Bad Breath Home Remedy: வாய் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இது உங்களுக்குத்தான்...
Bad Breath Home Remedies in Tamil: கடைகளில் விற்கும் வாய் நாற்றத்தைப் போக்கும் பொருட்களை வாங்குவதை விட, வீட்டில் இருக்கும் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் ஒரு சில பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்.
நல்ல சுவையான உணவுகளை உண்ட பின், வாயிலிருந்து வரும் நாற்றத்தை தவிர்க்க முடியாது. ஏனெனில் அதில் பூண்டு, வெங்காயம் போன்றவற்றை அதிகம் சேர்ப்பதால் நாற்றம் ஏற்படுகிறது. ஆகவே நிறைய பேர் சாப்பிட்ட பின், வாய் நாற்றத்தைப் போக்க கடைகளில் விற்கும் நறுமணமிக்க பாக்குகளையோ, ஏதேனும் சுயிங்கங்களையோ வாங்கி மென்று கொண்டு இருப்பார்கள்.
கடைகளில் விற்கும் வாய் நாற்றத்தைப் போக்கும் பொருட்களை வாங்குவதை விட, வீட்டில் இருக்கும் உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் ஒரு சில பொருட்களை எடுத்துக் கொள்ளலாம்.
ஏலக்காய்
உணவு உண்ட பின், பாக்குகளை போடாமல் அப்போது சமையலறையில் இருக்கும் ஏலக்காயை வாயில் போட்டு 20 நிமிடம் மென்றால், துர்நாற்றம் இல்லாமல் இருக்கும்.
கொத்தமல்லி
கொத்தமல்லியை சாப்பிட்டால் வாய் நாற்றம் போகும் என்பது நம்ப முடியாதுதான். ஆனால் உண்மையில் கொத்தமல்லியை உணவுக்கு பின் சாப்பிட்டால் வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம்.
கிராம்பு/லவங்கம்
உணவில் காரம் மற்றும் மணத்திற்கு பயன்படும் பொருளான கிராம்பு மற்றும் லவங்கம், வாய் துர்நாற்றத்தை தடுக்கும். மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் கிராம்பை சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் சரியாகிவிடும் என்று சொல்லப்படுகிறது.
அத்தகைய சிறப்பான கிராம்பு துர்நாற்றத்தை மட்டும் நீக்காமல், தொண்டை கரகரப்பையும் சரிசெய்யும்.
புதினா
நிறைய உணவுகளை அலங்கரிப்பதற்காக புதினாவை எதற்கு பயன்படுத்துகிறோம் தெரியுமா? அதனாலும் வாய் துர்நாற்றம் அகலும்.
கொய்யாப் பழம்
பழங்களில் ஒன்றான கொய்யா, வாய் துர்நாற்றதை நீக்க பயன்படுகிறது. ஆகவே வாய் நாற்றம் அடிக்கும் போது, ஆரோக்கியமற்ற பொருட்களை உண்பதை தவிர்த்து, இந்த கொய்யாப்பழத்தை சாப்பிட்டால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, வாய் துர்நாற்றமும் நீங்கும்.
மாதுளை
அனைவருக்கும் மாதுளையின் நன்மைகள் தெரியும். இத்தகைய மாதுளை ஆரோக்கியமான இதயம் மற்றும் பளபளப்பான சருமத்தை தருவதோடு, இதன் விதையை சாப்பிட்டால், வாயில் நாற்றம் ஏற்படாமல் தடுக்கலாம்.
ஆகவே இனிமேல் கடைக்கு செல்லும் போது, இந்த பழத்தை வாங்கும் பழக்கத்தை வைத்துக்கொண்டால், வாய் துர்நாற்றத்தை தடுக்கலாம். மேற்கூறியவைகளை உணவுக்கு பிறகு சாப்பிட்டால், எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாமல் வாய்துர்நாற்றத்தை போக்குவதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்