டிப்ளமோ எலெக்ட்ரிக்கல் மாணவரா நீங்கள்? சம்பளத்தோடு ட்ரெய்னியாக வாய்ப்பு - விவரம்!
பவர் கிரிட் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் டிப்ளமோ டிரெய்னியாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு பயிற்சியின் போது உதவித்தொகையாக ரூ. 27,500 வழங்கப்படும்
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் டிப்ளமோ டிரெய்னி பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் செப்டம்பர் 18 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பித்துக்கொள்ளுங்கள்.
இந்தியாவில் குருகிராமை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் ஒரு பொதுத்துறை நிறுவனம் தான் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட். இங்கிருந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மொத்த மின்சார பரிமாற்றம் நடைபெறும். இங்கு பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றி வரும் நிலையில் அவ்வப்போது, அப்ரன்டிஸ் எனப்படும் டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகும். அதன்படி தற்போது பவர் கிரிட் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா பவர் கிரிட் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் டிப்ளமோ டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இதற்கு என்னென்ன தகுதிகள் தேவை? என்பது குறித்து விரிவாக அறிந்துக்கொள்வோம்..
பவர் கிரிட் கார்ப்பரேன் ஆஃப் இந்தியாவில் பணி:
கல்வித்தகுதி: Diploma Electrical பிரிவில் டிப்ளமோ படித்திருப்பதோடு தேர்வில் 70 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.
காலிப்பணியிடங்கள்: டிப்ளமோ டிரெய்னிக்கான 3 இடங்கள் காலியாக உள்ளது.
வயது வரம்பு: 12.07.2021 தேதியின் படி விண்ணப்பத்தாரர்கள் 27 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
பவர் கிரிட் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் பணிபுரிய வேண்டும் என்று நினைப்பவர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எனவே விண்ணப்பதாரர்கள் ரூ. 300 கட்டணம் செலுத்தி www.powergrid.in என்ற அதிகாரப்புர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் ஆன்லைன் மூலம் வருகின்ற செப்டம்பர் 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு எழுத்துத்தேர்வு மற்றும் சிபிடி தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வாகும் நபர்கள் பவர் கிரிட் கார்ப்பரேசன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் டிப்ளமோ டிரெய்னியாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்களுக்கு பயிற்சியின் போது உதவித்தொகையாக ரூ. 27,500 வழங்கப்படும் எனவும் வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்கள் இந்தியாவில் எந்த இடத்திலும் பணியமர்த்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பவர் கிரிட் ஆஃப் இந்தியா லிமிடெட் மூலம் ஒவ்வொரு ஆண்டும் அப்ரன்டிஸாக பணிபுரிவதற்கான வாய்ப்புகள் வெளியாகும். இந்தாண்டு எலக்ட்ரிக் பிரிவில் டிப்ளமோ படித்த மாணவர்கள் டிப்ளமோ டிரெய்னியாக ஆவதற்கு அரிய வாய்ப்புகள் வெளியாகியுள்ள நிலையில் அனைவரும் இதனைப்பயன்படுத்திக்கொள்ளவும்.