SSC CHSL: மத்திய அரசுத்துறைகளில் 3,131 காலி இடங்கள்- கட்டணம், தகுதி, விண்ணப்பிக்கும் முறை!
SSC CHSL 2025: மத்திய அரசுத்துறைகளில் 3,131 பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டுள்ளது.

எஸ்எஸ்சி எனப்படும் பணியாளர் தேர்வு ஆணையம் ஒருங்கிணைந்த மேல்நிலைப் பள்ளி அளவிலான (CHSL) தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. இதன்படி, 3,131 பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜூலை 18ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம். ஜூலை 19ஆம் தேதி இரவு 11 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம்.
முதல்கட்டமாக டயர் 1 தேர்வு, கணினி மூலம் செப்டம்பர் 8 முதல் 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் (3,712) குறைவு ஆகும். இந்த ஆண்டின் காலியிடங்கள்
• கீழ்நிலை எழுத்தர் (LDC)
• ஜூனியர் செயலக உதவியாளர் (JSA)
• அஞ்சல் உதவியாளர் (PA)
• வரிசைப்படுத்தும் உதவியாளர் (SA)
• தரவு உள்ளீட்டு ஆபரேட்டர் (DEO)
ஆகிய பணியிடங்களைக் கொண்டு நிரப்பப்பட உள்ளன.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
12ஆம் வகுப்பு அல்லது இதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம், கலாச்சார அமைச்சகம் மற்றும் பணியாளர் தேர்வு ஆணையம் ஆகியவற்றில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (DEO)/ DEO கிரேடு ‘A’ பணிக்கு, விண்ணப்பதாரர்கள் அறிவியல் பிரிவு மற்றும் கணிதத்தை ஒரு பாடமாகக் கொண்டு 12ஆம் வகுப்பை முடித்திருக்க வேண்டும்.
ஆகஸ்ட் 1 2025-ல் 18 முதல் 27 வயதை உடையவர்களாக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, குறிப்பிட்ட சமூகப் பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?
ஆன்லைன் மூலமாகவே மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியும். பொதுப் பிரிவினருக்கு ரூ.100 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதேநேரத்தில், எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத் திறனாளிகள் / பெண் தேர்வர்கள் கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை.
விண்ணப்பிப்பது எப்படி?
- தேர்வர்கள் SSC –ன் அதிகாரப்பூர்வ போர்ட்டலான ssc.gov.in க்குச் செல்லவும்
- "விண்ணப்பிக்கவும்" பகுதியைக் கிளிக் செய்து CHSL இணைப்பைத் தேர்ந்தெடுக்கவும்
- புதிய பயனர்கள் லாகின் சான்றுகளைப் பெற, பதிவு செய்ய வேண்டும்
- உள்நுழைந்து ஆன்லைன் படிவத்தை நிரப்பவும்
- தேவையான ஆவணங்களைப் பதிவேற்றி விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்
- படிவத்தைச் சமர்ப்பித்து எதிர்கால பயன்பாட்டிற்காக ஒரு நகலை சேமிக்கவும்
தேர்வு நடைறை எப்படி?
இந்த ஆட்சேர்ப்பு செயல்முறை மூன்று நிலைகளை உள்ளடக்கியது:
- அடுக்கு 1: ஆன்லைன் அப்ஜெக்டிவ் வகை தேர்வு
- அடுக்கு 2 : விளக்கமான மற்றும் திறன் சார்ந்த தேர்வுகள்
- திறன்/ தட்டச்சுத் தேர்வு: பதவியைப் பொறுத்து மாறும்.
இதுதொடர்பான முழு விவரங்களை https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_adv_chsl_2025.pdf என்ற அறிவிக்கையை க்ளிக் செய்து காணலாம்.
வேறு சந்தேகங்களுக்கு: 18003093063





















