UNOM :சென்னைப் பல்கலைக்கழகத்தில் வேலை காத்திருக்கு.. விண்ணப்பிக்க தவறாதீங்க! விவரம்!
சென்னைப் பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு அறிவிப்பு!
சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள காலியாக உள்ள பகுதி நேர Guest Faculty (Part Time) , மற்றும் முழு நேர Guest Faculty (Full Time) பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி விவரம்:
பகுதி நேர கெளரவ விரிவுரையாளர் (Guest Faculty (Part Time))
முழு நேர கெளரவ விரிவுரையாளார் (Guest Faculty (Full Time))
கல்வித் தகுதி:
பகுதி நேர கெளரவ விரிவுரையாளர் (Guest Faculty (Part Time)):
சமூக அறிவியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். Social Sciences (Preferably in Women's Studies). நெட் தேர்வில் (NET (Preferably in Women Studies)) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். ஆராய்ச்சி பணியில் முன் அனுபவம் இருப்பது சிறப்பு.
முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனுடன் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
முழு நேர கெளரவ விரிவுரையாளர்:

ஊதியம் விவரம்:
பகுதி நேர கெளரவ விரிவுரையாளர் (Guest Faculty (Part Time)) - ரூ.500 / ஒரு மணி நேரத்திற்கு- மாதம் ரூ.20000 ஊதியமாக வழங்கப்படுகிறது.
முழு நேர கெளரவ விரிவுரையாளார் (Guest Faculty (Full Time))- மாதம் ரூ.20000 ஊதியமாக வழங்கப்படுகிறது.
விண்ணப்ப கட்டணம்:
இதற்கு விண்ணப்பிக்க கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அடிப்படையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அறிவிப்பில் குறிப்பிடப்படுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 12.09.2022
அதிகாரப்பூர்வ இணையதள https://www.unom.ac.in/ கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.
முகவரி:
The Professor & Head I/C,
Department of Women Studies,
University of Madras,
Chepauk Campus,
Chennai – 600025
அறிவிப்பின் முழு விவரத்தை தெரிந்து கொள்ள https://www.unom.ac.in/webportal/uploads/appointments/guest_lecturer_womensstudies_20220905180628_22086.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
மேலும் வாசிக்க..
NEET UG 2022 Answer Key : நீட் தேர்வு இறுதி விடைக்குறிப்பு வெளியீடு: எப்படி சரிபார்ப்பது?
BAARC: பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள்.. கூடுதல் விவரம்
ONGC : மத்திய அரசு பொது நிறுவனம் ONGC-ல் காலிப்பணியிடங்கள்: உடனே அப்ளை பண்ணுங்க.. முழு விவரம் உள்ளே!