மேலும் அறிய
Advertisement
Cooking Tips: கிச்சன் சிங்க்கில் அடைப்பு ஏற்படுதா? ஃப்ரிட்ஜ் துர்நாற்றமா? சில டிப்ஸ் இதோ..
ஃபிரிட்ஜில் துர்நாற்றம் இருப்பதால் மற்ற காய்கறிகள் மீதும் அதன் நாற்றம் வீசும். இதை தடுக்க எலுமிச்சையை சாறுபிழிந்த பின் தூக்கி வீசாமல், அதன் தோலை ஃபிரிட்ஜில் வைத்தால் துர்நாற்றம் இருக்காது
Cooking Tips: தினமும் சமைப்பதால் கிச்சனில் பயன்படுத்தும் பொருட்களை சுத்தப்படுத்தவும், கிருமிகள் வராமல் இருக்கவும் சிரமமாக இருக்கும். வேலைக்கு செல்லும் பெண்களால் தினமும் சுத்தப்படுத்த முடியாத நிலையில் எளிமையான சில சமையல் குறிப்புகளை கடைபிடித்தால் கிச்சனையும், உணவுகளையும் ஆரோக்கியமக வைத்துக்கொள்ள உதவும்.
- நாம் தினமும் டீ, காப்பி குடிக்கும் கப் அல்லது சாப்பாடு உண்ணும் பீங்கான் பாத்திரத்தில் கறை படிந்துள்ளதால் அதை நீக்க கஷ்டப்பட வேண்டாம். ஒரு பெரிய வெங்காயத்தை வெட்டி அந்த கறை மீது தேய்த்து பின்னர் கழுவினால் கறைகள் நீங்கி விடும்
- பூண்டை நீண்ட நாள் வைத்திருந்தால் பழுத்து விடும். பூண்டு பழுப்பதை தடுக்க, அதனுடன் சிறிது கேழ்வரகு சேர்த்து வைத்தால் போதும். பூண்டு நீண்ட நாட்கள் பழுக்காமல் இருக்கும்.
- டீ, காப்பி பயன்படுத்தும் ஃபிளாஸ்க்கில் துர்நாற்றம் வந்தால் சிலர் சுடுநீரில் சுத்தம் செய்வார்கள். அதனுடன் சிறிது வினிகர் சேர்த்து கழுவினால் ஃபிளாஸ்கில் உள்ள துர்நாற்றம் போகும்
- ஃபிரிட்ஜில் துர்நாற்றம் இருப்பதால் மற்ற காய்கறிகள் மீதும் அதன் நாற்றம் வீசும். ஃபிரிட்ஜ் துர்நாற்றம்போக எலுமிச்சை பழத்தின் தோல் போதும். எலுமிச்சையை சாறுபிழிந்த பின் தூக்கி வீசாமல், அதன் தோலை ஃபிரிட்ஜில் வைத்தால் துர்நாற்றம் இருக்காது
- கிச்சனில் உள்ள பாத்திரங்களை கழுவும் செய்யும் சிங்கில் சிறு அளவில் அடைப்பு இருந்தால், இரவில் கொதிக்கும் நீரை ஊற்றி சிறிது உப்பை அதில் போட்டால் போதும். அடைப்பு சரியாகி விடும்.
- சமையல் மேடையில் இருக்கும் எண்ணெய் பிசுக்கு போக, கொஞ்சம் கடலை மாவை தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைத்து, அதை கொண்டு தேய்த்து கழுவினால் பிசுக்கு நீங்கும்.
- கோதுமை மாவை நீண்ட நாட்கள் வைத்திருந்தால் வண்டுகள் வரும். வண்டுகள் வருதை தடுக்க கல் உப்பு போதும். கோதுமை மாவில் கல் உப்பு தூவி வைத்தால் வண்டுகள் அண்டாது.
- புளியில் வண்டு, பூச்சி, புழுக்கள் வந்தால் கவலை வேண்டாம். புளியை வாங்கியதும், அதில் உள்ள கொட்டை, நார்களை நீக்கிவிட்டு, அதனுடன் கல் உப்பு சேர்த்து வெயிலில் காய வைத்து எடுத்து வைத்தால் ஓராண்டு ஆனாலும் புழு, பூச்சிகள் வராது
- சாதம் வடிக்கும்போது குழைந்து போனால் கவலை வேண்டாம். கொதிக்கும் சாதத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றினால் சாதம் குழையாமல் இருக்கும்
- வெங்காயம் மற்றும் பூண்டை அதிகமாக உரிக்க விரும்பினால் சிரமம் வேண்டாம். கொதிக்கும் நீரில் அவற்றை போட்டு உடனே குளிர்ந்த நீருக்கு மாற்ற வேண்டும். பிறகு எடுத்து உரித்தால் பூண்டு மற்றும் வெங்காயத்தில் தோல் சுலபமாக உரிந்து விடும்
- கறிவேப்பிலையை அலுமினிய பாத்திரத்தில் மூடி வைத்தால் சில நாட்கள் ஆனாலும், காய்ந்து போகாமல் இருக்கும்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion