Garlic Goli Idli : கொஞ்சம் வெண்ணெய்.. கொஞ்சம் பூண்டு.. இனிமே இட்லி கூட இன்னொரு ஸ்நாக்ஸ்தான்..
அரிசி உருண்டைகள் அல்லது கோலி இட்லி தயாரிப்பதில் நீங்கள் சிரமப்படுகிறீர்கள் என்றால், கவலைப்படத் தேவையில்லை. இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:
நமது அன்றாட வாழ்க்கையில் அங்கமாகிப்போன உணவாகிவிட்டது இட்லி. காலை மற்றும் இரவு உணவாக சாப்பிடப்படும் இட்லியில் உடுப்பி, செட்டிநாடு, காஞ்சிபுரம், ரவா, தட்டே, ராமசேரி மற்றும் மூடே ஆகிய பல வகைகள் உள்ளன. உங்களுக்கு தினமும் ஒரே மாதிரியான இட்லி சாப்பிட்டு அலுத்துவிட்டது என்றால் உங்களுக்காக வெண்ணெய், பூண்டு இவற்றை சேர்த்து செய்யக்கூடிய புது வித உருண்டை இட்லிக்கான ரெஸிப்பியை தருகிறோம் .
வெண்ணெய் , பூண்டு உருண்டை இட்லி செய்வது எப்படி ?
தேவையான பொருட்கள் :
வெண்ணெய் - 2 டீஸ்பூன் பூண்டு (நறுக்கியது) - 1 டீஸ்பூன் பச்சை மிளகாய் (நறுக்கியது) - 1/2 டீஸ்பூன் வெங்காயம் (நறுக்கியது) - 3 டீஸ்பூன் பச்சை சோளம் - ஒரு கைப்பிடி ஸ்பிரிங்க் எலுமிச்சை
செய்முறை :
- முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு Pan அல்லது எண்ணைய் சட்டியை வைத்துக்கொள்ளுங்கள் . அதில் சிறிது வெண்ணெய் விட்டு, அது உருகியதும் சிறிது நறுக்கிய பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.
- இதை நன்றாக கலந்து, நறுக்கிய வெங்காயம் மற்றும் சில சோள நிப்லெட்டுகளை சேர்த்து நன்றாக வதக்கவும்.
- முன்னதாக இட்லியை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி , அதனை வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்க. அதனை மேற்கண்ட கலவையுடன் சேர்த்து மிஸ் செய்யுங்கள் .
- இப்போது சிறிது ஸ்பிரிங் ஆனியன் கொண்டு டிஷ் அலங்கரித்து பரிமாறவும்.
அரிசி உருண்டைகள் அல்லது கோலி இட்லி தயாரிப்பதில் நீங்கள் சிரமப்படுகிறீர்கள் என்றால், கவலைப்படத் தேவையில்லை. இந்த வழிமுறைகளைப் பின்பற்றவும்:
படி 1: ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைக்கவும், இப்போது சிறிது உப்பு மற்றும் நெய் சேர்க்கவும். சிறிது அரிசி மாவை அதனுடன் சேர்த்து கெட்டி பதம் வந்தவுடன் ஆரவிடவும்.
படி 2: கலவை சிறிது குளிர்ந்தவுடன், மென்மையான மாவை உருவாக்கவும். தேவைப்பட்டால், நீங்கள் சூடான நீரை சேர்க்கலாம்.
படி 3: அரிசி மாவிலிருந்து சிறிய உருண்டைகளை உருவாக்கவும். மேலும் அவற்றை 10-15 நிமிடங்கள் வேகவைக்கவும்.
இந்திய உணவுகளில் மேற்கத்திய உணவுகளின் தாக்கத்தால் தற்போது எண்ணெயும் மசாலாவும் அதிகமாகச் சேர்க்கும் பழக்கம் வந்துவிட்டது. ஆனால் இட்லி இன்னும் அதன் கெத்தை அப்படியே வைத்திருக்கிறது. ஆவியில் வெந்து, எந்தவிதமான மாறுதல்களுக்கும் உட்படாமல் உடல்நலனையும் கெடுக்காமல் புரதத்தையும், கார்ப் சத்தையும் அள்ளித்தரும் இட்லி இனிமே உங்க ஸ்நாக்ஸ் பாக்ஸையும் அலங்கரிக்கலாம்.