மேலும் அறிய

IBPS Clerk Prelims Admit Card: ஐபிபிஎஸ் தேர்வர்கள் கவனத்துக்கு.... க்ளார்க் பணியிடங்களுக்கான கால் லெட்டர் வெளியீடு

இன்று (ஆக.17) கால் லெட்டர் வெளியாகியுள்ள நிலையில், ஆகஸ்ட் 28, செப்டெம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் முதன்மைத் தேர்வு நடைபெற உள்ளது.

Institute of Banking Personnel Selection என்றழைக்கப்படும் வங்கிப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் க்ளார்க் முதல்நிலைத் தேர்வுகளுக்கான (Prelims Clerk) கால் லெட்டர் (அனுமதி சீட்டு) வெளியாகியுள்ளது.

விண்ணப்பதாரர்கள் இவற்றை அதிகாரப்பூர்வ இணையதளமான ibps.in தளத்திலிருந்து சரிபார்த்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

IBPS கிளார்க் கால் லெட்டரை பதிவிறக்கம் செய்யும் முறை

  • IBPS இன் அதிகாரப்பூர்வ இணையதளமான ibps.in செல்லவும்.
  • அதன் முகப்புப் பக்கத்தில் இடது பக்கத்தில் உள்ள CRP Clerical Cadre இணைப்பைக் கிளிக் செய்யவும், ஒரு புதிய உள்நுழைவு பக்கம் திறக்கப்படும்
  • அதில் CRP Clerical Cadre XII எனும் இணைப்பை க்ளிக் செய்யவும்
  • தொடர்ந்து வரும் பக்கத்தில் Download online Preliminary call letter எனும் இணைப்பை க்ளி செய்யவும்
  • தொடர்ந்து பதிவு எண், பிறந்த் தேதியைப் பதிவிட்டு கால் லெட்டரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • 2022ஆம் ஆண்டுக்கான க்ளார்க் பணிகளுக்கான விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்பு கடந்த ஜூன் 29ஆம் தேதி வெளியானது. 

ஜூலை 1ஆம் தேதி முதல்  ibps.in இணையதளத்தில் 'Common Recruitment Process' (CRP Clerk XII) என்ற பகுதியில் க்ளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது. விண்ணப்பங்கள் கடந்த ஜூலை 21ஆம் தேதி வரை பெறப்பட்ட நிலையில், தற்போது கால் லெட்டர் வெளியாகி உள்ளது.

வழக்கமாக வங்கிப் பணியாளர் தேர்வாணையத்தின் க்ளார்க் பணியிடங்களுக்கான தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றன. முதல்நிலைத் தேர்வு, மெயின்ஸ் தேர்வு என இவை பிரிக்கப்பட்டுள்ளன.

ஆண்டு தோறும் ஜூலை மாதம் இந்த விண்ணப்பம் தொடர்பான முழு விவரங்களும் வங்கிப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும். இதில் தகுதி விவரம், எப்படி விண்ணப்பிப்பது முதலான தகவல்கள் இடம்பெற்றிருக்கும். 

முன்னதாக கால் லெட்டர் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டது, அதன்படி இன்று (ஆக.17) கால் லெட்டர் வெளியாகியுள்ள நிலையில், ஆகஸ்ட் 28, செப்டெம்பர் 3, 4 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெற உள்ளது.

முக்கியமான தேதிகள்

முதல்நிலைத் தேர்வு முடிவுகள்: செப்டம்பர்/அக்டோபர் 2022
மெயின்ஸ் தேர்வுக்கான கால் லெட்டர் வெளியீடு: அக்டோபர் 2022
மெயின்ஸ் தேர்வு: அக்டோபர் 2022
தேர்வு முடிவுகள் - ஏப்ரல் 2023

கடந்த ஆண்டு வங்கி பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக நாடு முழுவதும் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, செண்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி, யுகோ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி, பஞ்சாப் & சிந்த் வங்கி, பேங்க் ஆஃப் மகாராஷ்ட்ரா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய 11 அரசு வங்கிகளில் சுமார் 7855 பணியிடங்கள் நிரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
Embed widget