News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Pumpkin Pasta: பாஸ்தா ப்ரியரா? ஹெல்தியான முறையில் இப்படி செய்து பாருங்க!

Pumpkin Pasta:

FOLLOW US: 
Share:

பாஸ்தா ப்ரியர்களுக்கு அதில் நிறைய ஊட்டச்சத்து நிறைந்ததாக செய்ய வேண்டும் என்று விரும்புவர்களுக்கு இந்த ரெசிபி. பென்னே, மேக்ரோனி, Fettuccin, ஸ்பிரிங் பாஸ்தா உள்ளிட்ட பல வகைகளில் பாஸ்தா கிடைக்கின்றன. இத்தாலி ஸ்டைல், இந்தியன் ஸ்டைல் என பல முறைகளில் செய்யலாம். உங்களுக்கு எப்படி சாப்பிட பிடிக்குமோ அதற்கேற்றவாறு செய்யலாம். 

பாஸ்தாவை வேக வைக்க டிப்ஸ்:

பாஸ்தா ஒன்றோடுண்டு ஒட்டாமல் வருவதற்கு தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதில் பாஸ்தாவை போட வேண்டும். கூடவே தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு  எண்ணெய் சேர்த்து வேண்டும். பாஸ்தாவை 7 நிமிடங்களுக்கு மேல் வேக வைக்கக் கூடாது. அப்படி செய்தால் குழைந்துவிடும்; ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும். அதனாலேயே தண்ணீர் நன்றாக கொதிநிலை வந்ததும் பாஸ்தாவை சேர்க்க வேண்டும். 

7 அல்லது அதிகபட்சமாக 8 நிமிடங்களில் பாஸ்தாவை அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டி வேண்டும். பின்னர் அதை ஒரு நீள ட்ரேயில் கொட்டி அதன் மீது ஒன்றிரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கிளறி பரப்பிவிடவும். இது பாஸ்தா ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பார்த்துக் கொள்ளும். எல்லா வகையான பாஸ்தாவையும் இப்படி வேக வைக்கலாம்.

பாஸ்தா செய்யும்போது வொயிட் சாஸ், ரெட் சாஸ் வீட்டிலேயே தயாரிக்கலாம். பாஸ்தா செய்வதற்கு முன்னதாகவே இதை தயாரிக்கலாம்.  

பரங்கிக்காய் பாஸ்தா

மஞ்சள் பூசணி என்றழைக்கப்படும் பரங்கிக்காய் ஒன்றை வைத்து சுவையான பாஸ்தா எளிதாக அதிக நேரம் எடுக்காமல் செய்துவிடலாம். 

என்னென்ன தேவை?

பாஸ்தா - 250 கிராம்

பரங்கிக்காய் - 250 கிராம்

பூண்டு - சிறிதளவு

சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு டீஸ்பூன்

சீஸ் - தேவையான அளவு 

வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

தக்காளி - 4 

செய்முறை:

முதலில் பாஸ்தாவை தண்ணீரில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். பொடியாக நறுக்கிய பூண்டு ஒரு ஸ்பூன் தேவைப்படும். பரங்கிக்காயை சிறிதளவு எண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கவும். பரங்கிக்காய் ஆறியதும் அதோடு ஒரு கப் பால் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்து எடுக்கவும்.தக்காளியுடன் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கலாம். தக்காளியின் புளிப்புக்கு ஏற்றவாறு சில்லி ஃப்ளேக்ஸ் சேர்க்கலாம். இதெல்லாம் தயாரித்துவிட்டால் அரை மணி நேரத்திற்குள் பாஸ்தா தயாரித்துவிடலாம். 

கடாய் ஒன்றில் வெண்ணெய் ஊற்றி பூண்டு சேர்த்து வதக்கவும்.தக்காளி விழுது சேர்த்து என்றாக வதக்கவுன். தக்காளி விழுது நன்றாக கொதித்து சேர்ந்ததும் அதில் பாஸ்தா சேர்க்கவும். அடுத்து பரங்கிக்காய் விழுது, சீஸ் சேர்த்து நன்றாக கிளறவும். 5 நிமிடங்கள் அடுப்பில் இருக்கட்டும். இத்தாலியன் ஹேர்ப்ஸ் சேர்க்கலாம். ஃப்ரெஷ் க்ரீம் கொஞ்சம் சேர்க்கலாம். விருப்பம் எனில் கொத்தமல்லி தழைகள் தூவி அடுப்பில் இறக்கினால் போது. பரங்கிக்காய் பாஸ்தா தயார்.

சில்லி பனீர் பாஸ்தா

கொதிக்கும் தண்ணீரில்  எண்ணெய், உப்பு பென்னே பாஸ்தாவை போட்டு நன்றாக வெந்ததும் வடிக்கட்டி எடுத்துகொள்ளவும். (5 நிமிடங்களில் பாஸ்தா வெந்துவிடும்.) அடுப்பில் மிதமான தீயில் வாணலி வைத்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து நறுக்கிய பனீர் துண்டுகளை கொட்டி ரோஸ்ட் செய்து தனியே எடுக்கவும். அதே வாணலியில் இரண்டு டேபிஸ் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். இதோடு, சதுர வடிவில் நறுக்கிய வெங்காயம், பச்சை, மஞ்சள், சிகப்பு குடைமிளகாய் ஆகிவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். சோய், சில்லி சாஸ் சேர்த்து 5-10 நிமிடங்கள் வரை வதக்கவும். எல்லாம் நன்றாக வதங்கி நிறம் மாறியதும் ரோஸ்ட் செய்த பனீர், வேகவைத்த பாஸ்தா சேர்த்து நன்றாக கிளறி சீஸ், வெங்காயத்தாள் சேர்த்து இறக்கினால் சுட சுட சீஸ் பனீர் பாஸ்தா ரெடி. 

Published at : 25 Apr 2024 01:50 PM (IST) Tags: @food Food Healthy eating pasta

தொடர்புடைய செய்திகள்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

டாப் நியூஸ்

Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

Jio New 5g Plans: செல்போன் கட்டணத்தை உயர்த்திய ஜியோ நிறுவனம்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!

நீட் வினாத்தாள் கசிவு.. இறங்கி அடித்த சிபிஐ.. பீகாரில் இருவரை தட்டித்தூக்கிய அதிகாரிகள்!

போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!

போக்சோ வழக்கு.. எடியூரப்பாவுக்கு தொடர் நெருக்கடி... சிஐடி தாக்கல் செய்த பரபர குற்றப்பத்திரிகை!

Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!

Vengal Rao: நகைச்சுவை நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டும் நட்சத்திரங்கள்.. ஐஸ்வர்யா ராஜேஷ் நிதியுதவி!