மேலும் அறிய
மதுரை இளைஞர்களுக்கு PM Internship: மாதம் ரூ.9000, அரசு சான்றிதழுடன் திறன் மேம்பாடு!
இணையதளத்தில் இலவசமாக பதிவு செய்து, மதுரை மாவட்டத்தில் உள்ள வாய்ப்புகளைப் பார்வையிட்டு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள்
Source : ABPLIVE AI
இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதே முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்திலுள்ள நிறுவனங்களில் தற்போது 150 இடங்கள் Internship காக உள்ளன.
பிரதமரின் வேலைவாய்ப்பு பயிற்சித் திட்டம்
மதுரை மாவட்டத்தில் இந்திய அரசின் கார்ப்பரேட் நிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் வேலைவாய்ப்பு பயிற்சித் திட்டத்தின் (PM Internship Scheme) மூலம் இளைஞர்களுக்கு முன்னணி நிறுவனங்களில் நேரடி தொழில்துறை அனுபவம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் கல்வியில் பெற்ற அறிவை நடைமுறை தொழில்சார் அனுபவத்துடன் இணைத்து, இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துவதே முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்திலுள்ள நிறுவனங்களில் தற்போது 150 இடங்கள் Internship காக உள்ளன.
திட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இந்திய குடிமக்களாகவும், விண்ணப்பிக்கும் நாளில் 18 முதல் 25 வயதுக்குள் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, ITI, Polytechnic Diploma, பட்டப்படிப்பு மற்றும் முதுநிலைப் படிப்பு முடித்தவர்கள், திட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம். முழுநேர வேலை மற்றும் முழுநேர கல்வியில் இருப்பவர்களுக்கு பொதுவாக தகுதி இல்லை; இணைய வழி, தொலைதூர கல்வி பயில்பவர்கள் மற்றும் இறுதியாண்டு பட்டப்படிப்பு, முதுநிலை மாணவர்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு பொதுவாக 6 அல்லது 9 மாதங்கள் Internship வாய்ப்பு வழங்கப்படும். Internship-ல் சேர்ந்து தகுதி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.9,000 வரை நிதியுதவியும், ஒருமுறை ரூ.6,000 உதவித்தொகையும், மேலும் ஆயுள் மற்றும் விபத்து காப்பீட்டு பாதுகாப்பும் வழங்கப்படுகிறது. Internship-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும்.
வாய்ப்புகளைப் பார்வையிட்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
மேலும் தகவல்கள் பெற மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் விடுதி வளாகம், மூன்றுமாவடி, மதுரை-7 மற்றும் மாவட்ட திறன் அலுவலகம்(திறனகம்), மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கே. புதூர், மதுரை ஆகிய அலுவலகங்களை நேரிலும், 8508200750/8807883843 தொலைபேசி எண்களிலும், 1800-11-6090 என்ற உதவி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். தகுதியுடைய இளைஞர்கள் www.pminternship.mca.gov.in என்ற இணையதளத்தில் இலவசமாக பதிவு செய்து, மதுரை மாவட்டத்தில் உள்ள வாய்ப்புகளைப் பார்வையிட்டு விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.நிஷாந்த் கிருஷ்ணா, தெரிவித்துள்ளார்.
Advertisement
தலைப்பு செய்திகள்
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு
வேலைவாய்ப்பு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















