மேலும் அறிய

மின் பகிர்மான கழகத்தில் அரசு வேலை; 1794 பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி அழைப்பு- உடனே விண்ணப்பிங்க!

ஆர்வமும் தகுதியும் கொண்ட ஐடிஐ முடித்தவர்கள், அக்டோபர் 2ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் (TANGEDCO) உள்ள 1,794 கள உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி, ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு (தொழிற்பயிற்சி நிலை - II) குறித்த அறிவிக்கையை வெளியிட்டது. இதன்படி கள உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும் தகுதியும் கொண்ட ஐடிஐ முடித்தவர்கள், அக்டோபர் 2ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்

கள உதவியாளர்

தகுதி

தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசியக் குழுமத்தினால் வழங்கப்படும் பின்வரும் ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் தேசிய தொழிற் சான்றிதழ் / தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்

மின்பணியாளர் அல்லது கம்பியாள் அல்லது சிறப்புத் திட்டத்தின் கீழ் மின்னியல் தொழிற்பிரிவு

மின்பணியாளர் அல்லது கம்பியாள் அல்லது மின்னியலில் தேசிய தொழிற்பயிற்சி சான்றிதழ் / தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் பெறாமல் அதே பாடப்பிரிவில் உயர் கல்வித் தகுதி பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்க தகுதியற்றவர்களாவர்.

வயது வரம்பு

இப்பதவிக்கு 01.07.2025 தேதியின்படி, குறைந்தபட்சம் 18 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகப்படியாக பிசி, எம்பிசி பிரிவினர் 34 வரையும், எஸ்சி, எஸ்டி பிரிவினர் 37 வரையும் இருக்கலாம். மாற்றுத்திறனாளிகளுக்கு 44 வயது வரை தளர்வு உள்ளது. முன்னாள் ராணுவத்தினருக்கு 55 வரையும், கணவரை இழந்த பெண்களுக்கு 37 வரையும் தளர்வு உள்ளது. இதர பிரிவை சேர்ந்தவர்களுக்கு அதிகப்படியான வயது வரம்பு 32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் எவ்வளவு?

தமிழ்நாடு அரசின் ஊதியத்தில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் நிலை 2 கீழ் ரூ.18,800 முதல் ரூ.59,900 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு முறை

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (தொழிற்பயிற்சி நிலை) - II, ஒரு படிநிலை எழுத்துத்தேர்வு உடையது. இணையவழி விண்ணப்பத்தில் கோரப்பட்ட உரிமைக்கோரல்களின் அடிப்படையில், தேர்வர் எழுத்துத் தேர்விற்கு அனுமதிக்கப்படுவர்.

தேர்வர்கள் எழுத்துத் தேர்வின் தாள் I மற்றும் தாள் II தேர்விலும் கலந்து கொள்வது கட்டாயமாகும். தாள் I மற்றும் தாள் II ஆகிய இரண்டிலும் கலந்து கொள்ளாத தேர்வர்கள் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலும் கூட, தெரிவிற்கு கருதப்பட மாட்டார்கள்.

தரவரிசை நடைமுறை

எழுத்துத் தேர்வில் தேர்வர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதிப் பட்டியல் அல்லது தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்.

எழுத்துத் தேர்வில் (தாள்-I-ல் பகுதி ஆ, பகுதி இ மற்றும் தாள்-II) தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் இறுதி தரவரிசையை தீர்மானிக்கும்.

கூடுதல் தகவல்களுக்கு:  https://tnpsc.gov.in/Document/tamil/13_2025_CTS_II_DIPLOMA_TAMIL_.pdf

--------

டிஎன்பிஎஸ்சி என்றால் என்ன?

இது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆகும். இதன்மூலமே பெரும்பாலான அரசுப் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 

கள உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு எப்போது?

நவம்பர் 16ஆம் தேதி இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

ஐஐடி மெட்ராஸில் Software Test Engineer வேலை: ரூ.40,000 வரை ஊதியம்!
ஐஐடி மெட்ராஸில் Software Test Engineer வேலை: ரூ.40,000 வரை ஊதியம்!
TNUSRB 2027 தேர்வு கால அட்டவணை வெளியீடு: அரசுப் பணி கனவு நனவாகிறது!
TNUSRB 2027 தேர்வு கால அட்டவணை வெளியீடு: அரசுப் பணி கனவு நனவாகிறது!
விருதுநகர் இளைஞர்களே.. 25% மானியத்துடன் தொழில் கடன்: அரசு வழங்கும் பொன்னான வாய்ப்பு!
விருதுநகர் இளைஞர்களே.. 25% மானியத்துடன் தொழில் கடன்: அரசு வழங்கும் பொன்னான வாய்ப்பு!
உடனே அப்ளை பண்ணுங்க! காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்.. லிங்க் உள்ளே!
உடனே அப்ளை பண்ணுங்க! காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கொட்டிக்கிடக்கும் வேலைகள்.. லிங்க் உள்ளே!

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
S Janaki Funeral: பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
Cancer Risk: அமர்ந்து வேலை செய்வதும், டிவி பார்ப்பதும் தப்பா? 30 நிமிடங்கள், அடுத்த குண்டை போட்ட ஆய்வறிக்கை
அமர்ந்து வேலை செய்வதும், டிவி பார்ப்பதும் தப்பா? 30 நிமிடங்கள், அடுத்த குண்டை போட்ட ஆய்வறிக்கை
Hero VIDA VX2 Plus: புதுசா 4.4KWh பெரிய பேட்டரி, 187KM ரேஞ்ச் - ஹீரோவின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - விலை, விவரங்கள்
துசா 4.4KWh பெரிய பேட்டரி, 187KM ரேஞ்ச் - ஹீரோவின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - விலை, விவரங்கள்
MBBS Seats: 5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
Embed widget