Sago Sarbath : ஜில்லுனு ஜவ்வரிசி சர்பத்.. கொளுத்தும் வெயிலுக்கு இதமான ரெசிப்பி இதோ..
Sago Sarbath :ஜில்லுனு ஜவ்வரிசி சர்பத் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஜவ்வரிசி - 250 கிராம்.
சர்க்கரை - கால் கப்
ஜெல்லி கிரிஸ்டல் - ஒரு பாக்கெட்
ரோஸ் சிரப் - தேவையான அளவு
பால் - ஒரு லிட்டர்
செய்முறை
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 400 மி.லி தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் சூடானதும் ஒரு பாக்கெட் ஜெல்லி கிரிஸ்டல் சேர்க்கவும். இது தண்ணீரில் கரைந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி ஒரு ட்ரேயில் ஊற்றிக் கொள்ளவும். 20 நிமிஷத்தில் இந்த ஜெல்லி செட் ஆகி விடும். இதை உங்களுக்கு வேண்டிய வடிவங்களில் துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளலாம்.
250 கிராம் ஜவ்வரிசியை ஒரு மணிநேரம் ஊற வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசி மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து தண்ணீர் சூடானதும், ஜவ்வரிசியில் இருக்கும் தண்ணீரை வடித்து விட்டு அடுப்பில் இருக்கும் தண்ணீரில் ஜவ்வரிசியை சேர்க்கவும். ஜவ்வரிசி வேகும் வரை கரண்டியால் கிளறி விட்டுக்கொண்டே இருக்கவும். இல்லையென்றால் பாத்திரத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளும். ஜவ்வரிசி வெந்ததும் அதில் இருக்கும் தண்ணீரை வடித்து விட்டு ஜவ்வரிசியை மட்டும் தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும். மீண்டும் இதனுடன் சிறிது சாதா தண்ணீர் சேர்த்து வடித்துக்கொள்ளவும்.
ஒரு லிட்டர் பாலை காய்ச்சி ஆற வைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொள்ளவும். இதனுடன் கால் கப் அளவு சர்க்கரை, உங்கள் சுவைக்கு ஏற்ற அளவு ரோஸ் சிரப் சேர்த்துக் கொள்ளவும். வேக வைத்த ஜவ்வரிசியையும் இதனுடன் சேர்த்து கலந்துவிட்டுக் கொள்ள வேண்டும். இதில் தயாரித்து வைத்துள்ள ஜெல்லி துண்டுகளை சேர்த்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். பின் இந்த கலவையை வெளியில் எடுத்து இதன் மீது பொடித்த பிஸ்தா துகள்களை தூவி பாரிமாறலாம். இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.
மேலும் படிக்க
Healthy Hair: முடி உதிர்வு பிரச்சனை இருக்கா? இந்த உணவுகளை தவிர்த்திடுங்க! இதை மட்டும் சாப்பிடுங்க!
Fruit Mixture: ஜில்லுனு ஆரோக்கியமான ஃப்ரூட் மிக்ஸர்! இப்படி செய்து கொடுத்து அசத்துங்க!