![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Oats Omelet :சுவையான ஓட்ஸ் ஆம்லெட்.. காலை உணவாக சாப்பிட ஏற்ற ரெசிபி...செய்முறை இதோ!
சுவையான ஓட்ஸ் மற்றும் காய்கறி ஆம்லெட் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
![Oats Omelet :சுவையான ஓட்ஸ் ஆம்லெட்.. காலை உணவாக சாப்பிட ஏற்ற ரெசிபி...செய்முறை இதோ! tasty and healthy oats omelet and vegetable omlet Oats Omelet :சுவையான ஓட்ஸ் ஆம்லெட்.. காலை உணவாக சாப்பிட ஏற்ற ரெசிபி...செய்முறை இதோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/27/309d0c2d4fcfc614c6fc7906ae61e37f1709029062430571_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
3 டீஸ்பூன் ஓட்ஸை மூழ்கும் அளவு பால் சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
இதற்கிடையே ஒரு கிண்ணத்தில் நான்கு முட்டைகளை உடைத்து ஊற்றிக் கொள்ள வேண்டும். இதில் பொடியாக நறுக்கிய ஒரு வெங்காயம், துருவிய ஒரு கேரட், மிளகுத்தூள் அரை ஸ்பூன், நறுக்கிய பச்சை மிளகாய் 1, நறுக்கிய குடை மிளகாய் ஒரு ஸ்பூன், நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி சிறிதளவு, நறுக்கிய ஒரு சிறிய தக்காளி, தேவையான அளவு உப்பு சேர்த்து பாலில் ஊற வைத்த ஓட்ஸை இதனுடன் சேர்க்க வேண்டும். இதை நன்றாக பீட் செய்து கொள்ள வேண்டும்.
ஒரு பேன் -ஐ அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி அடித்து வைத்துள்ள முட்டையை இதில் ஊற்ற வேண்டும். வழக்கமான அம்லெட் போல் இதை திருப்பி போட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் சுவையான ஓட்ஸ் ஆம்லெட் தயாராகி விட்டது. இதை சைடிஷ் ஆகவும் சாப்பிடலாம். காலை உணவாகவும் சாப்பிடலாம்.
காய்கறி ஆம்லேட்
பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், துருவிய உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பொடியாக நறுக்கிய குடைமிளகாய், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, மிளகுத்தூள் சிறிதளவு, மிளகாய் தூள் கால் ஸ்பூன் ஆகியவற்றை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
அனைத்து வகையான காய்கறிகளையும் கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி விட்டு, ஒரிரு நிமிடம் மூடி போட்டு வேக வைக்க வேண்டும்.
ஒரு கிண்ணத்தில் 3 அல்லது 4 முட்டைகளை உடைத்து ஊற்றி , இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கிய காய்கறிகளையும் இதில் சேர்த்து நன்றாக பீட் செய்து கொள்ள வேண்டும். இதை வழக்கமான ஆம்லேட் போல் தோசைக்கல்லில் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவு தான் சுவையான காய்கறி ஆம்லெட் தயார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)