Thenkuzhal Murukku : மொறு மொறு தேன் குழல் முறுக்கு : இப்படி செஞ்சு பாருங்க சுவை அள்ளும்..
சுவையான தேன்குழல் முறுக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்...
தேவையான பொருட்கள்
மாவு பச்சரிசி - 4 கப், உளுந்து - 1 கப், வெண்ணை - 1 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எள்ளு - 1 ஸ்பூன், சீரகம் - 1/2 ஸ்பூன், பெருங்காயம் - 1/4 ஸ்பூன், எண்ணெய்- தேவையான அளவு.
செய்முறை
கடையில் முறுக்கு பச்சரிசி மாவு என்று கேட்டு வாங்கிக்கொள்ள வேண்டும்.
இந்த அரிசியை இரண்டிலிருந்து மூன்று முறை நன்றாக கழுவி விட்டு, தண்ணீரை நன்றாக சல்லடையில் போட்டு வடித்துவிட்டு, அதன் பின்பு ஒரு காட்டன் துணியை அதன் மேல் பரப்பி, ஐந்து மணிநேரம் காயவைக்க வேண்டும்.
வெயில் காலத்தில் இந்த மாவைத் தயார் செய்து, ஆர வைத்து, பிறகு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டால் எப்போது வேண்டுமென்றாலும் முறுக்கு சுட்டு கொள்ளலாம்.
உளுந்தை கடாயில் சேர்த்து அடுப்பை மீதமான தீயில் வைத்து வறுத்துக்கொள்ள வேண்டும்.
உளுந்து கருகும் அளவுக்கோ நன்கு சிவக்கும் அளவுக்கோ வறுத்துவிடக்கூடாது.
உளுந்து பக்குவமான பதத்தில் வறுபட்ட உடன் உடனடியாக அடுப்பை அணைத்துவிட்டு, வேறு ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
நன்றாக ஆறவைத்து மிக்ஸியில் போட்டு நன்கு பொடியாக, மைய அரைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு அகலமான பேசின் பாத்திரத்தில் இரண்டு மாவையும் கொட்டி, முதலில் கலந்துவிட வேண்டும்.
வெண்ணை, எள்ளு, சீரகம், தேவையான அளவு உப்பு, பெருங்காயம் சேர்த்து தண்ணீரைத் தெளித்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
அதன் பின்பாக வழக்கமாக முறுக்கு அச்சில் மாவை சேர்த்து பிழிவது போல், ஜல்லிக்கரண்டி மேல் லேசாக எண்ணெயைத் தடவி முறுக்கை பிழிந்து, எண்ணெய் சட்டியில் விட வேண்டும்.
எண்ணெய் குறிப்பாக மிதமான தீயில் இருக்க வேண்டும். முறுக்கு போதுமான அளவு வெந்ததும் எடுத்துவிட வேண்டும். முறுக்கை அதிகமாக வேக விடக்கூடாது. முறுக்கு வெந்ததும் எண்ணெயில் இருந்து வடிகட்டி எடுத்து ஆற வைத்து சாப்பிடலாம். இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.