மேலும் அறிய

Tomato Dosa: தோசை பிரியரா? உடுப்பி ஸ்டைல் தக்காளி தோசை - ரெசிபி இதோ!

Tomato Dosa: உடுப்பி தக்காளி தோசை செய்வது எப்படி என கீழே விரிவாக காணலாம்.

தோசை பிரியர்களுக்கு பிடித்தமான பாலக் பனீர் ஊத்தாப்பம், உடுப்பி தக்காளி தோசை எப்படி செய்வது என காணலாம். பனீர், பாலக்கீரை, தக்காளி என ஆரோக்கியத்துடன் ருசியான ஊத்தாப்பத்தை காலை உணவாகவும் சாப்பிடலாம். 

உடுப்பி தக்காளி தோசை 

என்னென்ன தேவை?

இட்லி பச்சரிசி - ஒரு கப்

தக்காளி - 3 

கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்

சிகப்பு மிளகாய் - 2 (தேவையான அளவு)

சீரகம் - ஒரு டீஸ்பூன்

இஞ்சி - சிறிய துண்டு

கொத்தமல்லி - சிறிதளவு

கருவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

இட்லி அரிசி ஒரு கப், கடலை பருப்பு 2 டேபிள் ஸ்பூன் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் வரை ஊர வைக்கவும். கொத்தமல்லி, கருவேப்பிலை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும். மிக்ஸி ஜாரில் அரிசி, கடலை பருப்பு, சிகப்பு மிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக தோசை மாவு போன்று அரைக்கவும். தக்காளி, உப்பு இரண்டையும் நைஸாக அரைத்து அரிசி மாவுடன் சேர்க்கவும். நன்றாக கலந்து கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்க்கவும். அவ்வளவுதான். மாவு தயார். 

அடுப்பில் தோசை கல்லை மிதமான தீயில் வைக்கவும். அதில், நெய் அல்லது எண்ணெய் சேர்த்து தோசை ஊற்றவும். இரண்டு புறமும் பொன்னிறமாகியதும் தோசை ரெடி. இதை  தேங்காய் சட்னி, கார சட்னி  உடன் சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். 

பாலக் பனீர் ஊத்தாப்பம்

தேவையான பொருட்கள்

பாலக்கீரை  - ஒரு கப்

ரவா - ஒரு கப்

தயிர் - ஒரு கப்

பனீர் துருவியது - ஒரு கப்

வெங்காயம் பொடியாக நறுக்கியது - ஒரு கப்

தக்காளி பொடியாக நறுக்கியது - ஒரு கப்

பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது - ஒரு கப்

கொத்தமல்லி - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் ரவா, தயிர், உப்பு, அரைத்த பாலக்கீரை  எல்லாவற்றையும் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலக்கவும். ஒரு 20 நிமிடங்கள் ஊறட்டும். இதில் மாதுளை போன்ற பழங்களை விருப்பப்பட்டால் சேர்த்து கொள்ளலாம்.  தோசை ஃபில்லிங்கிற்கு ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, துருவிய பனீர் அனைத்தையும் நன்றாக கலந்து வைத்து கொள்ளவும்.

பின்னர், தோசை கல்லில் மாவை ஊத்தி தோசை வார்க்க வேண்டும். அதன்மீது பழ கலவை, துருவிய பனீர் ஆகிவயவற்றை சேர்த்து நன்கு வேக விடவும். அவ்ளோதான். சுவையான பாலக்கீரை பனீர் ஊத்தாப்பம் ரெடி.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

தேங்காய்க்குள் தண்ணீர் எப்படி வருகிறது? மர்மம் அல்ல... இயற்கையின் அற்புதமான அறிவியல்!
தேங்காய்க்குள் தண்ணீர் எப்படி வருகிறது? மர்மம் அல்ல... இயற்கையின் அற்புதமான அறிவியல்!
தலைமுறைகள் கடந்தும் மக்களின் உன்னத உணவாக திகழும் தஞ்சாவூர் உரப்பு அடை
தலைமுறைகள் கடந்தும் மக்களின் உன்னத உணவாக திகழும் தஞ்சாவூர் உரப்பு அடை
நாவில் உமிழ்நீர் ஊறும் ‘மாம்பழ புட்டு’ செய்முறை!
நாவில் உமிழ்நீர் ஊறும் ‘மாம்பழ புட்டு’ செய்முறை!
விஜய் பிறந்தநாள்: மதுரையில் 10,000 பேருக்கு தவெக பிரியாணி விருந்து!
விஜய் பிறந்தநாள்: மதுரையில் 10,000 பேருக்கு தவெக பிரியாணி விருந்து!

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
CM Vijay: ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த மாணவர்.. கைகட்டி அமைதியாக கேட்ட முதலமைச்சர் விஜய் - வீடியோவைப் பாருங்க
"லஞ்சம் வாங்குனா இதான் கதி.." கட்சிக்காரனுக்கே இந்த கதியா? விஜய் ஆக்ஷனால் அரசியல் கட்சிகள் அச்சம்!
Iraq Vs Donald Trump: 'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
'ட்ரம்ப்பை கொல்பவருக்கு 10 மில்லியன் டாலர் வெகுமதி'; ஈராக்கிய பயங்கரவாதக் குழு அதிரடி அறிவிப்பு
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Madurai Hc ; பழனி மட நிலப் பதிவு: சார்பதிவாளருக்கு நிபந்தனை ஜாமின் - சிக்கலில் இருவர்!
Udhayanithi Stalin:
Udhayanithi Stalin: "லட்சக்கணக்கான இளைஞர்கள் ஏமாற்றம்.." காவலர் நியமனம் ஒத்திவைப்பிற்கு உதயநிதி கண்டனம்
Reliance Jio Satellite LEO Network: ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
ஸ்டார்லிங்க்-க்கு ஆப்பு ரெடி.! சொந்த செயற்கைக்கோள்களை நிறுவ ஜியோவுக்கு கிடைத்த அனுமதி; முழு விவரம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
செடான் கார்களில் பின்புற வைப்பர் ஏன் இல்லை? அறிவியல், வடிவமைப்பு ரகசியம்
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
CM Vijay: அமைச்சர்களுக்கு கட்டுப்பட மறுக்கும் அதிகாரிகள்..? அடுத்த ஆக்ஷனுக்கு ரெடியாகும் முதலமைச்சர் விஜய்!
Embed widget