One Clove Garlic : காலையில் எழுந்ததும் ஒரு பல் பூண்டை மென்று சாப்பிட்டாபோதும்.. இவ்வளவு நன்மைகளா? வாவ்
வெள்ளைப் பூண்டு சீன மருத்துவத்தில் முக்கிய மருந்துப் பொருள். இந்திய மருத்துவத்திலும் பூண்டுக்கு தனிச்சிறப்பான இடம் இருக்கிறது. பூண்டின் மருத்துவப் பயன்கள் பற்றி இச்செய்தியில் பார்ப்போம்.
வெள்ளைப் பூண்டு சீன மருத்துவத்தில் முக்கிய மருந்துப் பொருள். இந்திய மருத்துவத்திலும் பூண்டுக்கு தனிச்சிறப்பான இடம் இருக்கிறது. பூண்டின் மருத்துவப் பயன்கள் பற்றி இச்செய்தியில் பார்ப்போம்.
பரபரப்பான வாழ்க்கை முறை, மோசமான உணவு பழக்கவழக்கம், சரியான தூக்கமின்மை, நொறுக்குத் தீணி ஆகியன உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுத்துவிடுகிறது. ஒரு மனிதனுக்கு சராசரியாக 130/80 Hg என்றளவில் ரத்த அழுத்தம் இருக்க வேண்டும். சிலருக்கு இந்த அழுத்தம் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்கின்றன. ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும்போது அதை உணவிலும், அதிகமாக இருக்கும்போது உணவுக் கட்டுப்பாடுடன் மாத்திரைகள் அவசியமாகிறது. உணவின் மூலம் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கலாம் என்று கூறுகிறார் டாக்டர் தீக்ஷா பாவ்சர் சவாலியா. இவர் ஆயுர்வேத சிகிச்சை நிபுணர். இவர் தனது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்து ஓர் அறிவுரையைக் குறிப்பிட்டுள்ளார்.
அதில், எனது தந்தைக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பது கடந்த 2021 டிசம்பரில் கண்டறியப்பட்டது. அன்றிலிருந்து நான் அவருக்கு தினமும் காலை எழுந்ததும் 1 கிராம் அளவிலான வெள்ளைப் பூண்டை மென்று தின்னத் தருகிறேன். அது அவருக்கு நல்ல பலனைத் தந்தது. அதன் பின்னர் இதனை 500 நோயாளிகளிடம் பரிசோதனை செய்தேன். 20 வயதில் இருந்து 80 வயதுள்ள 500 உயர் ரத்த அழுத்த பிரச்சனை உடையவர்களிடம் இதனை சோதித்தேன். அது நற்பலன் தந்தது.
வெள்ளைப் பூண்டில் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. அது வாதத்தை கபத்தையும் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
வெள்ளைப் பூண்டு ரத்த அழுத்தத்தாஇ கட்டுப்படுத்துகிறது, மூட்டு வலிகளைக் குறைக்கிறது, வயிற்றில் உள்ள கிருமிகளை நீக்குகிறது,நல்ல கொழுப்பை பாதுகாக்கிறது, இருமல், சளியை சரி செய்கிறது, ஜீரணத்தை உந்துகிறது, நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கிறது, மூளை செயல்பாட்டை அதிகரிக்கிறது, ரத்த சர்க்கரை அளவை சமன்படுத்துகிறது மற்றும் உடல் எடையை பேண உதவுகிறது என்றார். எனவே உங்களுக்கு இதில் ஏதேனும் ஒரு குறைபாடு இருந்தாலும் நீங்கள் அன்றாடம் வெள்ளைப் பூண்டை உண்ணுங்கள். அன்றாடம் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு வெள்ளைப் பூண்டு பல்லை மென்று உண்டு வாருங்கள். ஆனால் அதற்காக நீங்கள் உண்ணும் ஹைபர்டென்சன் / பிபி மாத்திரைகளை நிறுத்திவிடலாம் என்று அர்த்தமில்லை. உங்கள் மாத்திரையை நிறுத்துவதோ அதன் அளவைக் குறைப்பதோ முறையான மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர் மருத்துவரால் செய்யப்பட வேண்டியதாகும்.
உடல் சூட்டு பிரச்சனை உள்ளவர்கள் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டாம். அவர்கள் உணவில் பூண்டை சேர்த்துக் கொள்ளலாம்.
பூண்டில் உள்ள சத்துக்கள் என்னென்ன?
வெள்ளைப் பூண்டில் வோலடைல் ஆயில், கார்போஹைட்ரேட்ஸ், அரபிநோஸ், கேலக்டோஸ், வைட்டமின்கள், ஃபோலிக் அமிலங்கள், நயசின், ரைபோஃப்ளேவின், தயமின், அமினோ அமிலங்கள், என்சைம்கள் ஆகியன உள்ளன.
View this post on Instagram
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )