Summer Fruits: மண்டையை பிளக்கும் வெயில்.. கட்டாயம் சாப்பிட வேண்டிய 5 பழங்கள் என்னென்ன?
இந்த கோடை காலத்தில் ஒருசில பழங்கள் நிச்சயமாக சாப்பிடதவறவிடக் கூடாதவை. அந்தப் பழங்களைப் பற்றிக் காண்போம்.
பழங்கள் சிலருக்கு மிகவும் பிடித்தமான உணவாக இருக்கும். மூன்று வேலையும் உணவிற்கு பதிலாக பழங்களை கொடுத்தால் கூட சாப்பிட்டு விடுவார்கள். சிலருக்கு பழங்கள் என்றாலே ஒவ்வாமை. எந்த பழத்தையும் சாப்பிட பிடிக்காது. ஆனால் இந்த கோடை காலத்தில் நம் விருப்பு வெறுப்புக்களை எல்லாம் தள்ளிவைத்துவிட்டு பழங்களை சாப்பிடுவோவாமாக. அதுவும் ஒருசில பழங்கள் கோடையில் நிச்சயமாக தவறவிடக் கூடாதவை. அந்தப் பழங்களைப் பற்றிக் காண்போம்.
தர்பூசணி இல்லாத கோடைக் காலமா?
கோடைக் காலம் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வரும் பழம் தர்பூசணி தான். வெயில் காலத்தில் உட்கொள்ள சிறந்த ஒரு பழமாக இது திகழ்வதன் காரணம் அதன் நீர்ச்சத்து தான். வைட்டமின் ஏ, கே போன்ற முக்கிய வைட்டமின்கள், நார்ச்சத்து ஆகியவற்றுடன் சேர்ந்து 92% நீர்ச்சத்து கொண்ட பழம் இது. புற்றுநோய் மற்றும் இருதய நோய் ஆபத்தினை குறைக்க உதவும் லைக்கோபின் என்ற பிக்மெண்ட் இதில் அதிகம்.
வைட்டமின் சி அள்ளித் தரும் ஆரஞ்சுகள்
கோடையில் அதிகம் விரும்பி உட்கொள்ளப்படும் சிட்ரஸ் பழங்களின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது ஆரஞ்சு பழம் தான். அதீத உடல் வெப்பத்தால் வியர்வையின் மூலம் அதிகளவில் பொட்டாஸியம் வெளியேறும். இது சதைப் பிடிப்பை ஏற்படுத்தலாம். ஆரஞ்சு பழங்களில் வைட்டமின் சி மட்டுமின்றி பொட்டாஸியம், வைட்டமின் ஏ மற்றும் நார்ச்சத்து அதிகளவில் உண்டு. இதன் நீர்ச்சத்து நம் உடம்பில் நீரேற்றத்தை ஏற்பத்துகிறது.
பழுத்து சிவந்த தக்காளிகள்
தக்காளி காய் இல்லையா? பழமா? என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். ஆம், தக்காளி பழம்தான். லைகோபின் பிக்மெண்ட் கொண்ட இன்னொரு பழம் இது. இந்த லைகோபின் பிக்மெண்ட் தான் தக்காளிக்கு அதன் சிவப்பு நிறத்தை தருகிறது. நோய் எதிர்ப்பாற்றலை பாதிக்கும் ரேடிக்கல்ஸை எதிர்ப்பதோடு பல நோய்களை தவிர்க்கவும் செய்கிறது. ஆண்டிஆக்ஸிடண்ட், வைட்டமின் ஏ மற்றும் சி ஆகியவை இதில் உண்டு.
ஸ்ட்ராபெரிக்கள் அனைவரின் ஃபேவிரட் அல்லவா?
பெரும்பாலான பெரிப் பழங்கள் ஆண்டிஆக்ஸிடண்ட்டில் சிறந்தவை, அதே போல தான் எந்த ஸ்ட்ராபெரிக்களும். இதன் சுவைக்கு குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனவரும் ரசிகர் தான். ஸாலட், சாண்ட்விட்ச், கேக், ஜீஸ் அல்லது ஸ்மூத்தி என பல வடிவங்களில் பருகலாம். இதில் வைட்டமின் சி, இரும்புச்சத்து தரும் ஃபோலேட்கள் மற்றும் மேன்கனீஸ் ஆகிய சத்துகள் உள்ளன.
கிர்ணி பழத்தை மற்க்க முடியுமா!
கிர்ணி பழம் அல்லது முலாம் பழம் என அழைக்கப்படும் இப்பழம் குடல் நலத்தை மேம்படுத்துவதோடு நம் நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. கோடையில் வஞ்சகம் இல்லாமல் கிடைக்கும் இப்பழம் அதன் இனிமையான வாடைக்கு பெயர் போனது. பொட்டாஸியம் அதிகம் உள்ளதால் இரத்த அழுத்ததை கட்டுப்படுத்த உதவுகிறது. வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் உள்ளதால் கண் பார்வைக்கும் இப்பழம் நல்லது