News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Tutti Fruity : டூட்டி ஃபுரூட்டி கேக்கை மிக எளிமையா தயாரிக்கலாம்.. ஸ்டெப் ஸ்டெப்பா கொடுத்திருக்கோம்..

சுவையான டூட்டி ஃப்ரூட்டி கேக் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

FOLLOW US: 
Share:

தேவையான பொருட்கள் 

மைதா  - 3/4 கப், பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன், டூட்டி ஃபுரூட்டி - 1/4 கப்,  உப்பு - 1 சிட்டிகை, சர்க்கரை  - 1/3 கப், எண்ணெய் - 1/8,  கப் மற்றும் 1 டேபிள் ஸ்பூன், வெண்ணிலா எசன்ஸ் – 1/2 டீஸ்பூன், தண்ணீர் - 1/4 கப், கெட்டியான தயிர் - 1/4 கப், வினிகர் - 1/2, டேபிள் ஸ்பூன், பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்.

செய்முறை

ஒரு வட்டக் கிண்ணத்தில் சர்க்கரை, எண்ணெய், வெண்ணிலா எசன்ஸ் மற்றும் தண்ணீர் ஊற்றி நன்கு சர்க்கரை கரையும் வரை அடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
 
பின்னர் ஒரு கிண்ணத்தில் 1 டீஸ்பூன் மைதாவுடன், டூட்டி ஃபுரூட்டியைப் போட்டு கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
 
அகன்ற பாத்திரத்தில், மைதா, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்த்து, சல்லித்து ஒரு பௌலில் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
 
பின் 1 டேபிள் ஸ்பூன் டூட்டி ஃபுரூட்டியை தனியாக ஒரு கின்ணத்தில் வைத்துக் கொண்டு, மீதமுள்ள டூட்டி ஃப்ரூட்டியை மைதா கலவையில் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.
 
இப்போது மற்றொரு கிண்ணத்தில் தயிர், பேக்கிங் சோடா மற்றும் வினிகர் சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். இறுதியில்  எல்லா கலவைகளையும் ஒன்றாக மிக்ஸ் செய்துக் கொள்ள வேண்டும்.
 
பின்பு 180 டிகிரி செல்சியஸில் மைக்ரோ ஓவனை சூடுப்படுத்த வேண்டும். பின் பேக்கிங் ட்ரேயில் பேப்பரால் செய்யப்பட்ட கப் கேக் லைனரை வைத்து, அதற்குள் கலந்து வைத்துள்ள கலவையை ஊற்ற வேண்டும்.
 
பின் அதன் மேல் தனியாக எடுத்து வைத்துள்ள டூட்டி ஃபுரூட்டியை தூவி, பின்னர் மைக்ரோ ஓவனில் பேக்கிங் ட்ரேயை வைத்து, 25லிருந்து 30 நிமிடம் வரை பேக்கிங் செய்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான டூட்டி ஃபுரூட்டி கப் கேக் தயார்.
 
மேலும் படிக்க 
 
Published at : 21 Dec 2023 01:14 PM (IST) Tags: cake recipe dooty fruity cake cake procedure

தொடர்புடைய செய்திகள்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

டாப் நியூஸ்

Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்

Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்

Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?

Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!

Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!