SBI Recruitment 2023: எஸ்.பி.ஐ. வங்கியில் வேலை; 5,280 பணியிடங்கள் - உடனே விண்ணப்பிங்க!
SBI Recruitment 2023: எஸ்.பி.ஐ. அறிவித்துள்ள வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம். தமிழ்நாட்டில் மட்டும் 125 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள 'Circle Based Officers' அதிகாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (12.12.2023) கடைசி தேதி.
பணி விவரம்
Circle Based Officers
மொத்த பணியிடங்கள் - 5280
தமிழ்நாடு, பாண்டிச்சேரி வட்டத்தில் மட்டும் 125 பணியிடங்கள் இந்த அறிவிப்பின் மூலம் நிரப்பப்பட உள்ளன.
குஜராத், ஆந்திரபிரதேசம், கர்நாடகா, லடாக், தமிழ்நாடு,புதுச்சேரி, தெலங்கானா, மேற்கு வங்காளம், சிக்கிம், அசாம், மிசோரம், திரிபுரா, பீகார், கேரளா, ஜெய்பூர், புதுடெல்லி, லக்னோ, கொல்கத்தா, மும்பை, சண்டிகர், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கி கிளைகளில் இந்த வேலைவாய்ப்பின் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வி மற்றும் தகுதிகள்
இதற்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
மருத்துவம், பொறியியல், பட்ட கணக்கர், Cost Accountant ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்களும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க 30.10.2024 முதல் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
தெரிவு செய்யும் முறை:
இதற்கு முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இதற்கு 6 மாதம் Probation காலம் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் தேர்வு பாடத்திட்டம்
விண்ணப்ப கட்டணம்
ஊதிய விவரம்
( ரூ.36000-1490/7-46430-1740/2- 49910-1990/7-63840 applicable to Junior Management Grade Scale-I plus )
விண்ணப்பிப்பது எப்படி?
பாரத ஸ்டேட் வங்கியின் இணையதள முகவரியான https://sbi.co.in/ அல்லது
https://www.sbi.co.in/web/careers/current-openings - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பதை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
இது தொடர்பான சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள - 022-22820427 ( 11:00 AM and 05:00 PM வங்கி வேலைநாட்களில்) மின்னஞ்சல் முகவரி - http://cgrs.ibps.in
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://sbi.co.in/documents/77530/36548767/212223-Final+Advertisement.pdf/3a3945e6-d8ee-fc51-8992-99d0ff942541?t=1700564748917 - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 12.12.2023
ஆன்லைன் தேர்வு நடைபெறும் உத்தேசிக்கப்பட்ட தேதி - ஜனவரி 2024
IDBI வங்கி வேலைவாய்ப்பு
பிரபல தனியார் வங்கியான ஐ.டி.பி.ஐ. -யில் ( IDBI Bank ) உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் 86 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் பற்றி காணலாம்.
பணி விவரம்
- இணை பொது மேலாளர் (Deputy General Manager (DGM) - (Grade D))
- துணை பொது மேலாளர் (Asst. General Manager (AGM) - (Grade C) )
- மேலாளர் ( Manager - (Grade B))
Audit-Information System (IS) , Fraud Risk Management, Risk Management, Corporate Credit/ Retail Banking (including Retail Credit), Infrastructure Management Department (IMD) - Premises, Security உள்ளிட்ட பிரிவுகளில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கல்வித் தகுதி:
- இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க பி.டெக், இளங்கலை பொறியியல், பி.சி.ஏ., பி.எஸ்.சி. கம்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., முதுகலை ஐ.டி., எம்.எஸ்.சி., எம்.சி.ஏ., பி.எஸ்.சி. கணிதம், Statistics, CA/MBA (Specialization in Banking/ Finance) /CFA/FRM/ICWA ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- JAIIB/CAIIB/MBA என்ற படிப்புகளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- இதற்கு தேவையான கல்வித் தகுதிகள் குறித்து காண https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advt-Specialist-Officer-Spl-2024-25.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
வயது வரம்பு
இணை பொது மேலாளர் (Deputy General Manager (DGM) - (Grade D)) - 35- 45 வயது வரை
துணை பொது மேலாளர் (Asst. General Manager (AGM) - (Grade C) ) - 28 - 40 வயது வரை
மேலாளர் ( Manager - (Grade B)) - 25 -35 வயது வரை
ஊதிய விவரம்
இணை பொது மேலாளர் (Deputy General Manager (DGM) - (Grade D)) - ரூ.76010/-
துணை பொது மேலாளர் (Asst. General Manager (AGM) - (Grade C) ) - ரூ.63,840/-
மேலாளர் ( Manager - (Grade B)) - ரூ.48,170/-
ஓராண்டுகால probation முடிந்தபிறகு பணி நிரந்தரம் குறித்து முடிவெடுக்கப்படும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணி இடம்:
இதற்கு தேர்ந்தெடுக்கப்படுவர்கள் நாடு முழுவதும் உள்ள வங்கியின் அலுலகத்தில் நியமிக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணிகளுக்கு நேர்முக தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். அவர்களுக்கு நேர்காணல் நடைபெறும் தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இதற்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். https://www.idbibank.in/- என்ற லிங்கி கிள்க் செய்யவும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advt-Specialist-Officer-Spl-2024-25.pdf-என்ற இணைப்பில் பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
https://www.idbibank.in/ - என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும். - பின்னர், “CAREERS/CURRENT OPENINGS” என்பதை க்ளிக் செய்யவும்.
- “Recruitment of Specialist Officer – 2024-25” பக்கத்திற்கு செல்லவும்.
- “APPLY ONLINE” என்பதை க்ளிக் செய்யவும்.
- பின் விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்ட தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 25.12.2023
மேலும் கூடுதல் விவரங்களுக்கு.. https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advt-Specialist-Officer-Spl-2024-25.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.