News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Amaranth : எலும்பு முதல் குடல் நலன் வரை..தண்டுக்கீரை நன்மைகள் தெரியுமா?

நமக்கு தண்டுக்கீரையை பற்றி நிறையவே தெரிந்திருக்கும். ஆனால் தண்டுக் கீரை விதைகள் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா

FOLLOW US: 
Share:

நமக்கு தண்டுக்கீரையை பற்றி நிறையவே தெரிந்திருக்கும். ஆனால் தண்டுக் கீரை விதைகள் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா. இது பார்ப்பதற்கு வெள்ளை நிறத்தில் தானியங்கள் போன்று காணப்படும். இதை அமர்நாத் என்று அழைக்கின்றனர். ஏராளமான ஊட்டச்சத்துக்களையும் நன்மைகளையும் உள்ளடக்கியது தான் இந்த தண்டுக் கீரை விதைகள். இதில் அதிக புரதச்சத்துக்கள் காணப்படுகிறது. இது அன்றாட நோய்களுக்கு தீர்வளிக்க உதவுகிறது.

அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் என பல சத்துக்கள் காணப்படுகிறது. இதில் அதிகப்படியான நார்ச்சத்துக்கள் இருப்பது நம் செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. இது கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த உதவுகிறது. இது இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த வழி வகுக்கிறது.

இதிலுள்ள நார்ச்சத்துக்கள் இருதய ஆரோக்கியத்திற்கான கொழுப்பை சமப்படுத்த உதவுகிறது. அதே மாதிரி அமர்நாத் கீரை விதைகளில் உள்ள பைட்டோஸ்டெரால்களும் கொழுப்பின் அளவைக் குறைக்க பெரிதும் உதவுகின்றன. பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சியை குறைக்க உதவுகிறது. இது மாரடைப்பு, பக்கவாதம் இவற்றை போக்குகிறது.

தண்டுக்கீரையின் நன்மைகள்

1. புரதச்சத்து அதிகம்..
ஊட்டச்சத்து நிபுணர் லவ்நீத் கூறியதாவது: 100 கிராம் தண்டுக்கீரையில் 13.27 கிராம் புரதச்சத்து உள்ளது. அத்தியாவசிய அமினோ ஆசிட்கள் சரியான சம அளவில் உள்ளதால் , உட்கொள்ளும் புரதத்தில் 87-89% புரதம் உடலுக்கு கிடைக்கிறது. தாவிர அடிப்படையிலான புரதத்தில் சிறந்த மூலமாக தண்டுக்கீரை திகழ்கிறது.  

2. குடல் நலனை மேம்படுத்தும்
“தண்டுக்கீரை குடலில் ப்ரீபையாடிக் தாக்கங்களை கொண்டுள்ளதால் குடல் நலனை மேம்படுத்தும் ‘ஷார்ட் செயின் ஃபேட்டி ஆசிட்கள்’ ஐ அதிகரிக்கிறது’ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர்.  சபோனின் உள்ளடக்கம் மிகக் குறைவாக இருப்பதால், இக்கீரையை ஊறவைக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் விளக்குகிறார். நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் இது மலச்சிக்கலையும் போக்க உதவும்

3.எடை இழப்புக்கு உதவலாம் 
புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால்,  கூடுதல் இடைக் குறைக்க விரும்புவோருக்கு தண்டுக்கீரை பெரிதும் உதவுகிறது. இந்த குளூட்டன் இல்லாத விதைகள் பசியைக் கட்டுப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

4. உங்கள் இதயத்திற்கு நல்லது: 
"பைட்டோஸ்டெரால்கள் இருப்பதால், தண்டுக்கீரையில் கொழுப்பைக் குறைக்கும் பண்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது," என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர்.

5. எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:
 இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், எலும்பு அடர்த்தியை மேம்படுத்தும்.

6. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: 
தண்டுக்கீரை விதையில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதோடு, உங்கள் உடலை ஃப்ரீ ரேடிக்கல்களின் சேதம் மற்றும் வீக்கத்திலிருந்து பாதுகாக்கும்.

7.  கேன்சர் எதிர்ப்பு பண்புகள் 
லோவ்னீட்டின் படி, "தண்டுக்கீரையின் செரிமானத்தின் போது வெளியிடப்படும் பெப்டைடுகள் உடலில் ஆண்டி இன்ஃபளமெண்டரி எதிர்ப்பு விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன. பயோஆக்டிவ் பெப்டைட் ’லுனாசின்’ அதன் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை தானியத்திற்கு வழங்குகிறது.

Published at : 11 May 2023 08:41 AM (IST) Tags: Health benefits Amaranth Rajagira Amarnath keerai

தொடர்புடைய செய்திகள்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

டாப் நியூஸ்

Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!

Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!

கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!

கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!

CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!

CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!

Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!

Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!