Unripe Papaya : பப்பாளி பழத்தின் நன்மைகள் தெரியும்.. பப்பாளி காயில் இவ்வளவு பலன்களா?
உணவில் பழுக்காத பப்பாளியை சேர்த்துக் கொண்டால் இத்தனை பலன்களா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அத்தனை நன்மைகள் நிறைந்திருக்கின்றன.
உணவில் பழுக்காத பப்பாளியை சேர்த்துக் கொண்டால் இத்தனை பலன்களா என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அத்தனை நன்மைகள் நிறைந்திருக்கின்றன. பழுக்காத பப்பாளியில் வைட்டமின்கள் ஏ, சி, இ மற்றும் பி நிறைவாக இருக்கின்றது. இதில் என்சைம்கள், ஃபைட்டோநியூட்ரியன்ட்ஸ் நிறைவாக உள்ளது. இது உங்களை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருக்கச் செய்யும். பழுக்காத பப்பாளியை அன்றாடம் கூட உட்கொள்ளலாம்.
ஜீரணத்தை மேம்படுத்தும்:
பழுக்காத பப்பாளியை உண்பது ஜீரணத்தை மேம்படுத்தும். உங்கள் உடலையே ஒட்டுமொத்தமாக சுத்தப்படுத்தும். இதில் உள்ள பப்பாயின் என்ற என்சைம் குடலில் உள்ள அமிலங்கள் சுரப்பை ஊக்கப்படுத்தி செரிமானத்தை உறுதி செய்யும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் பப்பாளி காய்க்கு பங்கு இருக்கிறது. குறிப்பாக வயிற்றில் உள்ள நச்சை அகற்றுவதில் பெரும் பங்கிருக்கிறது.
உடல் எடையைக் குறைக்க உதவும்:
பப்பாளி பழத்தைவிட பப்பாளி காயாக உண்டால் அதில் அதிக அளவு என்சைம்கள் இருக்கும். பப்பாயின் மற்றும் கைமோபப்பாயின் என்சைம்கள் பழுக்காத பப்பாளியில் உள்ளன. இவை இரண்டு கொழுப்பு, புரதம், கார்போ ஜீரணத்திற்கு உதவுகிறது. பப்பாயின் என்பது பெப்ஸினைவிட மிகவும் அதிகமான திறனுடன் கொழுப்பை உடைக்கக் கூடியது.
தொற்றிலிருந்து விடுவிக்கும்
பப்பாளிக் காய் சரும வியாதிகளுக்கு நல்ல தீர்வு தரும். மாதவிடாய் காலத்தில் அடிவயிற்றில் ஏற்படும் வலிக்கு நிவாரணி. அதுமட்டுமல்ல தொண்டைப் புண் மற்றும் நுரையீரல் தொற்றை குணப்படுத்தும். சிகரெட் பழக்கத்தில் இருந்து மீள்பவர்களின் நுரையீரலைக் கூட சுத்தப்படுத்தும். இதில் வைட்டமின் ஏ நிறைவாக இருக்கிறது.
மலச்சிக்கலை தீர்க்கும்
பப்பாளிக் காயில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வு தரும். குறிப்பாக பழுக்காத பப்பாளியில் லேட்டக்ஸ் எனும் என்சைம் இருக்கிறது. இது வயிற்றை சுத்தப்படுத்தும். மலக்குடல் வழியாக மலம் எளிதில் வெளியேறவும் இது உதவும். பப்பாளிக் காயில் உள்ள நார்ச்சத்து தண்ணீரை உறிஞ்சி மலச்சிக்கலை தீர்க்கும்.
காயங்களை சீக்கிரம் ஆற்றும்
பப்பாளிக் காயில் ப்ரோடீஸ் என்சைம்கள் அதிகமாக உள்ளன. அதனால் இது காயங்களை விரைவாக குணப்படுத்தும். பப்பாளிக் காயில் மெக்னீஸியம், பொட்டாசியம், வைட்டமின்கள் ஏ,சி,இ மற்றும் பி உள்ளன. இவை பல்வேறு சருமக் காயங்களையும் அரிப்புகளையும் தடிப்புகளையும் நிவர்த்தி செய்யும்.
இத்தனை நன்மைகள் சொல்கிறீர்களே காயை எப்படி சாப்பிடுவது எனக் கேட்பவர்களுக்கு இதோ சிம்பிள் ரெசிபி.
தேவையான பொருட்கள் :
பப்பாளிக்காய் - 2 கப்
பச்சை மிளகாய் - 1
தக்காளி - 1
சிறு பருப்பு - 1/3 கப்
மஞ்சள் பொடி - 1/4 tsp
உப்பு - தே.அ
அரைக்க :
தேங்காய் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 1
சீரகம் - 1 tsp
தாளிக்க :
எண்ணெய் - 2 tsp
கடுகு - 1 tsp
உளுத்தம் பருப்பு - 1 tsp
காய்ந்த மிளகாய் - 1
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
வெங்காயம் - 1
கறிவேப்பிலை/ கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை :
முதலில் அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை அரைத்துக்கொள்ளுங்கள்.
குக்கரில் பப்பாளியின் தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி போடுங்கள். அதோடு சிறு பருப்பு, தக்காளி , பச்சை மிளகாய்,மஞ்சள், உப்பு சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றிக்கொள்ளுங்கள்.
குழந்தைகள் விரும்பு உருளைக்கிழங்கு சாதம் : இப்படி செஞ்சு கொடுங்க.. ஒரு பருக்கை கூட மிஞ்சாது...
2-3 விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விசில் போனதும் திறங்கள். பின் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கலந்துகொள்ளுங்கள்.
அதை அப்படியே அடுப்பில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள்.
அதேசமயம் மற்றொரு கடாய் வைத்து தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து தாளித்து கூட்டில் சேர்த்துக் கிளறுங்கள். இறுதியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )