மேலும் அறிய

Netflix: வீடியோ கேம் துறையில் அசத்தப்போகும் நெட்பிளிக்ஸ்.. இத்தனை பேருக்கு வேலையா? சூப்பர் அறிவிப்பு..

Netflix:நெட்ஃபிளிக்ஸ் சமீபத்தில்  “Into the Breach” மற்றும் “Before Your Eyes” என்ற இரண்டு மொபைல் கேம்களை வெளியிட்டன.

உலக அளவில் மிகவும் பிரபலமான ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ் இனி கேமிங் சேவைகளையும் (Cloud gaming) வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. 

சோனி பிளேஸ்டேசன்(Sony PlayStation ) புதிதாக சந்தையில் அறிமுகமாகியுள்ள ஆப்பிள் நிறுவனத்தின் ஆர்கேட் (Apple Arcade) மற்றும் அமேசான் லுனா (Amazon Luna) ஆகியவற்றை போல, நெட்ஃபிளிஸ் நிறுவனமும் கிளவுட் கேமிங் சேவைகள் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

நெட்ஃபிளிக்ஸ் தற்போது அனுபவம் உள்ள செக்யூரிட்டி ப்ராடக்ட் மேலாளர்( security product manager) பணிக்கு திறமையான நபர்களை தேடி வருகிறது. இவர்கள் கிளவுட் கேமிங்கில் உள்ள சவால்களை சமாளிப்பது குறித்து அறிந்திருக்க வேண்டும். மேலும், rendering engineer பணியிடங்களும் நிரப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

நெட்ஃபிளிக்ஸ் சமீபத்தில்  “Into the Breach” மற்றும் “Before Your Eyes” என்ற இரண்டு மொபைல் கேம்களை வெளியிட்டன. இதை ஒரு சதவீதத்திற்கும் குறைவான வாடிக்கையாளர்கள் விளையாடி வருவதாகவும், இந்தாண்டு இறுதிக்குள் புதிதாக 50 வீடியோ கேம்களை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

Apptopia நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வின்படிம் தினமும்  1.7 மில்லியன் பேர் வீடியோ கேம் ஆப்களை பயன்படுத்துவதாகவும், இதைவிட நெட்ஃபிளிக்ஸ் கேம்களுக்கு பயனாளர்கள் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பான ஸ்ரேஞ்சர் திங்க்ஸ் (Stranger Things) வெப் சீரிசின் அடிப்படையினாலான வீடியோ கேம் பெரும்பாலானோரால் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொபைல் கேமிங்கை விட, கிளவுட் வீடியோ கேமிங் சேவை பெரும் வரவேற்பை பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இளம்வயதினரால் அதிகளவு விரும்பப்படும் என்கின்றனர் கேமிங் நிபுணர்கள்.

பிளே ஸ்டேசனில் வீடியோ கேம்ஸ் விளையாடுவது யாருக்குதான் பிடிக்காது. அந்த சேவையை நெட்ஃபிளிக்ஸ் தொடங்க இருப்பது அதன் சந்தை மதிப்பை உயர்த்த வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நெட்ஃபிக்ஸ் உலக அளவில் உள்ள மற்ற ஸ்ட்ரீமிங் நிறுவனங்களை விட முன்னணியில் உள்ளது.  ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள சரிவை சரிசெய்ய, புதிய வாடிக்கையாளர்களை சிறந்த திட்டங்களுடன் கவர்ந்திழுப்பதன் மூலமும், சில வழக்கங்களை மாற்றியமைப்பதன் மூலமும்  இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து வெளியேற முடியும் என்று அந்நிறுவனம் நம்புகிறது. மேலும், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் நெட்ஃபிளிக்ஸ் திரைப்படங்கள், டி.வி. ஷோக்களுக்காக செலவிடும் தொகையும் குறைக்க இருப்பதாக அறிவித்திருந்தது. 

இந்நிலையில் எவ்வித ஆன்லைன் ஷோக்கள் வெளியிடாதபொழுது, தனது பயனர்களுக்கு வீடியோ கேம்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருக்கிறது. கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து வீடியோ கேம்களை அறிமுகம் செய்து வரும் நெட்ஃபிளிக்ஸ்,அதன் வாடிக்கையாளார்களுக்கு மட்டும் கிளவுட் கேமிங் சேவையை அறிமுக உள்ளது. விடீயோ கேம் விளையாட விரும்புபவர்கள் அதற்கென தனியாக ஆப்களை டவுன்லோடு செய்ய வேண்டி இருக்கும். 

மேலும் வாசிக்க..Virat Kohli: ஃபார்ம் பத்தி மீடியாவும், ரசிகர்களும் இப்படி பேசுவீங்களா? கோலிக்கு சப்போர்ட் செய்த வீரர்

மேலும் வாசிக்க- Asia Cup 2022: ஆசிய கோப்பையில் இந்திய தரப்பில் அசத்திய டாப் 5 வீரர்கள் யார் யார்? தெரியுமா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget