TNeGA Recruitment:தமிழ்நாடு மின்சார ஆணையத்தில் வேலை; 24-ம் தேதி தகுதித் தேர்வு- விண்ணப்பிக்க நாளையே கடைசி
TNeGA Recruitment: தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆணையர் அலுவலகத்தில், பணிக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி.
![TNeGA Recruitment:தமிழ்நாடு மின்சார ஆணையத்தில் வேலை; 24-ம் தேதி தகுதித் தேர்வு- விண்ணப்பிக்க நாளையே கடைசி Tamil Nadu e-Governance Agency e-District Manager in Kancheepuram Namakkal Nagapattinam Perambalur Check the details TNeGA Recruitment:தமிழ்நாடு மின்சார ஆணையத்தில் வேலை; 24-ம் தேதி தகுதித் தேர்வு- விண்ணப்பிக்க நாளையே கடைசி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/10/b16c6ceb38ecc64ace2b794eacebfce71694330484913333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடத்திற்காக வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி.
பணியிட விவரம்
e-District Manager
கல்வித் தகுதி:
- இதற்கு விண்ணப்பிக்க இளங்கலை பொறியியல், பி.டெக்., (கம்யூட்டர் சயின்ஸ், தொழில்நுட்ப அறிவியல்) உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- எம்.பி.ஏ. எம்.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸ், எம்.எஸ்.சி. ஐ.டி, சாஃப்வேர் பொறியியல் ஆகிய படிப்புகளில் பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
- SSLC/ HSC/ UG/ PG என்ற முறையில் படித்திருக்க வேண்டும். 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
- இதற்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.’
வயது வரம்பு விவரம்:
இதற்கு விண்ணப்பிக்க 21 வயது நிரம்பியவர்களாகவும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
பணியிட விவரம்
- நாமக்கல்
- நாகப்பட்டினம்
- பெரம்பலூர்
- திருச்சிராப்பள்ளி
- திருப்பூர்
- வேலூர்
- விழுப்புரம்
- காஞ்சிபுரம்
தேர்வு செய்யப்படும் முறை:
இதற்கு கம்யூட்டர் தேர்வு நடத்தப்படும். 90 நிமிடங்கள் நடைபெறும் தகுதித் தேர்வில் 100 MCQ கேள்விகள் கேட்கப்படும். நெகட்டிவ் மார்க் முறை பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடத்திட்டம்
ஆங்கிலம். கம்யூட்டர், C, C++., JAVA, நெட்வோர்க்கிங், இண்டர்நெட் டெக்னாலஜிஸ், ஹார்ட்வேர், டேட்டாபேஸ் மேனேஸ்மெண்ட் சிஸ்டம்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
இந்தத் தகுதித் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு கட்டணம்
இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.250 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
தேர்வு நடைபெறும் நாள் - 24.09.2023
விண்ணப்பிப்பது எப்படி?
https://tnega.tn.gov.in/ - என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 11.09.2023 - 6 மணி வரை
விண்ணப்பிக்க https://tnega-edm.onlineregistrationform.org/TEG/ - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
https://tnega-edm.onlineregistrationform.org/TEG/instructions2.jsp - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
திருப்பதியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி குறித்த கூடுதல் விவரங்கள்:
- துணை நூலகர்
- துணை பதிவாளர்
- ஜூனியர் கண்காணிப்பாளர்
- ஜூனியர் உதவியாளர்
- ஜூனியர் இந்தி உதவியாளர்
- ஜூனியர் தொழில்நுட்ப கண்காணிப்பாளர்
- ஜூனியர் தொழில்நுட்ப அலுவலர்
- உடற்பயிற்சியாளர்
கல்வித் தகுதி:
- துணை நூலகர் பணியிடத்திற்கு Library Science / Information Science / Documentation படிப்பில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் 8 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- துணை பதிவாளர் பணியிடத்திற்கு முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 55 சதவீதம் மதிப்பெண் இருக்க வேண்டும். Finance & Accounts/ CA/ICWA படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- ஜூனியர் கண்காணிப்பாளர் பணியிடத்திற்கு ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 6 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- ஜூனியர் உதவியாளர் பணிக்கு எதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கம்யூட்டர் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
- ஜூனியர் இந்தி உதவியாளர் இந்தி, ஆங்கிலம் ஆகியவற்றில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இந்தப் பணிகளுக்கு Pay Level -12, Pay Level-6, Pay Level -3, Pay Level-5 என்ற வரைவுபடி ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
https://iittp.plumerp.co.in/prod/iittirupati/staffrecruitment - என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை:
- குரூப் ஏ பணிக்கு ஸ்கிரீனிங் டெஸ்ட், நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
- குரூப் பி & சி பணிக்கு Objective- Based Test, எழுத்துத் தேர்வு, ட்ரேட் டெஸ்ட் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
தொடர்புக்கு .-- rmt_queries@iittp.ac.in
பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும் - https://iittp.ac.in/pdfs/recruitment/2023/Detailed%20advertisement%20-%20Staff%2002-2023.pdf
விண்ணப்பிக்க கடைசி தேதி - 22.09.2023
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)