மேலும் அறிய

Broccoli & spinach Pasta: ப்ரோக்கோலி ப்ரியரா? பாஸ்தா செய்து அசத்துங்க - இதோ ரெசிபி!

Broccoli & spinach pasta Recipe: பாஸ்தா ரெசிபி வகைகள் வரிசையில் ப்ரோக்கோலி பாஸ்தா செய்முறையை காணலாம்.

பாஸ்தா க்ரேவிங்காக இருக்கிறதா?அதில் சீஸ் அதிகம் இருக்கே? ஹெல்தியா இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்பவர்களுக்கு இந்த ரெசிபி! பாஸ்தாவில் கொஞ்சம் கீரை சேர்த்து கொள்ளலாம். பாலக்கீரை என்றால் சுவையாக இருக்கும். உங்களுக்குப் பிடித்த கீரை வகைகளை சுவைத்துப் பார்க்கலாம். ப்ரோக்கோலி சேர்க்கலாம். பென்னே, மேக்ரோனி, Fettuccin, ஸ்பிரிங் பாஸ்தா உள்ளிட்ட பல வகைகளில் பாஸ்தா கிடைக்கின்றன. அவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தலாம். 

பாஸ்தாவை வேக வைக்க..

பாஸ்தா ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, வேக வைக்கும்போது, தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதில் பாஸ்தாவை சேர்க்கவும். கூடவே தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு எண்ணெய் சேர்ப்பது பரிந்துரைக்கப்படுகிறது. பாஸ்தாவை 7 நிமிடங்களுக்கு மேல் வேக வைக்கக் கூடாது.  ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும். அதனாலேயே தண்ணீர் நன்றாக கொதிநிலை வந்ததும் பாஸ்தாவை சேர்க்க வேண்டும். 

7 அல்லது அதிகபட்சமாக 8 நிமிடங்களில் பாஸ்தாவை அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டி வேண்டும். பின்னர் அதை ஒரு நீள ட்ரேயில் கொட்டி அதன் மீது ஒன்றிரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கிளறி பரப்பிவிடவும். இது பாஸ்தா ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பார்த்துக் கொள்ளும். எல்லா வகையான பாஸ்தாவையும் இப்படி வேக வைக்கலாம்.

பாஸ்தா செய்யும்போது வொயிட் சாஸ், ரெட் சாஸ் வீட்டிலேயே தயாரிக்கலாம். பாஸ்தா செய்வதற்கு முன்னதாகவே இதை தயாரிக்கலாம். சாஸ் தனியாக, பாஸ்தா தனியாக வேக வைப்பது இல்லாமல் ஒரே பாத்திரத்திலும் செய்யலாம்.

ப்ரோக்கோலி கீரை பாஸ்தா:

என்னென்ன தேவை?

பாஸ்தா (பென்னே, ஸ்பிரிங் உங்கள் விருப்பத்திற்கேற்ப) - ஒரு கப்

ப்ரோக்கோலி - 1 1/2 கப்

பாலக்கீரை விழுது - ஒரு கப்

முந்திரி - ஒரு கப்

பனீர் - அரை கப்

சிவப்பு, மஞ்சள், பச்சை குடை மிளகாய் - தலா ஒன்று

க்ரீம் - அரை கப்

பூண்டு - 2 பல்

துருவிய சீஸ் - ஒரு கப்

பால் - ஒரு கப்

உப்பு -தேவையான அளவு

ஓரிகானோ, சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு ஸ்பூன் (தேவையான அளவு)

இவற்றில் சீஸ், க்ரீம் உள்ளிட்டவை தேவையில்லை எனில் சேர்க்க வேண்டாம்.

செய்முறை:

பாஸ்தாவில் சேர்க்க வேண்டிய மூன்று வண்ண குடைமிளகாய், பூண்டு, ஸ்வீட்கார்ன் ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும். குடைமிளகாய் வேண்டாம் என்றால் தவிர்க்கவும்.

பாலக்கீரையை நன்றாக வதக்கி மிக்ஸியில் அரைத்து எடுக்க வேண்டும். இதோடு பனீர், முந்திரி உள்ளிட்டவற்றையும் சேர்த்து அரைக்கவும்.  1 நிமிடங்களுக்குள் அரைத்தால் மட்டுமே போதும். 
ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் வெண்ணெய் சேர்த்து அதில் பூண்டு சேர்த்து வதக்கவும்.
பின், அதில் பாஸ்தா, நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகள் ஆகியவற்றை கலந்து 1 நிமிடம் வதக்கவும். ப்ரோக்கோலியை சேர்த்து வதக்க வேண்டும்.

இதில் பால், கொஞ்சம் க்ரீம், சீஸ் உள்ளிட்டவற்றை சேர்க்கவும். தேவையெனில் சிறிதளவு பாஸ்தா வேக வைத்த தண்ணீர் சேர்க்கலாம். பாஸ்தாவிற்கு தேவையானவற்றை கலந்து மூடி வைத்து 10 நிமிடங்கள் நன்றாக வேக வைக்க வேண்டும். அதில் ஓரிகானோ, சில்லி ஃப்ளேக்ஸ், அரைத்த கீரை விழுது, சீஸ், கொஞ்சம் க்ரீம் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும். அவ்வளவுதான். கூடான பாஸ்தா தயார்.

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
US Iran War: “நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
“நிறுத்தி இருக்கோம், ஆனா நிறுத்தல“ ஈரான் மீதான தாக்குதல் குறித்து வெள்ளை மாளிகை முக்கிய அறிக்கை
Maruti Safest Cars: 5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
5 ஸ்டார் ரேட்டிங் இருக்குற மாருதியோட பாகுபலி கார்கள் எது எதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
Iran Vs Ukraine: இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
Embed widget