மேலும் அறிய

Mint Chutney : புதினா சட்னியை இப்படி செய்து பாருங்க...இன்னும் 2 இட்லி அதிகமா சாப்பிடுவிங்க...

புதினா சட்னியை எப்படி சுவையாக செய்வதென்று பார்க்கலாம்.

இட்லி, தோசையுடன் வைத்து சாப்பிட சுவையாகவும், ஆரோக்கியமாகவும் ஒரு சைட் டிஷ்ஷாக தயாரிக்க விரும்புகிறிர்களா? அப்போ இந்த புதினா சட்னியை ஒரு முறை முயற்சி செஞ்சு பாருங்க. சுவை அசத்தலாக இருக்கும். புதினாவில் இரும்புச் சத்து வைட்டமின் சி, தையமின் உள்ளிட்ட சத்துகள் அடங்கி உள்ளன. இந்த சட்னியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். வாங்க இந்த சட்னியை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

கடலை பருப்பு - 1 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் - 8-10

பூண்டு - 4 பல்

பச்சை மிளகாய் - 2

புதினா - 2 கப்

புளி - 1 துண்டு

துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்

உப்பு - சுவைக்கேற்ப

தண்ணீர் - தேவையான அளவு

தாளிப்பதற்கு..

எண்ணெய் - 2 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

கடாயை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதே கடாயில் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, புதினாவை சேர்த்து, வதக்கி கொள்ள வேண்டும். 

பிறகு அதில் துருவிய தேங்காய், புளி சேர்த்து  சுவைக்கேற்ப உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கி ஆற வைக்க வேண்டும். 

பின்பு அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின் அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு சிறிய கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியில் ஊற்றினால், சுவையான புதினா சட்னி தயார்.
 
மேலும் படிக்க 

தலைப்பு செய்திகள்

தேங்காய்க்குள் தண்ணீர் எப்படி வருகிறது? மர்மம் அல்ல... இயற்கையின் அற்புதமான அறிவியல்!
தேங்காய்க்குள் தண்ணீர் எப்படி வருகிறது? மர்மம் அல்ல... இயற்கையின் அற்புதமான அறிவியல்!
தலைமுறைகள் கடந்தும் மக்களின் உன்னத உணவாக திகழும் தஞ்சாவூர் உரப்பு அடை
தலைமுறைகள் கடந்தும் மக்களின் உன்னத உணவாக திகழும் தஞ்சாவூர் உரப்பு அடை
நாவில் உமிழ்நீர் ஊறும் ‘மாம்பழ புட்டு’ செய்முறை!
நாவில் உமிழ்நீர் ஊறும் ‘மாம்பழ புட்டு’ செய்முறை!
விஜய் பிறந்தநாள்: மதுரையில் 10,000 பேருக்கு தவெக பிரியாணி விருந்து!
விஜய் பிறந்தநாள்: மதுரையில் 10,000 பேருக்கு தவெக பிரியாணி விருந்து!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் யார்? யார்? இருந்தார்கள்? - ப.பா.மோகன் வெளியிட்ட பகீர் தகவல்!
ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் யார்? யார்? இருந்தார்கள்? - ப.பா.மோகன் வெளியிட்ட பகீர் தகவல்!
Lexus LM 350h Review: விமானமே தோத்துரும்..முதல்வர் விஜயின் Most Fav, சொகுசின் உச்சம்- லெக்சஸ் சாரில் இவ்ளோ அம்சங்களா?
Lexus LM 350h Review: விமானமே தோத்துரும்..முதல்வர் விஜயின் Most Fav, சொகுசின் உச்சம்- லெக்சஸ் சாரில் இவ்ளோ அம்சங்களா?
Russia Crude Oil Tariff: ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல்; இந்தியா மீது 100% வரி விதிக்குமா அமெரிக்கா.? வெளியுறவு அமைச்சகம் பதில்
ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல்; இந்தியா மீது 100% வரி விதிக்குமா அமெரிக்கா.? வெளியுறவு அமைச்சகம் பதில்
Ertiga on EMI: சக்திவாய்ந்த சிக்கனமான குடும்ப SUV.! ரூ.2 லட்சம் முன்பணத்தில் மாருதி எர்டிகா வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
சக்திவாய்ந்த சிக்கனமான குடும்ப SUV.! ரூ.2 லட்சம் முன்பணத்தில் மாருதி எர்டிகா வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
நாம் தமிழர் கட்சியே வேண்டாம்.. விலகிய இயக்குநர் மு.களஞ்சியம்.. பரபரப்பு குற்றச்சாட்டு!
நாம் தமிழர் கட்சியே வேண்டாம்.. விலகிய இயக்குநர் மு.களஞ்சியம்.. பரபரப்பு குற்றச்சாட்டு!
Chennai Bengaluru Bullet Train: ரூ.18,000 கோடி பட்ஜெட், சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில், 350KM ஸ்பீட், 73 நிமிடங்கள் போதும்
ரூ.18,000 கோடி பட்ஜெட், சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில், 350KM ஸ்பீட், 73 நிமிடங்கள் போதும்
Embed widget