Cloves: தினமும் 2 கிராம்பு சாப்பிடுவது நல்லதா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Cloves Everyday: கிராம்புகளில் புரதம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் நிறைந்துள்ளது
இந்திய பாரம்பரிய சமையல் மற்றும் ஆயுர்வேதம் மருத்துவத்தில் கிராம்பு முக்கிய பங்குவகுக்கிறது. இந்திய மசாலாப் பொருட்கள் உலகம் முழுவதும் பிரபலமானவை. பல்வேறு நோய்களில் இருந்து நிவாரணம் அளிக்கும் எண்ணற்ற நன்மைகள் இருப்பதாகவும் மருத்துவ உலகம் உள்ளது. சமையலில் மட்டுமல்ல, கிராம்பு பல மருத்துவ நலன்களையும் கொண்டது.
கிராம்பு பூக்கள், கிராம்பு எண்ணெய், கிராம்பு பொடி போன்றவை நிறைய நன்மைகளைத் தருகின்றன. கிராம்புகளில் புரதம், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் நிறைந்துள்ளது என்று ஆயுவேதம் சொல்கிறது. சளி, இருமல் உள்ளிட்டவைகளை சரிசெய்ய உதவுகிறது. அதுமட்டுமின்றி, ஆண்களின் விந்தணு எண்ணிக்கையையும் மேம்படுத்துவதாக தெரியவந்துள்ளது. எனவே, கிராம்பின் சில முக்கியமான நன்மைகளைப் பார்ப்போம்:
வயிற்று வலி சரியாக..
கிராம்பு வாயு, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு எதிராக நன்மைகளை வழங்குகிறது. கிராம்பு எண்ணெயை தண்ணீரில் சில துளிகள் சேர்த்து காலையில் உட்கொள்வது இந்த பிரச்சனைகளுக்கு எதிராக உதவுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதோடு, உணவு சாப்பிட்டு முடித்ததும் ஒரு கிராம் சாப்பிடுவது நல்லது. இது செரிமான சக்தியை அதிகப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
தழும்புகள் மறைய..
முகத்தில் உள்ள புள்ளிகள் , கரும் புள்ளிகள் நீக்க கிராம்பு உதவுகிறது. கிராம்பு பொடியுடன் உளுத்தம்பருப்பு மற்றும் தேன் கலந்து இதை செய்யலாம். பிறகு, இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவலாம். ,முகத்தில் உள்ள அழுக்கை நீக்கும். இருப்பினும், கிராம்பு பொடியை நேரடியாக முகத்தில் தடவ வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
முடி ஆரொக்கியம் மேம்பட..
முடி உதிரும் பிரச்சனை இருப்பவர்கள் சூடான தண்ணீரில் கிராம் போட்டு கொதிக்க வைத்து ஆறியதும் தலையில் மாஸ்க் போட்டுவந்தால் முடி உதிர்வது குறையும். கிராம்பு எண்ணெயை தேங்காய் எண்ணெயில் சேர்த்து தடவினாலும் நல்லது. மசாஜ் செய்யலாம். இது முடியை அடர்த்தியாகவும் வலுவாகவும் மாற்றும். அ
வாய் துர்நாற்றத்தில் இருந்து நிவாரணம்: ஒருவருக்கு வாய் துர்நாற்றம் இருந்தால், அவர்கள் தினமும் காலையில் 2-3 கிராம்புகளை 40-45 நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும். விரைவில், பிரச்சனை குணமாகும் என்பதை அவர்கள் கவனிப்பார்கள்.
விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது
வைட்டமின்கள், ஃபிளாவனாய்டுகள், ஆல்கலாய்டுகள், கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதம் நிறைந்த கிராம்பு, ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பல்வேறு வைட்டமின்கள், கார்போஹைட்ரேட், புரதங்கள், பிற சத்துகள் ஆகியவை கிராம்பு எண்ணெயில் சேர்த்திருப்பதால் அது விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. மேலும் விந்தணுக்கள் வேகமாக நகர்வதற்கும் இது பயன்படுகிறது.
கிராம்பைப் போலவே, கிராம்பு எண்ணெய் பயன்படுத்துவதும் பல் வலிக்கு மருந்தாக அமையும். மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, வீட்டில் தேநீர் செய்யும் போதும், அதில் கிராம்புகளை சேர்ப்பதும் வழக்கம். கிராம்பு, பட்டை சேர்த்து டீ குடிக்கலாம். மசாலா டீ என்று சொல்லப்படுகிறது.
கிராம்பு எண்ணெய் சேர்க்கப்பட்ட வெந்நீரில் தொடர்ந்து குளித்து வந்தால், அது மனதை அமைதிப்படுத்துவதோடு, புகைப்பிடிக்கும் பழக்கத்தில் இருந்து விடுபட உதவுகிறது.
நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது
கிராம்பு எண்ணெய் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. மேலும், வைரஸ், பாக்டீரியா ஆகியவற்றில் இருந்து உடலைப் பாதுகாக்கிறது.