TNHRNCE Recruitment: தூத்துக்குடியில் வேலை; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? ஊதியம் தொடர்பான முழு விவரம்!
Job Alert: முத்தாரம்மன் திருக்கோயிலில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரங்களை காணலாம்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம், குலசேகரன்பட்டினம், அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயிலில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
- அர்ச்சகர்
- உதவி அர்ச்சகர் - முதன்மை உபகோயில்
- நாதஸ்வரம் முதல்மை உபகோயில்
- தவில் முதன்மை உபகோயில்
- மடப்பள்ளி பர்சாரகர் உபகோயில்
- ஓதுவார்
- பரிசாரகர்
- இரவு காவலர்
- பகல் காவலர்
- திருவலகு
- மின் பணியாளர்
- அலுவலக உதவியாளர்
கல்வித் தகுதி
அர்ச்சகர், உதவி அர்ச்சகர் பணிக்கு தமிழில் எடுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். சைவ ஆகமன் ஓராண்டு பயிற்சி நிறைவு செய்ததற்கான சான்றிதழ் இருக்க வேண்டும்.- நாதஸ்வரம் பணிக்கு நாதஸ்வரம் வாசிப்பில் சான்றிதல் பயிற்சி வகுப்பு நிறைவு செய்திருக்க வேண்டும்.
- தவில் வாசிக்க தெரிந்திருக்க வேண்டும். சான்றிதழ் அவசியம்.
- மடப்பள்ளி பணிக்கு திருக்கோவில் பழக்க வழக்கங்களை பின்பற்றி பிரசாதம் மற்றும் நைவேதியம் தயாரிக்கும் முறை அறிந்திருக்க வேண்டும் மேலும், பூஜை மற்றும் சடங்குகள் போன்ற வழக்கங்களை அறிந்திருக்க வேண்டும்.
- ஓதுவார் பயிற்சி வகுப்பு மூன்றாண்டு நிறைவு செய்வதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- இரவு காவலர், பகல் காவலர், திருவலகு ஆகியவற்றிற்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- மின் பணியாளர் பணிக்கு ஐ.டி.ஐ. அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
- அலுவலக உதவியாளர் பணிக்கு 8-ம் வகுக்கு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 1-அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 45 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
- அர்ச்சகர் - ரூ.11,600 -ரூ.36,800
- உதவி அர்ச்சகர் - முதன்மை உபகோயில் - ரூ.13,200 -ரூ.41,800
- நாதஸ்வரம் முதல்மை உபகோயில் - ரூ.15,300 -ரூ.41,800
- தவில் முதன்மை உபகோயில் - ரூ.15,300 -ரூ.48,700
- மடப்பள்ளி பர்சாரகர் உபகோயில் - ரூ.13,200 -ரூ.41,800
- ஓதுவார் - ரூ.12,600 -ரூ.39,900
- பரிசாரகர் - ரூ.12,600 -ரூ.39,900
- இரவு காவலர் - ரூ.11,600 -ரூ.36,800
- பகல் காவலர் - ரூ.11,600 -ரூ.36,800
- திருவலகு - ரூ.10,000 -ரூ.31,500
- மின் பணியாளர் - ரூ.12,600 -ரூ.39,900
- அலுவலக உதவியாளர் - ரூ.12,600 -ரூ.39,900
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணிக்கு தகுதியானவர்கள் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை உரிய தகுதிச்சான்றுகளுடன் நேரடியாகவோ தபால் மூலமாகவோ கோயில் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
https://hrce.tn.gov.in/hrcehome/index.php - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
உதவி ஆணையர் / தக்கார்
முத்தராம்மன் திருக்கோயில்,
குலசேகரன்பட்டினம்,
தூத்துக்குடி.
இது தொடர்பாக கூடுதல் விவரங்களை https://drive.google.com/file/d/19mlK5vPGxJ3l42pp3l1qX1P3Fy-ZntnL/view-என்ற இணையதளத்தில் காணலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 11.08.2023