Job fair: இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு; தகுதி, சம்பளம் தொடர்பான விவரம் இதோ
இப்பதவிகளுக்கு சம்பளமாக மாதம் ரூ 30 ஆயிரம் மற்றும் பிற சலுகைகளும் வழங்கப்படும்.
(Tiruvannamalai News திருவண்ணாமலை) இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு பதவிகளுக்கு சேர்வதற்கான வேலைவாய்ப்பு, இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு பதவிகளுக்கு சேர்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பதவிகளுக்கு ஜனவரி 17 2024 முதல் பிப்ரவரி 06 2024 வரையில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது
வயது வரம்பு;
இந்திய விமானப்படையில் அக்னிவீர்வாயு பதவிகளுக்கு சேர்வதற்கான வயது வரம்பு ஜனவரி 02 2004 முதல் ஜுலை 02 2007 வரையிலான காலத்தில் பிறந்தவராகவும் 21 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி;
கல்வித் தகுதியாக Central > State > UT உறுப்பினராகப் பட்டியலிடப்பட்ட கல்வி வாரியத்தில் இருந்து கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்துடன் இடைநிலை 10,12 சமமான தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ்) மூன்றாண்டு டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது Instrumentation Technology / Information Technology அரசாங்க அங்கீகாரம் பெற்ற பாலிடெக்னிக் நிறுவனத்தில் இருந்து 50 சதவீதம் மதிப்பெண்களுடன் மொத்தம் 50 சதவீதம் மதிப்பெண்கள் மற்றும் டிப்ளமோ படிப்பில் ஆங்கிலத்தில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் (அல்லது டிப்ளமோ படிப்பில் ஆங்கிலம் ஒரு பாடமாக இல்லை என்றால் இடைநிலை மெட்ரிகுலேஷன்) பெற்றிருக்க வேண்டும். அறிவியல் பாடங்கள் தவிர மற்றவையாக சிஓபிஎஸ்இ உறுப்பினராக பட்டியலிடப்பட்ட மத்திய, மாநில கல்வி வாரியங்களால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு பாடத்திலும் இடைநிலை, 10, 12 சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மொத்தத்தில் குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் மற்றும் ஆங்கிலத்தில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
உடற் தகுதி;
உடற் தகுதியாக குறைந்தபட்ச உயரம் 152.5 செ.மீ ஆண்களும் 152 செ.மீ பெண்களும் பெற்றிருக்க வேண்டும்.
மாதம் சம்பளம் ;
இப்பதவிகளுக்கு சம்பளமாக மாதம் ரூ 30 ஆயிரம் மற்றும் பிற சலுகைகளும் வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட அளவு ஊதிய உயர்வும் வழங்கப்படும். தேர்வுக் கட்டணமாக ரூ550 மற்றும் புளுவு வரியுடன் ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் போது விண்ணப்பதாரர்கள் செலுத்த வேண்டும். ஆர்வமும், விருப்பமும் உள்ளவர்கள் http://agnipathvayu.cdac.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ள விளம்பர அறிவிப்பில் தேர்வு முறை தேர்வுக்கு வேண்டிய ஆவணங்கள் உட்பட அனைத்து விவரங்களையும் அறிந்து தகுதியுடையவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். மேலும் விபரங்களுக்கு 04175-233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இத்தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.