NCS Arakkonam Recruitment: இளங்கலை தேர்ச்சி போதும்; கடற்படை பள்ளியில் ஆசிரியர் பணி.. விண்ணப்பிப்பது எப்படி?
NCS Arakkonam Recruitment: அரகோணத்தில் உள்ள கடற்படை குழந்தைகள் பள்ளியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர், பட்டதாரி, முதுகலை பட்டாதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
அரக்கோணத்தில் உள்ள கடற்படை குழந்தைகள் பள்ளியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர், பட்டதாரி, முதுகலை பட்டாதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தேவையான கல்வி மற்றும் பிற தகுதிகள் என்னென்ன என்பன குறித்து காணலாம்.
பணி விவரம்:
TGT ஆசிரியர்
கல்வி மற்றும் பிற தகுதிகள்:
இதற்கு விண்ணப்பிக்க இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். பி.ஏ., அல்லது பி.எஸ்.சி. படித்திருக்க வேண்டும். 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
ஆங்கிலம், இந்தி, கணிதம், அறிவியல் ஆகிய பிரிவுகளில் படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்தப் பணிக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு பின்பற்றப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருக்கும் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூத்ஹி செய்ய வேண்டும்.
விண்ணப்ப படிவத்துடன் தேவையான சான்றிதழ்களில் ஆதாரங்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தினை மின்னஞ்சல் மூலம் அனுப்ப ncsarakkonam@yahoo.co.in - என்ற முகவரியில் காணலாம். இந்த வேலைவாய்ப்பிற்கு கடைசி நாள் வரை காத்திருக்காமல் குறிப்பிட்ட காலத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படுவது எப்படி?
இதற்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
https://www.ncsarakkonam.edu.in/ - என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.
விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்ய https://www.ncsarakkonam.edu.in/faculty-form.aspx - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.ncsarakkonam.edu.in/Admin/Uploading/News/50.pdf- என்ற அறிவிப்பை காணலாம்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி -
The Principal
Navy Children School
INS Rajali, Arakkonam - 631 006
Phone Number: 9488758004 (Time: 0900 hrs to 1500 hrs)
விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.06.2023
---
மதுரை வேலைவாய்ப்பு
மதுரையில் தனியார் இ-சேவை மையம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் மதுரையில் வருவாய் கிராமங்கள் தோறும் தனியார் இ-சேவை மையம் அமைக்க உரிமம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் http://www.tnesevai.tn.gov.in/ - என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
என்னென்ன தகுதிகள்:
- விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை வழங்கும் ப்ரீபெய்ட் இ-வாலட் மாதிரி (Prepaid ewallet model), ஆதார் பயோமெட்ரிக் உள்நுழைவு, போன்ற வழிகாட்டுதல்களைபூர்த்தி செய்ய வேண்டும்.
- விண்ணப்பதாரர்கள் 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதுடன், கணினி பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
- தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழி படிக்க, எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
- 100 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இசேவை மைய கட்டடத்தில் கணினி பிரிண்டர், எப்கேனர்,மற்றும் பயோமெட்ரிக் கருவிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 2 Mbps, அதிவேசு அலைவரிசையுடன் தொடர்ச்சியான, தடையற்ற இன்டர்நெட் இணைப்பு இருக்க வேண்டும்.
- தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் ஏற்றுக் கொள்ளப்பட்ட இடத்தில் இ-சேவை மையம் இருக்க வேண்டும்.
- தேர்வு செய்யப்படும் மாற்றுத்திறனாளி ஆப்ரேட்டர்களுக்கு ஐ.டி., எண் பற்றும் பயிற்சி அளிக்கப்பட்டு இ - சேவை மையம் அமைக்க உரியம் வழங்கப்படும்.
- தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிகளில் சுய வேலைவாய்ப்புக் கடன் பெறுவதற்கு பரிந்துரை செய்யப்படும்.
- மதுரை மாவட்டத்தில் படித்த கணினி பயிற்சி பெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் இணையதளத்தில் விண்ணப்பித்து இ-சேவை மையம் அமைத்து வருமானம் ஈட்டி பயன்பெறலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி- 30.06.2023