Job Alert: வேலை வேண்டுமா? அரசு அலுவலகங்கள், பிரபல கல்லூரிகளில் வேலை செய்ய வாய்ப்பு - முழு விவரம்!
Job Alert: இந்த வாரத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டிய வேலைகள் குறித்த விவரங்களை இங்கே காணலாம்.
![Job Alert: வேலை வேண்டுமா? அரசு அலுவலகங்கள், பிரபல கல்லூரிகளில் வேலை செய்ய வாய்ப்பு - முழு விவரம்! The Government and Central Jobs To apply within this week Check out the last date Job Alert: வேலை வேண்டுமா? அரசு அலுவலகங்கள், பிரபல கல்லூரிகளில் வேலை செய்ய வாய்ப்பு - முழு விவரம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/28/013b817696330563ebb4626afda426631701150370449333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
IIT Recruitment
சென்னையில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (Indian Institute of Technology Madras) உள்ள திட்ட அதிகாரி / தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்
திட்ட அதிகாரி / தொழில்நுட்ப உதவியாளர்
கல்வி மற்றும் பிற தகுதிகள்
ஐ.டி.ஐ., டிப்ளமோ, இளங்கலை, முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
C++ தெரிந்திருக்க வேண்டும். PyTorch பற்றிய அனுபவம் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை பணி அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
இதற்கு ரூ.16,000 முதல் ரூ.50,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 10.12.2023 -
பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை அலுவலகத்தில் வேலை
சென்னையில் உள்ள பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர். முழுநேரக் காவலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சென்னையில் உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
பணி விவரம்
நிரந்தர முழுநேரக் காவலர்
தூய்மைப் பணியாளர்
கல்வித் தகுதி:
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
நிரந்தர முழுநேரக் காவலர் -ரூ.15,700 - ரூ.58,100
தூய்மைப் பணியாளர் - ரூ.15,700 - ரூ.58,100
அலுவலக உதவியாளர் -ரூ.15,700 - ரூ.58,100 - மேலும் வாசிக்க..
விண்ணபிக்க கடைசி தேதி - 05.12.2023
பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை
அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரியில் (Arulmigu palaniandavar polytechnic College) காலியாக உள்ள உதவி பேராசிரியர், துறை தலைவர், நூலகர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்படுள்ளது.
பணி விவரம்
- விரிவுரையாளர்
- துறை தலைவர்
- ஆய்வக உதவியாளர்
- நூலகர்
- உதவியாளர் - விண்ணப்பிக்கும் முறை - மேலும் வாசிக்க..
பெண்கள் உதவி மையத்தில் வேலை
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் அனைத்து வகையான வன்முறைகளுக்கு உள்ளான பெண்களுக்கு ஆதரவு தரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (One Stop Cenre) உள்ள வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவாட்டத்தில் தனியார் மற்றும் பொது இடங்களில், குடும்பத்தில், சமூதாயத்தில் மற்றும் பணிபுரியும் இடத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பெண்கள் பணிபுரிய தகுதியான பெண்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் வாசிக்க..
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.12.2023
*
திருவாரூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பணியிடம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது.
பணி விவரம்:
ஈப்பு ஓட்டுநர்
அலுவலக உதவியாளார்
பணியிடம் - கொரடாச்சேரி
கல்வி மற்றும் பிற தகுதிகள்..
ஈப்பு ஓட்டுநர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மோட்டார் வாகன சட்டம் 1988-ன்படி தகுதி வாய்ந்த அலுவலரால் வழங்கப்பட்ட இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். வாகனம் ஓட்டுவதில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் நடைமுறை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
அலுவலக தலைவர், பிரிவு தலைவர், பணியாளர்களின் உடனிருத்தல் கோப்புகள் எடுத்து செல்லுதல் மற்றும் பிற அலுவலக பணிகள் செய்தல்.
அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்தப் பணியிடங்களுக்கு பொதுப்பிரிவு பிரிவினருக்கு 37 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பட்டியலின பிரிவினர் /பழங்குடியின பிரிவினர், ஆதரவற்ற விதவை உள்ளிட்டோருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
ஈப்பு ஓட்டுநர் - ரூ.19,500 - ரூ.62,000/-
அலுவலக உதவியாளர் - ரூ.15,700/- ரூ. 50,100 (1300 GP)
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள்:
1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
2. இன சுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
3. ஒவ்வொரு பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
4. விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட மாவட்டத்திற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.
5. அரசு விதிகளின்படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
6. சுய முகவரியுடன் கூடிய ரூ.25/- அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட அஞ்சல் உறை -1 (10*4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.
அஞ்சல் அனுப்பப்பட வேண்டிய முகவரி:
ஆணையர்,
ஊராட்சி ஒன்றியம், கொரடாச்சேரி
எப்படி விண்ணப்பிப்பது?
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி நேர்காணல் கடிதம் (Call Letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்ய https://tirupathur.nic.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.12.2023 மாலை 05.45 வரை
அதிகாரப்பூர்வ வலைதள முகவரி- https://cdn.s3waas.gov.in/s3e46de7e1bcaaced9a54f1e9d0d2f800d/uploads/2023/11/2023111732.pdf - என்ற லிங்கை கிளிக் செய்து அறிவிப்பின் முழு விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.
ஆல் தி பெஸ்ட்..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)