RBI Job Vacancy: ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு! 950 உதவியாளர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
RBI Recruitment 2022: 20 முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மார்ச் 26,27 ஆம் தேதிகளில் முதன்மை தேர்வுகள் நடைபெறும். இந்த தேர்வு மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறுகிறது
ஆர்.பி.ஐ (RBI) Reserve Bank of India வங்கியானது 2022 ஆம் ஆண்டிற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 2022 ஆம் ஆண்டு ஆட்சேர்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கான நேரடி அதிகாரபூர்வ இணைப்பை இங்கு பெறலாம். இந்திய ரிசர்வ் வங்கி உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் மூலம் 950 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தற்போதைய ஆர்.பி.ஐ வேலைக்கான அறிவிப்புகள் மற்றும் விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. புதிய மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள் தங்களுக்கான அறிவிப்பாக இதை கருதலாம். 17 பிப்ரவரி 2022 அன்று இந்த அறிவிப்பை ஆர்.பி.ஐ நிறுவனம் வெளியிட்டுள்ளது. RBI தகுதி, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை கீழே விளக்கப்பட்டுள்ளது மேலும் www.opportunities.rbi.org.in என்ற இணையதளத்திலும் கிடைக்கிறது.
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின்படி விண்ணப்பப் படிவத்தை 17.02.2022 முதல் 08.03.2022 வரை RBI க்கு அனுப்ப வேண்டும். இதே தேதிக்குள் தேர்வு கட்டணத்தையும் செலுத்த வேண்டும். மார்ச் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பத்தை நகல் எடுத்துக்கொள்ளலாம். மார்ச் 26,27 ஆம் தேதிகளில் முதன்மை தேர்வுகள் நடைபெறும். 20 முதல் 28 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் 02/02/1994 க்கு முன்னதாகவும், 01/02/2002 க்குப் பிறகும் பிறந்திருக்க வேண்டும் (இரு நாட்களும் உட்பட). இந்த வேலைக்கான காலிப்பணியிடங்களாக இந்தியா முழுவதும் 950 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பட்டியலினத்தவர்கள், பட்டியலின பழங்குடியினர்களுக்கு 5 வருடமும், ஒபிசி பட்டியலை சேர்ந்தவர்களுக்கு 3 வருடமும், மாற்றுத்திறனாளிகளுக்கு 13 வருடங்களும், மாற்றுத்திரனாளிகளுள் பட்டியலினத்தவர்கள், பட்டியலின பழங்குடியினருக்கு 15 வருடமும், கைம்பெண், விவாகரத்து ஆன பெண்களுக்கு 10 வருடமும், வயது வரம்பு நீட்டிக்க படுகிறது. முன்னாள் ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கும், அவர்களது பணி அனுபவ வருடங்கள் உடன் 3 வருட கூட்டி நீட்டிப்பு அதிகபட்சம் 50 வயது வரை வழங்கப்படுகிறது. இந்த தேர்வு மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு நடைபெறுகிறது. மொத்தம் 60 நிமிடங்கள் வழங்கப்படுகிறது. இதற்கான கல்வித்தகுதியாக ஏதோ ஒரு பட்டப்படிப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர் - Reserve Bank Of India
பதவி பெயர் - உதவியாளர்
வகை - மத்திய அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடம் - 950
வேலை இடம் - Across India
விண்ணப்பிக்கும் முறை - Online
கடைசி தேதி - 08.03.2022
கல்வித்தகுதி - பட்டப்படிப்பு