NLC Recruitment 2023: ரூ.2.80 லட்சம் வரை ஊதியம்.. என்.எல்.சியில் வேலை; விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்
NLC Recruitment 2023: என்.எல்.சி. நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதிகள் என்னென்ன என்பன குறித்து காணலாம்.
நெய்வேலி இந்தியா லிமெடெட் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள 'Executives’ பணி இடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள 294 பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே காணலாம்.
பணி விவரம்
- நிர்வாக பொறியாளர்
- துணை பொது மேலாளர்
- உதவி நிர்வாக மேலாளர்
- மேலாளர்
மொத்த பணியிடங்கள் - 294
கல்வித் தகுதி
மேற்கண்ட பணிகளுக்கு 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரிக்கல், கெமிக்கல், என்விரான்மென்டல் பொறியியல் ஆகிய துறைகளில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
புரொடக்சன் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த கல்வித்தகுதியான அந்தந்த பணிகேற்பு மாறுப்படும். மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும். https://www.nlcindia.in/new_website/careers/advt_04-2023.pdf
வயது வரம்பு விவரம்
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர் 52 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.. இந்த வயது வரம்பானது அந்தந்த பணிகளுக்கு ஏற்ப மாறுப்படும். இதனால் கூடுதல் விவரங்களை இந்த லிங் மூலம் அறிந்து கொள்ளுங்கள். https://www.nlcindia.in/new_website/careers/advt_04-2023.pdf
ஊதிய விவரம்:
இப்பணிகளுக்கு வருமானம் பணியின் அடிப்படையில் ரூ.70 000 முதல் ரூ. 2,80,000 வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை
இந்த பணிகளுக்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். பொறியியல் 50% மதிப்பெண் பெற்ற்கிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
- முதலில் |NLC Recruitment 2023 | https://web.nlcindia.in/rec032023/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- home page- ல் NLC Recruitment 2023 என்றதை கிளிக் செய்ய வேண்டும்
- புதிதாக தோன்றிய விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்.
- அடுத்ததாக பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- விண்ணப்பத்தை பூர்த்தி செய்தவுடன், விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியவர்கள் கட்டணத்தை செலுத்திவிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.
விண்ணப்பக் கட்டணம்
மேற்கண்ட பணிக்கு UR/EWS/OBC பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணமானது ரூ.854 இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், SC/ST/EX serviceman விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.354 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 03.08.2023
இந்த பணி அறிவிப்பு தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.nlcindia.in/new_website/careers/advt_04-2023.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.