மேலும் அறிய

TNPSC Group 1C: அரிய வாய்ப்பு.. பள்ளிக் கல்வித்துறையில் பணி; ரூ.2.09 லட்சம் வரை ஊதியம்- விண்ணப்பிப்பது எப்படி? 

தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வித்துறை பணியில்‌ மாவட்டக் கல்வி அலுவலர்‌ (குரூப் 1 சி) பணி பதவிக்கான காலிப் பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வித்துறை பணியில்‌ மாவட்டக் கல்வி அலுவலர்‌ (குரூப் 1 சி) பணி பதவிக்கான காலிப் பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

இதற்கான எழுத்துத்‌ தேர்விற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து 13.01.2023 அன்று வரை இணைய வழி மூலம்‌ மட்டுமே விண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகின்றன.

ஒரு முறை பதிவு / நிரந்தரப் பதிவு

விண்ணப்பதாரர்கள் நிரந்தரப் பதிவுக் கட்டணமாக ரூ.150/-ஐ செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப் பதிவில் (OTR) கட்டாயமாக பதிவு செய்துகொள்ள வேண்டும்‌. ஒரு நிரந்தரப்‌ பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது. விண்ணப்பதாரர்‌ தேர்வு எழுத விரும்பும்‌ ஒவ்வொருதேர்விற்கும்‌ தனித்தனியே இணைய வழியில்‌ விண்ணப்பிக்க வேண்டும்‌. 

காலிப் பணியிடங்கள்‌ பற்றிய விவரங்கள்‌

பதவியின்‌ பெயர்‌ மற்றும்‌ பதவிக்‌ குறியீட்டு எண்‌ -  மாவட்ட கல்வி அலுவலர்‌ மற்றும் 2062
பணியின்‌ பெயர்‌ - தமிழ்நாடு பள்ளிக்‌ கல்விப்பணி

காலிப் பணியிடங்களின்‌ எண்ணிக்கை - 11

ஊதியம்
ரூ.56900-  2,09,200/-

காலிப் பணியிடங்களின் பட்டியல்

மொத்தம் - 11
பொதுப் பிரிவு - 2 
பொதுப் பிரிவு பெண்கள் - 1
பிற்படுத்தப்பட்ட வகுப்பு - 2
பிற்படுத்தப்பட்ட வகுப்பு பெண்கள் - 1
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு/ சீர் மரபினர் - 1
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு/ சீர் மரபினர் பெண்கள் - 1
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு/ சீர் மரபினர் [LD (BL)/CP/LC/DF/AC]- 1
ஆதி திராவிடர் - 2

பொதுப் பிரிவினர் 32 வயது வரையிலும் ஆசிரியராகப் பணிபுரிவோர் 42 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். ஆதி திராவிடர்களுக்கு வயது வரம்பு இல்லை. 

மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு இன்று முதல் ஜனவரி 13 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை ஜனவரி 18 முதல் 20ஆம் தேதி இரவு 11.59 வரை விண்ணப்பிக்கலாம்.  

தேர்வு விவரம்

முதல்நிலைத் தேர்வு ஏப்ரல் 9ஆம் தேதி காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். தேர்வு முடிவுகளுக்குப் பிறகு, முதன்மைத் தேர்வு விவரங்கள் வெளியாகும். 

கல்வித் தகுதி
முதுகலைப் படிப்புடன் பி.டி./ பி.எட். பட்டங்களை முடித்திருக்க வேண்டும். 
இடைநிலைக் கல்வியில் தமிழை ஒரு பாடமாக எடுத்துத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

எச்சரிக்கை

* தேர்வாணையத்தின்‌ தெரிவுகள்‌ அனைத்தும்‌ விண்ணப்பதாரரின்‌ தர வரிசைப்படியே மேற்கொள்ளப்படுகின்றன.
*  பொய்யான வாக்குறுதிகளைச்‌ சொல்லி, தவறான வழியில்‌ வேலை வாங்கித்‌ தருவதாகக்‌ கூறும்‌ இடைத்தரகர்களிடம்‌ விண்ணப்பதாரர்கள்‌ மிகவும்‌ கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகின்றனர்‌.
* இது போன்ற தவறான மற்றும்‌ நேர்மையற்றவர்களால்‌ விண்ணப்பதாரர்களுக்கு ஏற்படும்‌ எவ்வித இழப்புக்கும்‌ தேர்வாணையம்‌ எந்தவிதத்திலும்‌ பொறுப்பாகாது.
* இணையவழி விண்ணப்பத்துல்‌ குறிப்பிடப்படும்‌ அனைத்துத்‌ தகவல்களுக்கும்‌ விண்ணப்பதாரரே முழுப்‌ பொறுப்பாவார்‌. விண்ணப்பதாரர்‌, தேர்விற்கு இணையவழியில்‌ விண்ணப்பிக்கும்பொழுது, ஏதேனும்‌ தவறு ஏற்படின்‌, தாங்கள்‌ விண்ணப்பித்த இணையச்சேவை மையங்களையோ, பொதுச்‌
சேவை மையங்களையோ குற்றம்‌ சாட்டக்‌ கூடாது. விண்ணப்பதாரர்‌ பூர்த்தி செய்யப்பட்டஇணையவழி விண்ணப்பத்தினை இறுதியாக சமர்ப்பிக்கும்‌ முன்னர்‌, நன்கு சரிபார்த்த பின்னரே சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்‌.

தேர்வு குறித்த முழுமையான விவரங்களை அறிய: https://tnpsc.gov.in/Document/tamil/37_2022_DEO_TAM.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Fengal Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
EVM Tampered: ”தோல்வியடைந்தால் மட்டும் EVMல் மோசடியா; வென்றால் இல்லை” உச்சநீதிமன்றம் காட்டம்? சொன்னது யாரை ? 
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பிய அதிமுக கவுன்சிலர் - சேலத்தில் பரபரப்பு
DMK VS PMK:
"வேறு வேலை இல்லை" அனல் பறக்கும் அரசியல் களம்.. முதலமைச்சர் கோபத்தின் பின்னணி ?
Fengal Cyclone: நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.!  எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
நாளை புயல் உருவாகும் - வானிலை மையம் அறிவிப்பு.! எப்போது?, எங்கு கரையை கடக்கும் ?
டங்ஸ்டன் விவகாரம்; அழகர் மலையில் ஒன்று கூடிய அரிட்டாபட்டி 48 தாய் கிராம மக்கள்
டங்ஸ்டன் விவகாரம்; அழகர் மலையில் ஒன்று கூடிய அரிட்டாபட்டி 48 தாய் கிராம மக்கள்
Sabarimala Temple: சபரிமலை கோயிலில் எத்தனை பேர் சாமி தரிசனம்? எவ்வளவு வசூல் தெரியுமா..?
சபரிமலை கோயிலில் எத்தனை பேர் சாமி தரிசனம்? எவ்வளவு வசூல் தெரியுமா..?
தம்பியை கொன்ற அண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
தம்பியை கொன்ற அண்ணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Seeman : “ரஜினியை சந்தித்த நான் சங்கி என்றால் நீங்க என்ன சொங்கியா?” சீமான் ஆவேசம்..!
Embed widget