மேலும் அறிய

முடிவுக்கு வந்த தீப்பெட்டி ஆலைகளின் 12 நாள் வேலை நிறுத்தம் - அரசின் உறுதியை ஏற்று மீண்டும் உற்பத்தி தொடக்கம்

தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக சட்டமன்றத்தில் கவனம் ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்ட நிலையில், டிட்கோ மூலம் மூலப்பொருட்களை கொள்முதல் செய்வதாக தமிழக அரசு உறுதி அளித்திருந்தது

மூலப்பொருகள் விலையேற்றத்தினை கட்டுப்படுத்த வேண்டும், சீனாவில் இருந்து வரும் லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என்ற 2 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 6 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் 2530 தீப்பெட்டி ஆலைகள் மூடப்பட்டு இருந்த நிலையில் 12 நாள்கள் கழித்து இன்று முதல் தமிழகம் முழுவதும் அனைத்து தீப்பெட்டி ஆலைகளும் செயல்பட தொடங்கி உள்ளன.

முடிவுக்கு வந்த தீப்பெட்டி ஆலைகளின் 12 நாள் வேலை நிறுத்தம் - அரசின் உறுதியை ஏற்று மீண்டும் உற்பத்தி தொடக்கம்

தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருள்களான அட்டை, பேப்பர், பொட்டாசியம் குளோரைட், மெழுகு, சிவப்பு பாஸ்பரஸ் போன்றவற்றின் விலை 30 சதவீதம் முதல் 50 சதவீதம் உயர்த்தப்பட்டதால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையெடுத்து தீப்பெட்டி பண்டல்கள் விலையை தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் 300 ரூபாயில் இருந்து 350 ஆக உயர்த்த முடிவு செய்தனர். ஆனால் தீப்பெட்டி கொள்முதல் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

முடிவுக்கு வந்த தீப்பெட்டி ஆலைகளின் 12 நாள் வேலை நிறுத்தம் - அரசின் உறுதியை ஏற்று மீண்டும் உற்பத்தி தொடக்கம்

இதனால் மூலப்பொருகள் விலையேற்றத்தினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி, மானிய விலையில் சிட்கோ மூலமாக தீப்பெட்டி மூலப்பொருள்கள் விநியோகம் செய்ய வேண்டும், சீனாவில் இருந்து வரும் லைட்டர்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியறுத்தி தமிழகம் முழுவதும் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்தனர். இதையெடுத்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விருதுநகர் மாவட்டம், வேலூர் மாவட்டம் குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவிரிப்பட்டணம் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வந்த 2530 தீப்பெட்டி ஆலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 12 நாள்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தினால் சுமார் 250 கோடி ரூபாய் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டது. மேலும் 6 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

முடிவுக்கு வந்த தீப்பெட்டி ஆலைகளின் 12 நாள் வேலை நிறுத்தம் - அரசின் உறுதியை ஏற்று மீண்டும் உற்பத்தி தொடக்கம்

இதற்கிடையில் அனைத்து கட்சிகள் சார்பில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக சட்டமன்றத்தில் கவனம் ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் பிரச்சினை குறித்து முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ எடுத்துரைத்தார். இதையெடுத்து சிட்கோ மூலமாக முதற்கட்டமாக மெழுகு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் அறிவித்தார். மேலும் மூலப்பொருள்கள் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்நிலையில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தினை வாபஸ் இன்று முதல் தமிழகத்தில் அனைத்து ஆலைகள் செயல்பட தொடங்கியுள்ளன. தொழிலாளர்கள் வழக்கமான உற்சாகத்துடன் பணிகளை தொடங்கியுள்ளனர்.

முடிவுக்கு வந்த தீப்பெட்டி ஆலைகளின் 12 நாள் வேலை நிறுத்தம் - அரசின் உறுதியை ஏற்று மீண்டும் உற்பத்தி தொடக்கம்

இது குறித்து நேஷனல் சிறுதீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சேதுரத்தினம் கூறுகையில், தீப்பெட்டி மூலப்பொருள்கள் விலையை  கட்டுப்படுத்தவும், சிட்கோ மூலமாக வழங்க தமிழக அரசு உறுதியளித்துள்ளது. லைட்டர்களை தடை செய்ய மத்தியரசு மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் முருகன் உறுதியளித்துள்ளதாகவும், மத்திய, மாநில அரசுகள் தீப்பெட்டி தொழிலுக்கு தேவையான அனைத்தையும் செய்வதாக உறுதியளித்துள்ளதால் வேலை நிறுத்தப் போராட்டத்தினை கைவிட்டு பணிகளை தொடங்கியுள்ளதாக கூறினார்.

தலைப்பு செய்திகள்

விருதுநகரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ வேலைகள்!
விருதுநகரில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: 10,000+ வேலைகள்!
TNPSC வரலாற்றிலேயே இல்லாத கொடூரம்! 5,000 காலிப்பணியிடங்களை மறைப்பதா? - அன்புமணி அதிரடி கேள்வி!
TNPSC வரலாற்றிலேயே இல்லாத கொடூரம்! 5,000 காலிப்பணியிடங்களை மறைப்பதா? - அன்புமணி அதிரடி கேள்வி!
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
அரசு வேலை தேடுவோருக்கு நற்செய்தி! AAI-யில் 389 மேலாளர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்கள்!
அரசு வேலை தேடுவோருக்கு நற்செய்தி! AAI-யில் 389 மேலாளர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
Embed widget