மேலும் அறிய

முன்னாள் ராணுவ வீரர்களா நீங்கள்..? அருமையான வேலை வாய்ப்பு அறிவிப்பு உங்களுக்காக!!!

காவல்துறைக்காக வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் திறன் கொண்ட முன்னாள் ராணுவ வீரரர்கள், முன்னாள் துணை ராணுவப்படை வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் குழுவில் 59 காலிப்பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் என்ற முழு விபரம் இதோ!!!

தமிழ்நாடு காவல்துறைக்காக வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்கச் செய்யும் திறன் கொண்ட முன்னாள் ராணுவ வீரரர்கள், முன்னாள் துணை ராணுவப்படை வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாடு காவல்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு காவல்துறையின் வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்க செய்தல் பிரிவுகளில் உள்ள ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமை காவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு அக்டோபர் இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 59 காலிப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

ஆய்வாளர் (முன்னாள் சுபேதார்/ சுபேதார் மேஜர்)-2
உதவி ஆய்வாளர் (முன்னாள் நாயிப் சுபேதார்)-14
தலைமை காவலர் (முன்னாள் ஹவில்தார்/ நாயக்)-43  என மொத்தம் 59 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமை காவலர் ஆகிய பதவிகளுகு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 01.07.2025 தேதியின்படி, 50 வயதிற்கு கீழ் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் பிரிவிற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான தேர்ச்சியை பெற்றிருக்க வேண்டும். மேலும், CME, புனே அல்லது NSG அல்லது BCASஆல் நடத்தப்படும் 6 வார BDD படிப்பில் குறைந்தபட்சம் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

இவை மட்டுமின்றி, ராணுவம் அல்லது துணை ராணுவப் படைகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணி அனுபவம் மற்றும் இந்திய ராணுவத்தின் 261 அல்லது 262 CED பிரிவு அல்லது CME இன் EDD பிரிவு அல்லது NSG இன் BD பிரிவு அல்லது தேசிய வெடிகுண்டு தரவு மையம் - NBDC அல்லது விமான நிலையங்களில் BD பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் நல்ல திறன் மற்றும் நடைமுறை அனுபவம் மற்றும் களப் பொறியியல் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் BDD-யை பற்றி பயிற்சி அளிக்கும் திறன் மற்றும் மருத்துவ தகுதி பெற்றிருக்க வேண்டும்.

ஆய்வாளர் பதவிக்கு ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரை சம்பளம் வழங்கப்படும். உதவி ஆய்வாளர் பதவிக்கு ரூ.36,900 முதல் ரூ.1,16,600 வரை சம்பளம் வழங்கப்படும். தலைமை காவலர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.20,600 முதல் ரூ.65,500 வரை சம்பளம் வழங்கப்படும். 

வெடிகுண்டு நிபுணர்களுக்கான பணியிடங்களுக்கு தகுதியுள்ளவர்களின் விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, எழுத்து மற்றும் நடைமுறை தேர்வுகள் ஆகியவற்றுக்கான அழைப்பு விடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு நிபுணர்கள் பதவிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள் தங்களில் சுயவிவரங்கள் மற்றும் கல்வி சான்றிதழ்கள், டிஸ்சார்ஜ் புத்தகத்தின் தேவையான பக்கங்கள், ஓய்வூதிய ஆணை, BDD தொடர்பான படிப்பு/ அனுபவச் சான்றிதழ்கள் ஆகியவற்றின் நகல்களுடன் கூடுதல் காவல்துறை இயக்குநருக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் தபால் மூலம் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: கூடுதல் காவல்துறை இயக்குநர், செயலாக்கம், மருதம், எண். 17, போட் கிளப் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 600 028.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2025. தேர்வு நடைமுறை பின்னர் அறிவிக்கப்படும். சுய விவரங்களுடன் அடங்கிய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்னை அலுவலகத்தை அக்டோபர் இறுதிக்குள் சென்றடைய வேண்டும். இந்த பணி வாய்ப்பில் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பின்பற்றப்படும்.

தலைப்பு செய்திகள்

டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
டிப்ளமோ மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களா? BPCL-ல் உடனே விண்ணப்பியுங்கள்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
செவிலியர் பணியிடங்கள் ஒழிப்பு: மருத்துவ சேவையில் தமிழக அரசு செய்யும் அநீதி- அன்புமணி கடும் கண்டனம்
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
காஞ்சிபுரத்தில் காத்திருக்கும் அரசு வேலை: ஆட்சியர் தி.சினேகா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
Embed widget