Beetroot Paratha: ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் பராத்தா - எளிதான செய்முறை இதோ!
Beetroot Paratha: பீட்ரூட் பராத்தா செய்வது எப்படி என்பதை இங்கே காணலாம்.
பீட்ரூட் ஊட்டச்சத்து நிறைந்தது என்பது நாம் அறிந்ததே. பீட்ரூட்டில் வைட்டமின்ஏ, வைட்டமின் பி1,வைட்டமின் பி2, க்ளோரின், ஐயோடின், காப்பர் போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளன.
உடல் எடை:
பீட்ரூட் வைத்து செய்யப்படும் சில உணவு வகைகளை இங்கே காணலாம். நறுக்கிய பீட்ரூட் மற்றும் கேரட் சேர்த்து நன்றாக மிக்ஸில் அரைத்து ஜூஸ் செய்து குடிக்கலாம். டயட்டில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பீட்ரூட் – கேரட் ஜூஸ் ஹெல்தியான காலை உணவு, இல்லையெனில், காலை உணவு சாப்பிட்டுவிட்டு 11 மணிக்கு இந்த ஜூஸை குடிக்கலாம். பீட்ரூட் ஜூஸ் செய்யும்போது அதில் ஒரு துண்டு இஞ்சி சேர்க்கலாம். மேலும் பீட்ரூட்- கேரட் ஜூஸில், நார்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதால் ஜூரணிக்க அதிக நேரம் எடுக்கும். அடிக்கடி பசியும் எடுக்காது என்பதால் உடல் எடையைக்குறைக்கும் பயணத்தில் இருப்பவர்கள் இதை பயன்படுத்தலாம்.
பீட்ரூட் பராத்தா
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - இரண்டு கப்
இளஞ்சூடான நீர் - ஒரு கப்
நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
பீட்ரூட் - 3-4
ஸ்டஃப்பிங்
பனீர் - 200 கிராம்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கைப்பிடியளவு
பச்சை மிளகாய பொடியாக நறுக்கியது - 1
மிளகாய தூள் - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- பீட்ரூட் துருவி சேர்க்கலாம். இல்லையெனில் அதை நன்றாக அரைத்து அந்த விழுதை கோதுமை மாவுடன் சேர்த்து பராத்தா தயாரிக்கலாம். இன்று பீட்ரூட் விழுது சேர்த்து செய்யும் முறையை காணலாம்.கோதுமை மாவில் உப்பு, பீட்ரூட் விழுது சேர்த்து இளம் சூடான நீரை ஊற்றி சப்பாதி மாவு பதத்தில் தயார் செய்யவும். 20 நிமிடங்கள் ஊற விடவும்.
- ஸ்டஃப்பிங் செய்ய பனீரை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதோடு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
- கோதுமை மாவில் சப்பாத்தி உருண்டைகளை தயாரித்து அதில் ஸ்டஃபிங்கை கொஞ்சம் வைத்து மீண்டும் தேய்த்தெடுக்கவும்.
- மிதமான தீயில் தோசைக் கல்லில் கொஞ்சம் நெய் அல்லது எண்ணெய் தடவி சூடானதும் பனீர் பராத்தாவை போட்டு இரு புறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்,
- தயார் உடன் சூடான சேர்த்து சாப்பிட நல்ல காம்பினேசன். செய்து அசத்துங்க!