மேலும் அறிய

Job Alert: வரும் 31-ம் தேதி கடைசி நாள்; இந்த வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்க மறந்துடாதீங்க: முழு விவரம்?

Job Alert: ஜூலை 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டிய அரசு வேலைவாய்ப்புகள் பற்றிய முழு விவரத்தை இங்கே காணலாம்.

வேலை தேடுவோர்களின் கவனத்திற்கு.. வரும்திங்கள் கிழமைக்குள் (ஜூலை 31-ம் தேதி) விண்ணப்பிக்க வேண்டிய வேலைவாய்ப்பு குறித்த முழு விவரங்களை இக்கட்டுரையில் காணலாம். விண்ணப்பிக்க மறந்துடாதீங்க.

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை  மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ( Medical Service Recruitment Board - MRB) அறிவிப்பினை வெளியிடப்பட்டிருந்தது.

தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய  பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் இந்த மாதம் இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் கடைசி நேரம்வரை காத்திருக்காமல் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பணி விவரம்:
 
Health Inspector Grade-II

மொத்த பணியிடங்கள் - 1,066

கல்வித் தகுதி :

இதற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் Health Worker (Male) course / Health
Inspector/ Sanitary Inspector சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10+2 என்ற வகையில் பள்ளிக் கல்வி பயின்றிருக்க வேண்டும். 
ஊதிய விவரம்: 

இந்தப் பணியிடத்திற்கு  ரூ. 19,500 முதல் ரூ.62,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.  (Pay Matrix Level-11)

விண்ணப்பிக்கும் முறை :

இதற்கு விண்ணப்பிக்க https://mrbonline.in/ - என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.07.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.mrb.tn.gov.in/pdf/2023/HI_Gr2_notification_110723.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 

*******

EMRS Recruitment 2023

பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகலைவா  மாதிரி உறைவிட பள்ளிகளில் ((Eklavya Model Residential Schools) காலியாக உள்ள பள்ளி முதல்வர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர், கணக்கர், இளநிலை உதவியாளர் (தலைமையகம்) உள்ளிட்ட பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிட விவரம்:

  • பள்ளி முதல்வர் -303 
  • முதுநிலை பட்டதாரி ஆசிரியர் - 2266 
  • கணக்கர் -361 
  • இளநிலை உதவியாளர் (தலைமையகம்)- 759 
  • ஆய்வக உதவியாளர்- 373 

விண்ணப்பிப்பது எப்படி?

www.emrs.tribal.gov.in-என்ற இணையதள பக்கத்தில் மட்டுமே விண்ணப்பங்கள் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி -31.07.2023

 

UPSC Recruitment 2023

மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கான காலிப் பணியிடங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு போட்டித் தேர்வுகளின் மூலம் நிரப்பப்படுகின்றன. தற்போது மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (UPSC – Union Public Service Commission)  மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள  பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பின்படி மொத்தம் 261 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலியாக உள்ள Air Worthiness Officer, Livestock Officer உள்ளிட்ட பல்வேறு  பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்படுவர் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள அலுவலங்களில் பணியமர்த்தப்படுவர். மத்திய ஆயுஷ் அமைச்சகம், விமான போக்குவரத்து துறை உள்ளிட்ட துறைகளில் உள்ள பணியிடங்கள் இந்த வேலைவாய்ப்பு மூலம் நிரப்பப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:
 
இதற்கு யு.பி.எஸ்.சி..-இன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.25 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
 
ஆன்லைனில் விண்ணப்பிக்க https://upsconline.nic.in/ora/VacancyNoticePub.php - என்ற லிங்க் மூலம் விண்ணப்பிக்கலாம்.
 
https://upsconline.nic.in/ora/oraauth/candidate/download_ad.php?id=MzQ5O2A7IMDADICAXCZC6SYHNSIQAKVGNLIC31XKAWXLCQKFJ5XA9P என்ற இணைப்பை க்ளிக் செய்து கூடுதல் விவரங்களை காணலாம்.
 
விண்ணப்பிக்க கடைசி தேதி -31.07.2023
 
*******
NPCIL Apprentice Recruitment:
 
மத்திய அமைச்சக்த்தின் கீழ் செயல்பட்டு வரும் கூடங்குளம் அணு சக்தி கார்ப்ரேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு (டிரேடு அப்ரண்டிஸ்கள்) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

விண்ணப்பிப்பது எப்படி?

www.npcil.nic.in - என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 

தேவையான சான்றிதழ் உடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி -31.07.2023

இது தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய https://www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/Advt_30062023_01.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

*******

CSIR Karaikudi Recruitment:

மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (Central Electrochemical Research Institute – CECRI) காலியாக உள்ள விஞ்ஞானி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பிற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
 
பணி விவரம்

விஞ்ஞானி 

பணியிடம் - காரைக்குடி

விண்ணப்பிப்பத்து எப்படி?

https://www.cecri.res.in. - என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணபிக்க கடைசி தேதி - 31.07.2023

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://scitarecruit.cecri.res.in/Advt/Advt_02_2023.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

********

மாவட்ட நீதிபதி வேலைவாய்ப்பு

மாவட்ட நீதிபதி பதவிக்கான அறிவிப்பை சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பணி விவரம்:

மாவட்ட நீதிபதி (Entry Level)

மொத்த பணியிடங்கள் - 50

விண்ணப்பிப்பது எப்படி?

இதற்கு விண்ணப்பிக்க  www.tn.gov.in  அல்லது https://www.mhc.tn.gov.in - என்ற இணைப்பை க்ளிக் செய்து தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி - 31.07.2023


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

TNPSC வரலாற்றிலேயே இல்லாத கொடூரம்! 5,000 காலிப்பணியிடங்களை மறைப்பதா? - அன்புமணி அதிரடி கேள்வி!
TNPSC வரலாற்றிலேயே இல்லாத கொடூரம்! 5,000 காலிப்பணியிடங்களை மறைப்பதா? - அன்புமணி அதிரடி கேள்வி!
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
அரசு வேலை தேடுவோருக்கு நற்செய்தி! AAI-யில் 389 மேலாளர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்கள்!
அரசு வேலை தேடுவோருக்கு நற்செய்தி! AAI-யில் 389 மேலாளர், ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்கள்!
சென்னை ICF-ல் 1010 அப்ரெண்டீஸ் பயிற்சி! 10, 12, ITI படித்தவர்களுக்கு பொன்னான வாய்ப்பு!மிஸ் பண்ணிடாதீங்க.
சென்னை ICF-ல் 1010 அப்ரெண்டீஸ் பயிற்சி! 10, 12, ITI படித்தவர்களுக்கு பொன்னான வாய்ப்பு!மிஸ் பண்ணிடாதீங்க.

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget