KV Walk in Interview: கேந்திரிய வித்யாலயா பள்ளியில் வேலை; நாளையே கடைசி - விவரம்!
KV Walk in Interview: மதுரையில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த முழு விவரத்தை காணலாம்.
மதுரையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ( kendra vidhyalaya sangathan) காலியாக உள்ள 6,970 TGT, PGT, PRT and non-teaching பணியிடங்களுக்கு தற்காலிகம் மற்றும் பகுதிநேர ஆசிரியர் பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தப் பணியிடங்ளுக்கு கடந்த 23 ஆம் தேதி முதல் நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது. நாளை (25.02.2024) நேர்முகத் தேர்வின் இறுதிநாள்.
பணி விவரம்
- Primary Teacher(PRT)
- Graduate Teacher(PGT)
- Trained Graduate Teachers(TGT)
- தமிழ் ஆசிரியர் (Tamil Teacher)
- Computer Instructor
- Sports and Games Coach
- Special Educator
- Educational Counsellor
- ஸ்டாஃப் நர்ஸ் (Staff Nurse)
கல்வித் தகுதி
பி.எட். படிப்பு முடித்திருக்க வேண்டும். (12th Pass + D.Ed/ JBT/ B.Ed + CTET)
கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்:
பணியாளர்கள், ராணுவத்தினர் ஆகியோரின் குழந்தைகளுக்காக கேந்திரிய வித்யாலயா பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. எனினும் காலி இடங்கள் இருந்தால், பொதுத் தரப்பினருக்கும் இடம் வழங்கப்படுகிறது.
நாடு முழுவதும் மொத்தம் 1,245 பள்ளிகளும், வெளிநாட்டில் 3 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும் உள்ளன. தமிழகத்தில் 59 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இதில் 14.35 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிகளில் பயிற்று மொழியாக ஆங்கிலமும் இந்தியும் உள்ளது. மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் செயல்படும் இந்த பள்ளிகளில், மிகவும் குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது.
மதுரையில் உள்ள கேந்திரிய வித்யா பள்ளியில் உள்ள வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க https://no1madurai.kvs.ac.in/sites/default/files/APPLICATION%20%20FORM%20%20FINAL%202024-25.pdf - என்ற லிங்க் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
ஊதிய விவரம்
- Primary Teacher(PRT) - ரூ.21,250
- Post Graduate Teacher(PGT) -ரூ.27,500
- Trained Graduate Teachers(TGT) - ரூ.26,250
- Tamil Teacher - ரூ.18,750
- Computer Instructor - ரூ.26,250
- Sports and Games Coach - ரூ.21,500
- Special Educator - ரூ.21,250
- Educational Counsellor- ரூ.26,250
- Staff Nurse - நாள்தோறும் ரூ.750
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்
PM SHRI KENDRIYA VIDYALAYA, No.1, NARIMEDU, MADURAI-625002, PHONE.0452-2531361
நேர்முகத் தேர்வு இறுதிநாள் - 25.2.2024
விண்ணப்பிக்கும் முறை: காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு https://no1madurai.kvs.ac.in -என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடம் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளவும்.
சி.பி.எஸ்.இ. விதிமுறைப்படி கல்வித்தகுதி பெற்றவர்கள் மட்டும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கல்வித் தகுதி,பணி அனுபவம் போன்ற கூடுதல் விவரங்களுக்குhttps://no1madurai.kvs.ac.in - என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை படித்து தெரிந்துகொள்ளவும்.