஓர் உணவை சாப்பிடுவது அது உடலுக்கு குளிர்ச்சியை தருமா அல்லது வெப்பத்தை அதிகப்படுத்துமா என்பது ஒவ்வொரு உணவுக்கு வேறுப்படும். அதற்கு ஏற்றவாறு சாப்பிட வேண்டும். ஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படையில், பால் வாழைப்பழம் இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட கூடாது என்று பரிந்துரைக்கிறது. 

வசந்த்  லாட் எழுதிய ’The Complete Book of Ayurvedic Home Remedies, A Comprehensive Guide to the Ancient Healing of India’ என்ற புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, பழங்கள் மற்றும் பால் இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது நல்லது அல்ல என்று குறிப்பிட்டுள்ளது. 

தனித்தனியே சாப்பிடுவது நல்லது:

வாழைப்பழம், பால் இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது அதிலிருந்து டாக்ஸின்ஸ் வெளியாகி சைனஸ் உள்ளிட்ட பிரச்சனையை ஏற்படுத்திவிடும். இதனால் சளி, இருமல் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. செரிமான மண்டலத்தில் சீரற்ற நிலையை உருவாக்கிவிடும். 

எனவே, வாழைப்பழம், பால் இரண்டையும் சேர்த்து சாப்பிட கூடாது. இது உடல் நல பிரச்சனைக்கு ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பால், வாழைப்பத்தை தனித்தனியே சாப்பிட வேண்டும். 

பொறுப்புத்துறப்பு: இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Trump Vs Jaishankar: வாய்க்கு வந்ததை அடித்துவிடும் ட்ரம்ப்; வரி குறித்த கருத்துக்கு ஜெய்சங்கர் மறுப்பு
வாய்க்கு வந்ததை அடித்துவிடும் ட்ரம்ப்; வரி குறித்த கருத்துக்கு ஜெய்சங்கர் மறுப்பு
OPS on Alliance: கூட்டணியா.? அது வந்து... தங்கள் நிலைப்பாடு குறித்து ஓ. பன்னீர்செல்வம் சொன்னது என்ன.?
கூட்டணியா.? அது வந்து... தங்கள் நிலைப்பாடு குறித்து ஓ. பன்னீர்செல்வம் சொன்னது என்ன.?
AR Murugadas on Shanmugapandian: சண்முகபாண்டியனுக்கு அடித்த ஜாக்பாட்; இயக்குனர் முருகதாஸே சொல்லிட்டாரே.!!
சண்முகபாண்டியனுக்கு அடித்த ஜாக்பாட்; இயக்குனர் முருகதாஸே சொல்லிட்டாரே.!!
Trump Vs Apple: நண்பன்னு சொல்லி இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ட்ரம்ப்; இப்படி நல்லது நடக்கவிடாம தடுக்குறீங்களே?!
நண்பன்னு சொல்லி இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ட்ரம்ப்; இப்படி நல்லது நடக்கவிடாம தடுக்குறீங்களே?!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan“அரிசி திருடி விக்குறீங்களா” ரவுண்டு கட்டிய இளைஞர் திணறிய ரேஷன் கடை ஊழியர்கள் Ration Shop ScamTirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!TVK Vijay Madurai Meeting  | 100 வேட்பாளர்கள் ரெடி? மதுரையில் அறிவிப்பு! விஜயின் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Jaishankar: வாய்க்கு வந்ததை அடித்துவிடும் ட்ரம்ப்; வரி குறித்த கருத்துக்கு ஜெய்சங்கர் மறுப்பு
வாய்க்கு வந்ததை அடித்துவிடும் ட்ரம்ப்; வரி குறித்த கருத்துக்கு ஜெய்சங்கர் மறுப்பு
OPS on Alliance: கூட்டணியா.? அது வந்து... தங்கள் நிலைப்பாடு குறித்து ஓ. பன்னீர்செல்வம் சொன்னது என்ன.?
கூட்டணியா.? அது வந்து... தங்கள் நிலைப்பாடு குறித்து ஓ. பன்னீர்செல்வம் சொன்னது என்ன.?
AR Murugadas on Shanmugapandian: சண்முகபாண்டியனுக்கு அடித்த ஜாக்பாட்; இயக்குனர் முருகதாஸே சொல்லிட்டாரே.!!
சண்முகபாண்டியனுக்கு அடித்த ஜாக்பாட்; இயக்குனர் முருகதாஸே சொல்லிட்டாரே.!!
Trump Vs Apple: நண்பன்னு சொல்லி இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ட்ரம்ப்; இப்படி நல்லது நடக்கவிடாம தடுக்குறீங்களே?!
நண்பன்னு சொல்லி இந்தியாவிற்கு ஆப்பு வைக்கும் ட்ரம்ப்; இப்படி நல்லது நடக்கவிடாம தடுக்குறீங்களே?!
President To SC: கோபப்பட்ட குடியரசு தலைவர் - உச்சநீதிமன்றத்திற்கு 14 கேள்விகள் - பொங்கி எழுந்த ஸ்டாலின்
President To SC: கோபப்பட்ட குடியரசு தலைவர் - உச்சநீதிமன்றத்திற்கு 14 கேள்விகள் - பொங்கி எழுந்த ஸ்டாலின்
Royal Enfield EV: ராயல் என்ஃபீல்டின் சத்தமில்லாத சம்பவம்; வருது முதல் EV பைக் - வாங்க ரெடியாகுங்க
ராயல் என்ஃபீல்டின் சத்தமில்லாத சம்பவம்; வருது முதல் EV பைக் - வாங்க ரெடியாகுங்க
RISAT 1B Satelite: பாதுகாப்பின் அடுத்த உச்சம் - இஸ்ரோ விண்ணில் செலுத்தும் புதிய செயற்கைகோள் - அலறும் தீவிரவாதிகள்
RISAT 1B Satelite: பாதுகாப்பின் அடுத்த உச்சம் - இஸ்ரோ விண்ணில் செலுத்தும் புதிய செயற்கைகோள் - அலறும் தீவிரவாதிகள்
உள்ளே வரத்துடிக்கும் ஓபிஎஸ்.. விரட்டி விரட்டி விடும் இபிஎஸ்! இன்னைக்கு முக்கிய முடிவு!
உள்ளே வரத்துடிக்கும் ஓபிஎஸ்.. விரட்டி விரட்டி விடும் இபிஎஸ்! இன்னைக்கு முக்கிய முடிவு!
Embed widget