News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Egg Paplet : வைரலாகும் முட்டை பாப்லெட்.. ஆம்லெட் தெரியும்.. அது என்ன பாப்லெட்? இதோ ரெசிப்பி..

முட்டைப் பிரியர்களுக்கு ஏற்றதுதான் இந்த முட்டை பாம்ஃப்ரெட் ரெசிபி. முட்டை பாம்ஃப்ரெட் செய்வது எப்படி?

FOLLOW US: 
Share:

இன்று அக்டோபர் 14, 2022 - உலக முட்டை நாள்: இந்த நாளில் இந்த ரெசிப்பியை பகிர்கிறோம்.

தினமும் காலை மாலை என மூன்று வேளையும் முட்டை சாப்பிடும் முட்டை பிரியர் என்றாலும் ஒரே மாதிரியான ரெசிப்பியாக முட்டை செய்து சாப்பிடுவது பலருக்கு போரடித்துவிடும் அப்படியான முட்டைப் பிரியர்களுக்கு ஏற்றதுதான் இந்த முட்டை பாம்ஃப்ரெட் ரெசிபி. முட்டை பாம்ஃப்ரெட் செய்வது எப்படி? முட்டை பாம்ஃப்ரெட் அல்லது பாப்லெட் ரெசிபிக்கு மூன்று முக்கிய ரெசிப்பிக்களை முன்னதாகச் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த ரெசிபிக்கு முட்டை கீமா, ஆம்லெட் மற்றும் முட்டை குழம்பு ஆகிய மூன்று பொருட்களைத் தயாரிக்க வேண்டும்.

View this post on Instagram
 
A post shared by Get Curried (@getcurried)

ஒரு கடாயில் வெண்ணெய் மற்றும் எண்ணெயை சூடாக்கி, அரைத்த கருப்பு மிளகு, சீரகம், நறுக்கிய வெங்காயம், கரம் மசாலா மற்றும் நறுக்கிய வேகவைத்த முட்டையின் வெள்ளைக்கருவை வதக்கவும்.மற்றொரு பக்கம் கொத்துமல்லி இலை மற்றும் இஞ்சியைப் பயன்படுத்தி பச்சை பேஸ்ட்டை தயார் செய்யவும். முட்டையின் வெள்ளைக்கருவில் பேஸ்டை ஊற்றி எலுமிச்சை சாற்றை பிழியவும். முட்டை கீமா தயார்.

முழு முட்டை, மிளகு தூள், சீரக தூள், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒரு ஆம்லெட் தயார் செய்யவும். ஆம்லெட் தயாரானதும், முட்டை கீமாவில் திணித்து ஒரு தட்டில் வைக்கவும்.

அதே கடாயில், அதிக எண்ணெய் மற்றும் வெண்ணெய் சூடாக்கவும். மிளகுத்தூள், சீரகம், வெங்காய விழுது, பூண்டு, இஞ்சி மற்றும் தக்காளி விழுது ஆகியவற்றை வதக்கவும். முட்டை கீமா செய்ய பயன்படுத்தப்படும் வேகவைத்த முட்டையில் இருந்து துருவிய முட்டையின் வெள்ளைக்கருவை சேர்க்கவும். அதனுடன் சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து தாளிக்கவும். தண்ணீர் ஊற்றி குழம்பு கெட்டியாகும் வரை வேகவைக்கவும். ஆம்லெட் தட்டில் கிரேவியை வைக்கவும். இதோ சுவையான முட்டை பாம்ஃப்ரெட் தயார். இதனைத் தனியாகவும் அல்லது சோற்றுடனோ ரொட்டியுடனோ சேர்த்து சாப்பிடலாம்

Published at : 30 Jun 2022 07:16 AM (IST) Tags: Egg recipe omelette Egg recipe Pomfret Egg pomfret Egg curry Egg keema world egg day

தொடர்புடைய செய்திகள்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

டாப் நியூஸ்

Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி

Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி

Breaking News LIVE: ‘கேரளா' மாநிலத்தின் பெயரை ‘கேரளம்' என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!

Breaking News LIVE: ‘கேரளா' மாநிலத்தின் பெயரை ‘கேரளம்' என மாற்றும் தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!

Delhi Water Crisis: தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

Delhi Water Crisis: தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!

T20 World Cup 2024: அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டி நாளில் 88% மழைக்கு வாய்ப்பு..? என்ன நடக்கும்?

T20 World Cup 2024: அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டி நாளில் 88% மழைக்கு வாய்ப்பு..? என்ன நடக்கும்?