மேலும் அறிய

World Idly day : இன்னைக்கு இட்லி Day.. சட்டுன்னு செஞ்சு முடிக்க வகை வகையா 7 ரெசிப்பி..

இன்று உலக இட்லி தினம் கொண்டாடப்படுகிறது. வீட்டில் வகை வகையான இட்லிகள் சமைத்து சாப்பிட உங்க்ளுக்கான ரெசிபிகள் இதோ!

இட்லி, நம் அன்றாட வாழ்வில் ஒன்றிபோய்விட்ட ஒரு உணவு பொருள். நீராவியில் வேகவைத்து செய்யப்படுவதால் மிகவும் ஆரோக்கியமான உணவு என்ற பெயரும் இதற்கு உண்டு. இட்லியும் சாம்பாரும் சரிவிகித உணவு என்ற பெருமைக்கு சொந்தகார்ர்கள். தென் இந்தியாவில் அதிகமாக அறிப்பட்ட இட்லி. இன்று உலக அளவில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

World Idly day : இன்னைக்கு இட்லி Day.. சட்டுன்னு செஞ்சு முடிக்க வகை வகையா 7 ரெசிப்பி..

இட்லி சுமார் 700 ஆண்டுகளாக இந்தியாவில் அறியப்பட்டு வந்த ஒரு உணவு பதார்த்தம் என்றும், இட்லியின் பண்டையகால பெயர் இட்டரிக் என்றும் கூறப்படுகிறது. பரபரப்பான காலை நேரத்தில் சத்துமிக்க காலை உணவு என்றால் அது இட்லிதான். சரி, இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என உங்களுக்கு தோன்றுமில்லையா? இன்று உலக இட்லி தினமாம். வாங்க கொண்டாடலாம். இட்லி தினத்தில் வகை வகையான இட்லி செய்து சாப்பிட்டு கொண்டாலாம்.



காஞ்சிபுரம் இட்லி

தேவையானவை:

 புழுங்கலரிசி - ஒரு கப், பச்சரிசி - ஒரு கப், உளுத்தம் பருப்பு - ஒரு கப், நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், சுக்குத்தூள் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, ஆப்பசோடா - ஒரு சிட்டிகை.

தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்,மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,கறிவேப்பிலை - சிறிது, பெருங்காயம் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன், இஞ்சி -ஒரு துண்டு.




World Idly day : இன்னைக்கு இட்லி Day.. சட்டுன்னு செஞ்சு முடிக்க வகை வகையா 7 ரெசிப்பி..

செய்முறை: அரிசி, பருப்பை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். ஊறிய பின்னர், நன்குகழுவி, சற்றுக் கரகரப்பாக அரைத்தெடுங்கள். தேவையான உப்பு சேர்த்துக் கரைத்துப் புளிக்க வையுங்கள். புளித்த மாவில் சுக்குத்தூள், ஆப்பசோடா சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள். நல்லெண்ணெயைக் காய்ச்சி அதில் ஊற்றுங்கள். கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்துபொன்னிறமானதும் மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக உடைத்து அதோடு சேருங்கள். இஞ்சியை துருவிச் சேருங்கள். அத்துடன் கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கி மாவில் சேருங்கள். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து, மாவை சிறிய கிண்ணங்களில் நிரப்பி, வேகவைத்தெடுங்கள். இதனுடன் காரம் புளிப்பு மிக்க சட்னி, சாம்பாருடன் சாப்பிடுங்கள்.

இட்லி மஞ்சூரியன்:

தேவையானவை: இட்லிகள் - 10, இஞ்சி-பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், கார்ன்ஃப்ளார் - ஒருடேபிள்ஸ்பூன், கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாதூள்- அரை டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், ஆரஞ்சு ரெட் கலர் - ஒரு சிட்டிகை, உப்பு -சுவைக்கேற்ப, எண்ணெய் - தேவையான அளவு.

 

இட்லி மஞ்சூரியன்
இட்லி மஞ்சூரியன்

செய்முறை: இட்லிகளை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதனுடன் இஞ்சி-பூண்டு விழுது, கார்ன் ஃப்ளார், கடலைமாவு, மிளகாய்தூள், கரம் மசாலாதூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து, அதனுடன் சிறிது தண்ணீரும் சேர்த்து நன்கு பிசறிக்கொள்ளுங்கள்.

கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கலந்து வைத்துள்ள இட்லிகளை ஐந்தாறாகப் போட்டுப் பொரித்தெடுங்கள். குழந்தைகளைக் கவர்ந்திழுக்கும் ஸ்நாக்ஸ் என்பதால், மீதமான இட்லிகளைக்கூட இப்படி செய்து கொடுக்கலாம். அவர்கள் குஷியாகச் சாப்பிடுவார்கள்.

குறிப்பு: எண்ணெய் நன்கு காய்ந்திருக்க வேண்டும். இல்லையென்றால், இட்லி, எண்ணெய் குடித்துவிடும்.

பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, அதோடு கரம் மசாலா, மிளகாய தூள் சேர்த்து நன்கு வதக்கி, அதோடு பொரித்த இட்லி மஞ்சூரியன்களைப் போட்டு கிளற வேண்டும். இதுவும் இட்லி மஞ்சூரியனில் ஒரு வகை.

 

அவல் இட்லி:

தேவையானவை:

பச்சரிசி - ஒரு கப், புழுங்கலரிசி - ஒரு கப், உளுத்தம்பருப்பு - அரை கப்,கெட்டி அவல் - அரை கப், உப்பு - தேவையான அளவு, ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை.

 

செய்முறை: அரிசியையும் உளுந்தையும் சேர்த்தும், அவலைத் தனியாகவும் ஊறவையுங்கள். அரைக்கும்போது எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து, 6 முதல் 8மணி நேரம் புளிக்கவையுங்கள்.  புளித்த மாவில் இட்லிகளாக ஊற்றுங்கள். இதற்கு கடலை சட்னி, சாம்பார், வெங்காய சட்னி என வகை வகையாக எந்த சட்னி என்றாலும் ஏற்றதுதான்.

 

ரவை இட்லி:

தேவையானவை:

ரவை - ஒரு கப், சற்று புளித்த தயிர் - ஒரு கப், தேங்காய் துருவல் - 2டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை - ஒரு டீஸ்பூன், ஆப்ப சோடா - சிட்டிகை, உப்பு - தேவையானஅளவு, நெய் - 2 டீஸ்பூன்.

தாளிக்க: மிளகு - அரை டீஸ்பூன், சீரகம் - கால் டீஸ்பூன், கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு- ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு துண்டு,கறிவேப்பிலை - சிறிது, முந்திரிப்பருப்பு - 6, எண்ணெய் - 2 டீஸ்பூன்.

 

ரவா இட்லி
Caption

செய்முறை: ரவையை நெய்யில் வறுத்தெடுங்கள். பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்குங்கள். கடாயில் எண்ணெய் ஊற்றி காய வைத்து, தாளிக்கும் பொருட்களைப் போட்டு, பொன்னிறமாகும் வரை வறுத்து, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி மாவில் சேருங்கள். பின்பு மற்ற பொருட்களையும் அதனுடன் சேர்த்து (தேவையானால் சிறிது தண்ணீரும் சேர்த்து)இட்லி மாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். 10 நிமிடம் கழித்து இட்லிகளாக ஊற்றி,வேகவைத்தெடுத்து, சட்னி, சாம்பாருடன் பரிமாறுங்கள். ரவா இட்லி ரெடி!

 

ஓட்ஸ் இட்லி:

தேவையானவை: ஓட்ஸ் - ஒரு கப், உளுத்தம்பருப்பு - ஒரு கப், இஞ்சி - ஒரு துண்டு, பச்சைமிளகாய் - 2, உப்பு - தேவையான அளவு.

 

செய்முறை: உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைத்து இஞ்சி மிளகாய் சேர்த்து நன்குஅரைத்துக்கொள்ளுங்கள். ஓட்ஸை 10 நிமிடங்கள் ஊற வைத்து உப்பு, உளுந்து மாவுடன் கலந்து 5முதல் 6 மணி நேரம் புளிக்க வைத்து இட்லிகளாக ஊற்றி எடுங்கள்.

காரமான தேங்காய் அல்லது தக்காளி சட்னி, சாம்பாருடன் அருமையாக இருக்கும்.

 

கோதுமை ரவை இட்லி:

தேவையானவை: கோதுமை ரவை - ஒரு கப், உளுத்தம்பருப்பு - கால் கப், உப்பு - தேவையானஅளவு.

செய்முறை: உளுந்தையும், ரவையையும் தனித்தனியே ஊறவையுங்கள். உளுந்தை நன்கு அரைத்து,வழித்தெடுக்கும் சமயம் கோதுமை ரவையை அதனுடன் சேர்த்து 2 நிமிடம் அரைத்தெடுங்கள். உப்புசேர்த்து கரைத்து புளிக்கவைத்து, இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது இந்த இட்லி. சாம்பார் உடன் சாப்பிட்டால் சுவை சிறப்பாக இருக்கும்.

 

கேழ்வரகு இட்லி:

தேவையானவை: கேழ்வரகு - ஒரு கப், புழுங்கலரிசி - அரை கப், உளுத்தம்பருப்பு - கால் கப்.

செய்முறை:  கேழ்வரகையும் அரிசியையும் தனித்தனியே ஊறவைத்து, உளுந்தையும் தனியேஊறவையுங்கள். அரைக்கும்போது உளுந்தை முதலில் போட்டு, அது நன்கு அரைபட்டதும்கேழ்வரகையும் அரிசியையும் போட்டு, சற்று கரகரப்பாக அரைத்தெடுங்கள். உப்பு சேர்த்துக்கரைத்து, 4 முதல் 5 மணி நேரம் புளிக்க விடுங்கள். பிறகு, இட்லிகளாக ஊற்றி வேகவிட்டு, கம்புஇட்லியைப் போலவே, தாளித்து சாப்பிடலாம். 


World Idly day : இன்னைக்கு இட்லி Day.. சட்டுன்னு செஞ்சு முடிக்க வகை வகையா 7 ரெசிப்பி..

இதோடு மட்டுமல்லாமல், மெது மெதுவான குஷ்பூ இட்லி, மல்லிகைப் பூ போன்ற இட்லி என்றெல்லாம் நாம் சொல்வோம் இல்லையா. வெந்தய தோசை போலவே, வெந்தய இட்லியும் மிகவும் சுவையாக இருக்கும். பொடி இட்லி, சாம்பார் இட்லி, மினி இட்லி, இட்லி சான்விச் என இட்லி வைத்து தயாரிக்கும் உணவு வகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இட்லி மாவு தயாராக இருந்தால், வகை வகையான இட்லிகள் எளிதாக செய்யலாம். உடன், தேங்காய் சட்னி, புதினா சட்னி, தக்காளி சட்னி, கொத்தமல்லி சட்னி, கடலைச் சட்னி என சட்னிகள் வகைகளும் நீளும். சாம்பாரும் நொடியில் தயார் செய்து விடலாம். பிறகென்ன, ஆவி பறக்க, இட்லியுடன் சட்னி சாம்பார் தொட்டுக்க ருசித்து சாப்பிட வேண்டியதுதானே!

ஹாப்பி உலக இட்லி தின வாழ்த்துக்கள் ஃப்ரண்ஸ்!!!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள்" விஜய் சொன்னவுடன் அதிர்ந்த ஒய்எம்சிஏ மைதானம்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் இப்தார் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்!
பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள், ஆனால் இப்போ பாருங்க.!...இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!
"இந்த அநியாயத்தை ஏத்துக்க மாட்டோம்" பாஜகவை எதிர்க்க பாஜகவிடமே ஆதரவு கேட்ட ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Daughter in law Surprise: வைர நெக்லஸ்..தங்க கட்டிகள்..1 கோடியில் BIRTHDAY GIFT!மாமியாருக்கு SURPRISESarathkumar BJP : அண்ணாமலைக்கு ஆப்பு! பாஜக தலைவர் சரத்குமார்? கடுப்பில் சீனியர்ஸ்Chandrababu Naidu Praises Tamilnadu : ’’தமிழர்கள் TOP-ல இருக்காங்கதமிழ்நாடு தான் BEST’’புகழ்ந்து தள்ளிய சந்திரபாபுPolice vs Drunken lady : தலைக்கேறிய போதை !நடுரோட்டில் இளம்பெண் அலப்பறை திணறிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நெஞ்சில் குடியிருக்கும் இஸ்லாமிய பெருமக்கள்" விஜய் சொன்னவுடன் அதிர்ந்த ஒய்எம்சிஏ மைதானம்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் என்ட்ரி கொடுத்த தவெக தலைவர் விஜய்!
பாய் குல்லா அணிந்து.. லுங்கியுடன் இப்தார் நோன்பு திறந்த தவெக தலைவர் விஜய்!
பாஜக நோட்டா என கிண்டலடித்தார்கள், ஆனால் இப்போ பாருங்க.!...இபிஎஸ் தாக்கிய அண்ணாமலை.!
"இந்த அநியாயத்தை ஏத்துக்க மாட்டோம்" பாஜகவை எதிர்க்க பாஜகவிடமே ஆதரவு கேட்ட ஸ்டாலின்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
திருத்தணியில் பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான சோகம்!
Local Train Cancelled: அலர்ட் பயணிகளே.. ஞாயிறன்று ரத்தாகும் புறநகர் ரயில்கள்.. எந்த வழித்தடம் தெரியுமா?
Local Train Cancelled: அலர்ட் பயணிகளே.. ஞாயிறன்று ரத்தாகும் புறநகர் ரயில்கள்.. எந்த வழித்தடம் தெரியுமா?
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
பள்ளி மாணவர்களிடம் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றும் பாஜகவினர்! – அன்பில் மகேஸ் கொடுக்கும் எச்சரிக்கை
Chennai Madurai Expressway: அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
அடி தூள்.. இனி சென்னை டு மதுரை 6 மணி நேரம்தான்.. தொடங்கிய எக்ஸ்பிரஸ் வே பணிகள்...
Embed widget