மேலும் அறிய
Advertisement
Corn Palak Khichdi: ஆரோக்கியமான லன்ச் பாக்ஸ் ரெசிபி - ஸ்வீட்கார்ன்- பாலக்கீரை கிச்சடி!
Corn Palak Khichdi Recipe: சுவையான ஆரோக்கியமான ஸ்வீட்கார்ன் கிச்சடி எப்படி செய்வது என்று காணலாம்.
லன்ச் பாக்ஸிற்கு எளிதாக உணவு செய்துவிட வேண்டும் என்று திட்டமிடுபவர்களுக்காக இந்த ரெசிபி. இது மிகவும் சுவையாகவும் இருக்கும். ஸ்வீட்கார்ன் பாலக்கீரை கிச்சடி செய்வது எப்படு என்று காணலாம்.
என்னென்ன தேவை?
பாலக்கீரை - ஒரு கட்டு
பாசிப் பருப்பு - அரை கப்
அரிசி - ஒரு கப்
ஸ்வீட்கார்ன் - 3 கப்
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி -2
கரம் மசாலா - ஒரு டீஸ்பூன்
மல்லித் தூள் - ஒரு டீ ஸ்பூன்
பட்டை, ஏலாக்காய், கிராம்பு - தலா 1
பூண்டு - அரை கப்
பச்சை மிளகாய் - 2
கருவேப்பிலை, கொத்தமல்லி- தேவையான அளவு
செய்முறை:
- அரிசி, பாசிப்பருப்பை நன்றாக சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- கீரையை சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும். வெங்காயம்,தக்களி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்க வேண்டும். பூண்டு ஒரு அரை கைப்பிடி அளவு தோல் நீக்கி வைக்கவும்.
- இப்போது, குக்கரில் பருப்பு, அரிசி சேர்த்து மூன்று விசில் விட்டு வெந்ததும் தனியாக வைக்கவும்.
- அடுத்து, கீரையை மிக்ஸி ஜாரில் கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். இப்போது ஒரு கடாயை மிதமான தீயில் வைத்து நெய் அல்லது எண்ணெய் சேர்த்து அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து, கீரை விழுதை நன்றாக வேக விடவும். இதை தனியாக ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி, பச்சை மிளகாய், பட்டை, கிராம், ஏலக்காய், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானது அதில் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, கரம் மசாலா, தனியா தூள், சிறிது மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். வெங்காயம், தக்காளி உடன் மசாலா ஒன்றாக சேர்ந்து நன்றாக வெந்ததும், இதில் கீரை கலவையை சேர்த்து கிளறவும்.
- இந்த நிலையில், கீரை கலவையில் வேகவைத்த அரிசி, பருப்புடன் வேகவைத்த ஸ்வீட்கார்ன், ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும், சீரக தூள், ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் சுவையான ஸ்ட்வீட்கார்ன் - பாலக்கீரை கிச்சடி தயார்.
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion