புதுச்சேரி மருத்துவமனையில் செவிலியர் பணி: 4000 விண்ணப்பங்கள் குவிந்தன! தேர்வு இல்லையென்றால் என்ன நடக்கும்?
புதுச்சேரி : புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தேர்வு இல்லாமல் பணியில் அமர்த்துவதற்கு இதுவரை 4 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தேர்வு இல்லாமல் பணியில் அமர்த்துவதற்கு இதுவரை 4 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.
226-செவிலியர் பணிக்கான விண்ணப்பங்களுக்கு 4000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (IGMC) தேர்வு இல்லாமல் செவிலியர் பணியில் நியமிப்பதற்கான அறிவிப்பைத் தொடர்ந்து, இதுவரை 4,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
இது குறித்து மாணவர் பெற்றோர் நல சங்க வை.பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் புதியதாக தேர்வு செய்யப்படவுள்ள செவிலியர் பணி சம்மந்தமாக கடந்த 07.10.2025-ம் தேதியில் பதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 226-செவிலியர் பணிக்கான விண்ணப்பங்களை 06.11.2025 வரை 4000-க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் விண்ணப்பித்துள்ளதாக தெரியவருகிறது.
கொரோனா களத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு 5-விழுக்காடு மதிப்பெண் வேண்டும்
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியாற்றிய செவிலியர்களுக்கு 5-விழுக்காடு மதிப்பெண்ணும், அதே போல வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறையான ஆவணங்கள் மற்றும் மூப்பு அடிப்படையில் செவிலியர் படிப்பு படித்து பதிவு செய்துள்ள மாணாக்கர்களுக்கு ஆண்டொன்றுக்கு 1/2 மதிப்பெண் அடிப்படையில் 10-ஆண்டுகளுக்கு 15-மதிப்பெண் வழங்கப்படும் என துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வர் அறிவித்ததின் அடிப்படையில் தற்போது விண்ணப்பித்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
நேற்று 06.11.2025-மாலை 5-மணியோடு விண்ணப்பிக்கும் காலம் முடிவடைந்த நிலையில், மேற்படி இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை நிர்வாகம் சற்றேறக்குறைய 4000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில் தகுதி மற்றும் முழுமை பெற்ற விண்ணப்பங்களை சரிபார்த்து புதுவை அரசால் கடைபிடிக்கப்பட்டு வரும் இடஒதுக்கீட்டு கொள்கை அடிப்படையில் தகுதியான செவிலியர்களை தேர்வு செய்ய வேண்டுமென தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
இதற்கு முன்பாக இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை நிர்வாகம் தகுதியுள்ள செவிலியர்களை தேர்வு செய்ய வேண்டும். தற்போது விண்ணப்பித்த செவிலியர்களின் எண்ணிக்கை மற்றும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் விபரங்களை வெளியிட வேண்டும்.
மேலும், செவிலியர் பணிக்கான 226-இடங்களில் பொதுப்பிரிவு (Unreseved) 90- செவிலியர் பணிக்கான இடங்களுக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு (இ.டபிள்யூ.எஸ்) 22- செவிலியர் பணிக்கான இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (எம்.பி.சி) 40 - செவிலியர் பணிக்கான இடங்களும், இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி) 26 - செவிலியர் பணிக்கான இடங்களும், மிகவும் பின் தங்கிய வகுப்பு (இ.பி.சி) 4- செவிலியர் பணிக்கான இடங்களும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள் (பி.சி.எம்) 5 - செவிலியர் பணிக்கான இடங்களும்,
ஐ.ஜி.எம்.சி நிர்வாகம் தேர்தல் விதிமுறை
பட்டியல் இனத்தவர் (எஸ்சி) 35 - செவிலியர் பணிக்கான இடங்களும், பழங்குடியினர் (எஸ்டி) 2 - செவிலியர் பணிக்கான இடங்களும், பின் தங்கிய பழங்குடியினர் (பி.டி) 2 -செவிலியர் பணிக்கான இடங்களும், மாற்றுத்திறனாளிக்கு (பி.டபிள்யூ.டி) 10 - செவிலியர் பணிக்கான இடங்களும், ஆகையால் ஐ.ஜி.எம்.சி நிர்வாகம் தேர்தல் விதிமுறை மற்றும் நெறிமுறை வரும் ஜனவரி மாதம் 2026-இறுதிக்குள் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ள நிலையில் மேற்படி செவிலியர் பணிக்கான ஆணையை துரிதமாக செயல்பட்டு வெளியிட வேண்டும் என்பதை தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்




















