விருதுநகரில் வேலைவாய்ப்பு முகாம்: 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை.. உடனே விண்ணப்பியுங்கள்!
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது.

சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 31.10.2025 அன்று மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும், மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக வரும் 31.10.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 03.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், விருதுநகர் சூலக்கரையில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது. இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் TVS SUNDARAM BRAKE LININGS LIMITED, ANAAMALAIS TOYOTA, ELEVATE DIGI TECHNOLOGIES, RANBA CASTINGS, ADISON INTERNATIONAL TRADE CO போன்ற 20-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8-ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு I.T.I. டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளார்கள்.
இச்சேவையானது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும்.
இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலை நாடுநர்கள் 31.10.2025 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.
எவ்வாறு தொடர்பு கொள்ளலாம்?
இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை நேரிலோ அல்லது vnrjobfair@gmail.com





















