மேலும் அறிய

TNPSC Health Officer Jobs: ரூ.2.09 லட்சம் வரை ஊதியம்; சுகாதார அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்கத் தயாரா?- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி சார்பில் சுகாதார அலுவலர்‌ பதவிக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் நவம்பர் 19ஆம் தேதி வரை இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

டிஎன்பிஎஸ்சி சார்பில் சுகாதார அலுவலர்‌ பதவிக்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் நவம்பர் 19ஆம் தேதி வரை இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு ரூ.2.09 லட்சம் வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தமிழ்நாடு பொது சுகாதாரப்‌ பணிகளில்‌ அடங்கிய சுகாதார அலுவலர்‌ பதவிக்கான காலிப்‌ பணியிடங்களில்‌ நேரடி நியமனம்‌ செய்வதற்கான கணினி வழித்‌ தேர்விற்கு இணைய வழி மூலம்‌ மட்டும் விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன. இதற்கு நவம்பர் 19ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 

இந்த பதவிக்கான தேர்வு கணினி வழித்‌ தேர்வாக நடத்தப்படும்‌.

காலிப்‌ பணியிடங்கள்‌ பற்றிய விவரங்கள்‌ - 12 (முன் கொணரப்பட்ட காலிப் பணியிடங்கள்‌ 3 உட்பட)

பணியின்‌ பெயர்‌ - சுகாதார அலுவலர்‌ (Health Officer)

பதவியின்‌ பெயர்‌ - தமிழ்நாடு பொது சுகாதாரப் பணிகள் (Tamil Nadu Public Health Service)

ஊதியம்:‌ ரூ.56,500- ரூ.2,09,200

வயது வரம்பு: (01.07.2022 அன்றுள்ளபடி)

பிசி, எம்பிசி, பிசி முஸ்லிம், எஸ்சி, எஸ்சி அருந்ததியர்கள் மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு இல்லை

ஏனையோருக்கு- 37 வயது

எனினும் உச்ச வயது வரம்பு இல்லை என்றால்‌ விண்ணப்பதாரர்‌ விளம்பர அறிவிக்கை வெளியிடப்பட்ட நாளன்றோ, பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட நாளன்றோ மற்றும்‌ பதவியில்‌ அமர்த்தப்பட்ட நாளன்றோ 60 வயதினை பூர்த்தி செய்திருக்ககூடாது.

TNPSC Health Officer Jobs: ரூ.2.09 லட்சம் வரை ஊதியம்; சுகாதார அலுவலர் பதவிக்கு விண்ணப்பிக்கத் தயாரா?- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

கல்வித் தகுதி

* டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் அல்லது இந்திய மருத்துவ ஆணையத்தின்கீ அங்கீகாரம் பெற்ற மருத்துவப் பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். 

* தமிழ்நாடு மருத்துவ பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்தவராக இருக்க வேண்டும். 

* பொது சுகாதாரத்தில் டிப்ளமோ பட்டம் பெற்றவராகவோ Social and Preventive Medicine/ Community  Medicine-ல் முதுகலைப் பட்டம் பெற்றவராகவோ இருக்க வேண்டியது அவசியம். 

பதிவுக் கட்டணம்: ரூ.150

தேர்வுக் கட்டணம்: ரூ.200

தேர்வு முறை

கணினி வழித்‌ தேர்வாக நடத்தப்படும்‌. கொள்குறி வகையில் தாள் 1, தாள் 11 என இரண்டாகத் தலா 3 மணித் தேர்வு நடைபெறும். தாள் 2-ல் கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்வும் பொது அறிவு வினாக்களும் இருக்கும். 

அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்பு நடைபெறும். மொத்தம் 510 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெற உள்ளது.

விதிமுறை

* தாள்‌ 1 மற்றும்‌ தாள்‌ 11 இல்‌ பொது அறிவில்‌ பெறும்‌ மதிப்பெண்கள்‌ மட்டும்‌ தர நிர்ணயத்திற்கு கணக்கில்‌ எடுத்துக்‌ கொள்ளப்படும்‌.

* தாள்‌ 1-ற்கான வினாக்கள்‌ ஆங்கிலத்தில்‌ அமைக்கப்படும்‌ மற்றும்‌ தாள்‌ 11 பொது அறிவிற்கான வினாக்கள்‌ தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலத்தில்‌ அமைக்கப்படும்‌.

* விண்ணப்பதாரர்‌ கணினிவழித்‌ தேர்வின்‌ அனைத்து தாள்களிலும்‌ கலந்துகொள்ள வேண்டும்‌.

* விண்ணப்பதாரர்‌ ஏதேனும்‌ ஒரு தாளில்‌ கலந்துகொள்ளவில்லையெனில்‌ அவர்‌ கலந்துகொண்ட இதர தாள்‌ மதிப்பீடு செய்யப்படமாட்டாது.

* விண்ணப்பதாரரின்‌ ஏதேனும்‌ ஒரு தாள்‌ மதிப்பீட்டிற்கு தகுதியற்றதாக கருதப்பட்டால்‌ அவ்விண்ணப்பதாரரின்‌ இதர தாளும்‌ மதிப்பீடு செய்யப்படமாட்டாது.

முழுமையான தகவல்களுக்கு: https://tnpsc.gov.in/Document/tamil/31_2022_HO_TAM.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
Anbil Mahesh Interview: உதயநிதியுடன் மோதல்? கே.என்.நேருவுடன் போட்டா போட்டி? - டப்பு டப்புன்னு போட்டு உடைத்த அமைச்சர் அன்பில் மகேஷ்!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
ஆண்களுடன் பெண்கள் பேச கூடாதா? அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் கடுப்பான நீதிபதி!
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா?: வானிலை மையம் சொல்வது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
School Colleges Leave: மன்மோகன் சிங் மறைவு; பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு சொன்னது என்ன?
"கலங்கரை விளக்கம்.. அரிதிலும் அரிதான தலைவர்" மன்மோகன் சிங்குக்கு ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில்  14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில் 14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Year Ender 2024: போதையால் தள்ளாடும் திமுக, தலைவலியில் ஸ்டாலின், 2024ல் உடன்பிறப்புகள் செய்த சம்பவங்கள்..!
Embed widget