மேலும் அறிய
Advertisement
Neem Tea: இந்த சிக்கல்களுக்கு வேப்பிலை டீ மட்டும் போதும்.. நயன்தாராவின் ஊட்டச்சத்து நிபுணர் கொடுத்த பெஸ்ட் டிப்..
Neem Tea : மழைக்காலத்தில் நோய்களை தடுத்து பரவ விடாமல் பாதுகாக்கும் ஒரு ஆரோக்கியமான வேம்பு டீயின் செய்முறை பற்றி நம்மிடம் பகிர்ந்துள்ளார் ஊட்டச்சத்து நிபுணர் முன்முன் கனேரிவால்.
Monsoon Health benefits of Neem tea : உங்களின் அனைத்து ஆரோக்கிய சிக்கல்களுக்கும் தீர்வு சொல்லும் வேம்பு டீ
மழைக்காலத்தில் நோய் தொற்று அதிகமாக இருக்கும். அதனால் பலருக்கும் ஆரோக்கியத்தில் சிக்கல்கள் ஏற்படலாம். மேலும் குடல் உணவை செரிமானம் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் அதனால் செரிமான கோளாறுகள் ஏற்படும். அதனால் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் வேப்பம்பூ டீ சிறந்தது என கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணர் முன்முன் கனேரிவால்.

View this post on Instagram
நோய் தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு
ஒவ்வொரு பருவம் மாறும் போது அதற்கென சில நன்மைகளும் உண்டு சில தீமைகளும் உண்டு. மழைக்காலம் வந்தால் வானிலை மிகவும் ரம்மியமாக இருக்கும். அதே சமயம் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் அவை நோய் தொற்று பரவ செய்து அதிகமான ஆரோக்கிய சிக்கல்களையும் கொண்டு சேர்க்கும். சளி, காய்ச்சல், இருமல், குடல் தொற்று போன்றவை நாம் மழைக்காலங்களில் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகள். அதனால் ஊட்டச்சத்து நிபுணர் நம் உணவு முறையில் சில மாற்றங்களை செய்ய பரிந்துரைக்கிறார்.
மழைக்காலத்தில் கிடைக்கக்கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதோடு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும் நமது உணவு முறையில் சேர்த்து கொள்ள வேண்டும் என்கிறார்.
நன்மைகள் தரும் வேம்பு
வேம்பு நம் பாரம்பரியமான மருத்துவத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. இது நடைமுறையில் பல நூற்றாண்டு காலமாக இருந்து வந்தாலும் இன்றும் அதன் பயன்பாடு சற்றும் குறையவில்லை. இது ஆன்டி செப்டிக் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகளை கொண்டுள்ளது. உட்புறம் மற்றும் வெளிப்புறம் உள்ள காயங்களை எளிதில் குணப்படுத்த கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. இந்த சிறப்பான கிருமி நாசினி குடலை சுத்தப்படுத்தும், பாக்டீரியாக்களை அழிக்கும், நீரிழிவு நோயாளிகளின் அறிகுறிகளை கட்டுப்படுத்தும். உடலில் உள்ள கொழுப்பை கரைத்து இரத்த அழுத்தத்தை உடனடியாக குறைக்கும்.
அனைவருக்கும் ஆயுர்வேதம் என்ற புத்தகத்தின் படி வேம்பு நம் வாத மற்றும் நரம்பு மண்டலத்தில் உள்ள அனைத்து சிக்கல்களையும் சமநிலைப்படுத்தி உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. வேம்பின் இது போன்ற சக்தி வாய்ந்த நன்மைகளை கருத்தில் கொண்டு மழைக்காலத்தில் நோய்களை தடுத்து பரவ விடாமல் பாதுகாக்கும் ஒரு ஆரோக்கியமான வேம்பு டீயின் செய்முறை பற்றி நம்முடன் பகிர்ந்துள்ளார்.
வேம்பு டீ செய்முறை

1 1/2 கப் தண்ணீரில் , 4-5 வேப்ப இலைகள், அரை இன்ச் நசுக்கிய இஞ்சி. இவை அனைத்தையும் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பிறகு வடிகட்டி சிறிது தேன் சேர்த்து சூடாக பரிமாறவும்.
மழைக்காலத்தில் வேம்பின் நன்மைகள், வேம்பின் மருத்துவ குணங்கள், வேம்பு ஹெர்பல் டீ, வேம்பு ஹெர்பல் டீ எப்படி செய்வது, மழைக்கால ஹெல்த் டிப்ஸ்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion