NIT Job: திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் குவிந்திருக்கும் பணிவாய்ப்புகள்.. விண்ணப்பிக்க இன்றே கடைசி!
NIT Job: திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணிகளில் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும். இன்றே கடைசி நாளாகும்.
பணி குறித்த கூடுதல் விவரங்கள்:
ஜூனியர் உதவியாளர் -6
சீனியர் உதவியாளர் -3
ஆய்வக உதவியாளர் -22
டெக்னீசியன் -10
உதவி டெக்னீசியன் 5
மொத்த பணியிடங்கள் - 46
கல்வித் தகுதி:
இந்தப் பணிக்கான கல்வித் தகுதியினை Recruitment Rules (2019) for Non-teaching staff in NITs notified vide
No.F.35-5/2018-TS.III of MHRD’s letters dated 20.02.2019 and 04.04.2019- என்பதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊதிய விவரம்:
ஜூனியர் உதவியாளர் - PB-1 [ரூ.5200- 20200] GP -of ரூ.2,000/-
சீனியர் உதவியாளர் - PB-1 [ரூ.5200- 20200] GP of ரூ.2,400/-
ஆய்வக உதவியாளர் - PB-1 [ரூ.5200- 20200] GP of ரூ.1,800/-
டெக்னீசியன் - PB-1[ரூ 5200- 20200] -GP of ரூ. 2,000/
உதவி டெக்னீசியன் - PB-1[ரூ. 5200- 20200] - GP of ரூ. 2,400/-
வயது வரம்பு:
வயது வரம்பில் அரசின் விதிகள் படி தளர்வு அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
https://recruitment.nitt.edu/GroupABC/ - என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியை பயன்படுத்தி விண்ணப்பிக்கவும்.
விண்ணப்ப கட்டணம்
பொதுப்பிரிவினர் ரூ.1000, பட்டியலின/ பழங்குடியின பிரிவினர், மகளிர், முன்னாள் அரசு பணியாளர் ஆகியோர் ரூ.500 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் தொடர்பாக உதவி பெற - recruit-techsupport@nitt.edu
தேர்வு செய்யப்படும் முறை:
இதற்கு நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்களுக்கு நேர்காணல் அழைப்பு விடுக்கப்படும்.
விண்ணப்பிக்கும் வழிமுறைகள்:
- முதலில் National Institute of Technology, Trichy (nitt.edu) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்.
- Notices / downlads என்பதில் https://recruitment.nitt.edu/GroupABC/- என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.
- புதிதாக தோன்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை தெளிவாக படித்து தெரிந்து கொள்ளவும்.
- பின் அதில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்
- விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டுள்ள சரியான தகவல்களை பூர்த்தி செய்யவும்
மின்னஞ்சல் முகவரி: gs@nitt.edu
அஞ்சல் முகவரி:
Dr. Swaminathan,
Proffessor (HAG), head of the department,
department of civil engineering,
National Institute of Technology,
Tiruchirappalli - 620015,
Tamil Nadu.
பணி குறித்தான அறிவிக்கை இருக்கும். அதனை கிளிக் செய்து பணி குறித்து விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும் https://recruitment.nitt.edu/GroupABC/advt/Group%20C-Technical.pdf -
டெக்னீசியன் பணியிடம் குறித்த முழு விவரத்திற்கு https://recruitment.nitt.edu/GroupABC/advt/Group%20C-Technical.pdf -என்ற லிங்கை க்ளிக் செய்து காணவும்.
முக்கியமான நாட்கள்:
விண்ணப்பிக்க கடைசி தேதி - 01.03.2023
ஆஃப்லைனின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைதி தேதி - 08.03.203