மேலும் அறிய

SBI Recruitment: எஸ்பிஐ-ல் 410 காலிப் பணியிடங்கள் இருக்கு.. வேலை விவரம் இதுதான்! விண்ணப்பிப்பது எப்படி?

SBI Recruitment:பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 410  சிறப்பு கேடர் அதிகாரிகளின் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 410  சிறப்பு கேடர் அதிகாரிகளின் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் அடையாளச் சான்று, வயது சான்று, சாதிச் சான்றிதழ், கல்வித் தகுதி, அனுபவம் போன்றவை உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் தங்கள்து புகைப்படம் மற்றும் கையெழுத்துடன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும்.

பணி விவரம்:

 ரிலேஷன்ஷிப் மேலாளர்- 335

வாடிக்கையாளர் ரிலேஷன்ஷிப் எக்ஸிக்யூடிவ் -75

உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

கல்வித் தகுதி: 

விண்ணப்பதாரர்கள்  முதுநிலை பட்டப்படிப்பு உடன் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் தொடர்புடைய பணியில் முன் அனுபவத்துடன் பெற்றிருக்க வேண்டும். வாடிக்கையாளர் ரிலேஷன்ஷிப் எக்ஸிக்யூடிவ் பணிக்கு பட்டப்படிப்புடன் நன்றாக பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

ரிலேஷன்ஷிப் மேலாளர் பணியிடங்களுக்கு 23 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வாடிக்கையாளார் ரிலேஷன்ஷிப் எக்ஸிக்யூடிவ் பணியிடங்களுக்கு 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : 

விண்ணப்பதாரர்கள் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தால் 750 ரூபாய் செலுத்த வேண்டும்.  தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் முன்னாள் அரசு ஊழியர்களாக இருந்தால் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எப்படி விண்ணப்பிப்பது..?

  • எஸ்.பி.ஐ.-இன் https://www.onlinesbi.sbi/ அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
  • https://bank.sbi/careers அல்லது  https://www.sbi.co.in/careers என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
  • விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.
  • பின்னர், விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும். உங்களுடைய அப்ளிகேசனை பிரிண்ட் எடுத்து கொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வில் பங்கேற்று அதில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில்  தகுதிப் பட்டியலைத் தயாரிக்கப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் கட் ஆஃப் மதிப்பெண்களைப் பெற்றிருந்தால், அத்தகைய விண்ணப்பதாரர்கள் அவர்களின் வயதுக்கு ஏற்ப இறங்கு வரிசையில் தரவரிசைப்படுத்தப்படுவார்கள். 

ஊதியம்:

ஆண்டு ஊதியத்தின் விவரம்

  • Relationship Manager – ரூ.5 -ரூ.15 இலட்சம் 
  • Customer Relationship Executive – ரூ.2.50 - 4 இலட்சம் 

முகவரி மற்றும் தொடர்ப்புக்கு:

State Bank of India
Central Recruitment & Promotion Department
Corporate Centre, Mumbai
Phone: 022-22820427

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.09.2022

முழு அறிவிப்பு குறித்து விவரம் அறிய https://sbi.co.in/documents/77530/25386736/300822-ADV_RAW_NEW_FINAL.pdf/fa5658ce-5aa3-3e6a-e324-8c2d8a0342fa?t=1661863308809 என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

Freelancer Jhansi Rani. MA
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Top 5 Scooters in India: Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Honda Shine 100: குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
ABP Premium

வீடியோ

”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
TN Power Shutdown: மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
மக்களே தயாரா இருங்க.! திருச்சி, கோவை, சேலம் உட்பட முக்கிய பகுதிகளில் நாளை(11-12-25) மின் தடை
Top 5 Scooters in India: Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Activa முதல் Access வரை; இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்கள், விலை, அம்சங்கள தெரிஞ்சுக்கோங்க
Honda Shine 100: குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
குறைந்த விலை.. 65 கிமீ மைலேஜ்.. ஸ்பிளெண்டருக்கு டஃப் கொடுக்கும் பைக் இதுதான்...
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Karoline Leavitt: பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
பெண்கள வர்ணிச்சு மாட்டுறதே இந்த ட்ரம்புக்கு வேலையா போச்சு; இந்த முறை யார்னு பாருங்க.?
Trump Deadline to Zelensky: தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
Embed widget